– Advertisement –
காலையில் எழுந்து என்னடா செய்வது? என்று யோசிக்காமல் இருக்க இட்லிக்கு மாவு ஆட்டி ஆட்டி பாத்திரம் நிறைய வைத்துக் கொள்வோம். ஒரு வாரத்துக்கு பிரச்சினை இருக்காது என்று நிம்மதியாக இருக்கும். இந்த இட்லி மாவு அரைப்பதற்கு காசு கொடுத்து அரிசி வாங்குபவர்கள் தான் நம்மில் ஏராளம். ஆனால் ரேஷனில் கொடுக்கும் அரிசியிலேயே சூப்பரான பஞ்சு போல இட்லி எப்படி செய்வது? கிரைண்டர் கூட தேவையில்லை மிக்ஸிலேயே அரைப்பது எப்படி? என்னும் சமையல் குறிப்பு ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.
ரேஷன் அரிசியில் இந்த ரேஷியோ படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க இட்லி பஞ்சு போல நிச்சயமாக வரும். நான்கு பங்கு புழுங்கல் அரிசியை நன்கு புடைத்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல ஒரு பங்கு பச்சரிசியை புடைத்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு ஆறேழு முறை தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ளுங்கள். அலசி எடுத்த அரிசியில் நல்ல தண்ணீர் ஊற்றி அப்படியே ஊற போடுங்கள்.
– Advertisement –
பின்னர் அதே அளவின்படி ஒன்னேகால் பங்கிற்கு முழு வெள்ளை உளுத்தம் பருப்பை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேர்த்து நன்கு தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் சுத்தமான தண்ணீர் ஊற்றி உளுந்தை மட்டும் ஃப்ரிட்ஜில் ஊற வைத்து விடுங்கள்.
காலையில் சமையல் வேலை எல்லாம் செய்துவிட்டு இது போல அலசி ஊற போட்டு விட்டால், மாலை நேரத்தில் அரைப்பதற்கு வசதியாக இருக்கும். நன்கு ஊறிய பிறகு மாலை வேளையில் பெரிய மிஸ்ஸர் ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் அரிசியை மட்டும் மூன்று பாதியாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக போட்டு ரொம்பவும் நைசாக இல்லாமல் கொஞ்சம் போல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
பிறகு பிரிட்ஜில் இருந்து அப்படியே எடுத்து உளுந்தை ஜாரில் சேர்த்து ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து தெளித்து பந்து போல பொங்க ஆட்டி எடுக்க வேண்டும். உளுந்து போடும் பொழுது மிக்ஸி சூடு ஆவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் ஃப்ரிட்ஜில் வைத்தால் நல்லது. சிலர் ஐஸ் கட்டிகளை போட்டு அரைப்பார்கள், ஐஸ் கட்டி போடும் பொழுது தண்ணீர் அதிகம் சேர்வதற்கு வாய்ப்பு உண்டு, எனவே இது போல் செய்வது சுலபமானது.
இதையும் படிக்கலாமே:உங்கள் கஷ்டத்திற்கு கருட புராணம் கூறும் காரணம்
அரைத்து எடுத்த உளுந்த மாவை அரிசி மாவில் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கைகளால் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இரவு முழுவதும் புளிக்க விட்டு காலையில் அப்படியே லேசாக கலந்து இட்லி அவித்து பாருங்கள், பஞ்சு போல மெத்தென்ற மிருதுவான இட்லி, குஷ்பூ இட்லி போல புசு புசுன்னு சூப்பராக இருக்கும். நீண்ட நேரம் ஆனாலும் கல்லு போல ஆகாது, அப்படியே இருக்கும். நீங்களும் இதே முறையில் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் இனி ரேஷன் அரிசியில் இட்லி மாவு அரைப்பது சுலபமாக இருக்கும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam