
– Advertisement –
இன்றைய காலத்தில் பள்ளி கல்லூரிக்கு செல்லக்கூடியவர்களாக இருந்தாலும் சரி வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி தனியாக குழம்பு காய் என்று எடுத்துச் செல்லும் வழக்கம் இருப்பது கிடையாது. அதற்கு பதிலாக கலவை சாதத்தை அதிக அளவில் விரும்பி சாப்பிடுகிறார்கள். அப்படி பார்க்கும் பொழுது நாம் அடிக்கடி செய்யக்கூடியதாக திகழ்வது எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம் போன்றவை தான். இதை மட்டுமே செய்து தராமல் சற்று வித்தியாசமாக அதேசமயம் அதிக அளவில் புரதச்சத்து நிறைந்ததாகவும் திகழக்கூடிய வாழைக்காய் பொடி சாதத்தை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
வாழைக்காய் – 2சாதம் – ஒரு கப்எண்ணெய் – 3 ஸ்பூன்துவரம்பருப்பு – 5 டேபிள்ஸ்பூன்உளுந்தம் பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 10கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவுபெருங்காயத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்நெய் – 2 ஸ்பூன்உப்பு – தேவையான அளவுகடுகு – 1/2 ஸ்பூன்
– Advertisement –
செய்முறை
முதலில் வாழைக்காயை தோலுடன் அரைவேக்காடாக வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பை போட்டு நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். எண்ணெயிலிருந்து வறுத்த அந்த பருப்பை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கக்கூடிய எண்ணெயில் காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலையை போட்டு அது இரண்டும் நன்றாக பொரிந்த பிறகு அதையும் எண்ணெயிலிருந்து வடிகட்டி வறுத்து வைத்த பருப்புடன் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது நாம் வேக வைத்திருந்த வாழைக்காயை எடுத்து அதன் மேல் எண்ணையை தடவி அடுப்பில் நன்றாக சுட்டு எடுக்க வேண்டும். அனைத்து பக்கமும் நன்றாக கருகிய பிறகு அதை ஆற வைத்துக் கொள்ளுங்கள். அது ஆரிய பிறகு அதன் தோலை நீக்கி ஒரு கிண்ணத்தில் உதிர்த்து விட்டுக் கொள்ளுங்கள். இப்பொழுது மிக்ஸி ஜாரை எடுத்து நாம் வறுத்து வைத்திருக்கும் பருப்பு காய்ந்த மிளகாய் போன்றவற்றை போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
அரைத்த இந்த பொடியுடன் உதிர்த்து வைத்திருக்கும் வாழைக்காயும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அரைத்த இந்த பொடியை ஒரு பாத்திரத்தில் மாற்றி நன்றாக உதிர்த்துவிட்டுக் கொள்ளுங்கள். நாம் ஏற்கனவே பருப்பு போட்டு வறுத்த எண்ணெய் மீதம் இருக்கும் அல்லவா? அந்த எண்ணெய் அனைத்தையும் ஊற்றி நன்றாக கைகளினாலேயே கலந்து உதிர்த்து விட வேண்டும். இந்த நேரத்தில் பொடிக்கு தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூளையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பொடி தயாராகிவிட்டது.
இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நெய்யை ஊற்றிக் கொள்ள வேண்டும். நெய் உருகியதும் அதில் கடுகு மற்றும் நாலைந்து கருவேப்பிலையை சேர்த்துக் கொள்ளலாம். விருப்பம் இருப்பவர்கள் இந்த நேரத்தில் முந்திரி பருப்பையும் சேர்த்துக் கொள்ளலாம். இன்னும் சற்று சுவையாக இருக்கும். கடுகு நன்றாக வெடித்த பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் பொடியை அதில் போட்டு நன்றாக கலந்து விட வேண்டும்.
– Advertisement –
இப்பொழுது இது தொக்கு பதத்திற்கு வந்திருக்கும். இந்த சமயத்தில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் சாதத்தை அதில் போட்டு நன்றாக கலந்து விட வேண்டும். சாதம் அனைத்தும் அந்த பொடியுடன் கலந்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம். மிகவும் சுவையான வாழைக்காய் பொடி சாதம் தயாராகிவிட்டது. இதற்கு நாம் அப்பளத்தை மட்டும் தொட்டுக் கொடுத்தால் போதும் மிகவும் அருமையாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே:கோதுமை அடை தோசை ரெசிபி
எப்பொழுதும் ஒரே மாதிரியே கலவை சாதங்களை செய்து தருவதற்கு பதிலாக இந்த முறையில் சற்று வித்தியாசமாக வாழைக்காயை வைத்து செய்து கொடுத்துப் பாருங்கள். அனைவரும் அசந்து போவார்கள்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam