நம்முடைய சமுதாயத்தில் சைவத்தை சாப்பிடுபவர்கள் அசைவத்தை சாப்பிடுபவர்கள் என்று இரண்டு பிரிவினர் இருக்கிறார்கள். அசைவத்தை சாப்பிடுபவர்கள் அசைவத்தை சாப்பிடுவதோடு சேர்த்து சைவத்தையும் சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் சைவத்தை சாப்பிடுபவர்கள் அசைவத்தை விரும்ப மாட்டார்கள், இருப்பினும் அசைவ சுவையை விரும்புவார்கள். அந்த அசைவ சுவையில் சைவ பிரியர்கள் சாப்பிடக்கூடிய கோலா உருண்டையைப் போலவே சைவத்திலும் செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள். வாழைக்காயை வைத்து மிகவும் எளிமையான முறையில் சுவையான கோலா உருண்டை செய்ய முடியும். அந்த வாழைக்காய் கோலா உருண்டையை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.தேவையான பொருட்கள் – Advertisement -வாழைக்காய் – 2வெங்காயம் – ஒன்றுபூண்டு – 8 பற்கள்இஞ்சி – ஒரு இன்ச்பச்சை மிளகாய் – 3காய்ந்த மிளகாய் – 3கருவேப்பிலை – 2 கொத்துசோம்பு – 1 1/2 டீஸ்பூன்துருவிய தேங்காய் – ஒரு கப்பொட்டுக்கடலை – ஒரு கப்உப்பு – தேவையான அளவுமஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவுஎண்ணெய் பொரிப்பதற்கு – தேவையான அளவுசெய்முறை – Advertisement – முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு வாழைக்காயை தோலுடன் அதன் காம்பையும் தூர்ப்பகுதியையும் மட்டும் நீக்கிவிட்டு குக்கருக்குள் வைத்து கால் ஸ்பூன் அளவிற்கு மட்டும் உப்பை சேர்த்து அது மூழ்கும் அளவு தண்ணீரை ஊற்றி குக்கர் மூடியை மூடி அடுப்பில் வைத்து விட வேண்டும். குக்கர் நான்கு விசில் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்துக் கொள்ளுங்கள். விசில் நீங்கியதும் குக்கரை திறந்து வாழைக்காயை எடுத்து நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.வாழைக்காய் ஆறியதும் அதன் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கக்கூடிய வாழைக்காயை நன்றாக மசித்து கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒன்று இரண்டாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, சோம்பு,, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் போன்றவற்றைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும். – Advertisement -தேங்காயும் நன்றாக வதங்கியதும் கொத்தமல்லியையும் தூவி ஒரு முறை நன்றாக கலந்து விட்டு ஆற வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக ஆரிய பிறகு இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதை நாம் ஏற்கனவே மசித்து வைத்திருக்கும் வாழைக்காய் உடன் சேர்த்து நன்றாக பிணைய வேண்டும். நன்றாக பிணைந்த பிறகு இதை கோலா உருண்டை அளவிற்கு உருட்டி தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் கோலா உருண்டையை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து நாம் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை எண்ணெயில் சேர்க்க வேண்டும். உருண்டைகள் நன்றாக பொன்னிறமாக சிவந்த பிறகு அதை எடுத்து தட்டில் வைத்து விடலாம். மிகவும் சுவையான எளிமையான அருமையான வாழைக்காய் கோலா உருண்டை தயாராகி விட்டது.இதையும் படிக்கலாமே: பாதாம் பிசின் லட்டு செய்முறைசைவமோ அசைவமோ உடலுக்கு தேவையான சத்து மிகுந்த உணவு பொருட்களை அன்றாடம் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு வாழைக்காயை வைத்து இப்படி புதுவிதத்தில் வாழைக்காய் கோலா உருண்டை செய்து பார்ப்போம்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam