வாழைப்பழம் பன்னீர் வைச்சு சுவையான இந்த ஸ்நாக்ஸை இன்னைக்கே செய்ங்க

வாழைப்பழம் பன்னீர் வைச்சு சுவையான இந்த ஸ்நாக்ஸை இன்னைக்கே செய்ங்க

Qries

– Advertisement –

குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மாலை நேரத்தில் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட்டு பழக்கம் ஆகிவிட்டது. அதை கடைகளில் வாங்கி சாப்பிடும் போது உடலுக்கு ஆரோக்கிய கேடு வருவதோடு பணமும் அதிக அளவில் செலவாகும். வீட்டில் ஏதாவது சுலபமாக செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வது என்று ஒரே குழப்பமாக இருக்கும். இந்த ஸ்நாக்ஸ் ரெசிபி நீங்க தெரிஞ்சு வச்சுக்கிட்டா நினைக்கும் போதெல்லாம் சட்டுனு செய்யலாம் ரொம்ப சுவையாக இருக்கும். அந்த ஸ்நாக்ஸ் எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாமா?.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 4கோதுமை மாவு – 11/2 கப்பன்னீர் – 1 கப் துருவியதுஉப்பு – 1 பின்ச்ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன்வெல்லம் – 3/4 கப்எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு
– Advertisement –

செய்முறை
இந்த ஸ்நாக்ஸ் செய்ய முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தி கொள்ளுங்கள். அதன் பிறகு வாழைப்பழத்தை இரண்டாக நறுக்கி எண்ணெயில் சேர்த்து ஒரு நிமிடத்திற்குள் பொறித்து எடுத்து விடுங்கள். இப்படி வாழைப்பழத்தை பொரித்து எடுத்து செய்யும் பொழுது ஸ்நாக்ஸ் ரொம்ப சுவையாக இருக்கும்.இப்பொழுது ஒரு பவுலில் பொரித்தெடுத்த வாழைப்பழத்தின் தோல் நீக்கி சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். அத்துடன் கோதுமை மாவை சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு துருவிய பன்னீர் அதையும் இத்துடன் சேர்த்து கொள்ளுங்கள். இதில் உப்பு, ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
அடுத்து இந்த மாவில் இனிப்பிற்கு முக்கால் கப் கொடுத்த வெல்லம் சேர்த்துக் கொள்ளுங்கள். வெல்லத்திற்கு பதிலாக நாட்டு சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம். இவை சேர்த்த பிறகு இன்னும் கொஞ்சம் மாவு தளர்வாக வரும் நன்றாக கலந்து விடுங்கள். இது கோதுமை மாவு பதத்திற்கு கெட்டியாக இருக்க வேண்டும் இது தான் சரியான பதம். அடுத்து இந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்து விடுங்கள்.
– Advertisement –

இப்போது மீண்டும் அடுப்பில் ஏற்கனவே நாம் வாழைப்பழம் பொறித்த எண்ணெய் சட்டியை வைத்து சூடான பிறகு அடுப்பை மிதமான தீக்கு மாற்றி விடுங்கள். அதன் பிறகு உருட்டி வைத்த இந்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக சிவந்து வரும் வரை விட்டு எடுத்து விடுங்கள் நல்ல சுவையான ஆரோக்கியமான வாழைப்பழ பன்னீர் ஸ்நாக்ஸ் தயார்.
இதையும் படிக்கலாமே:தேங்காய் மாங்காய் சாதம் செய்முறை
இந்த ஸ்நாக்ஸ் ரெசிபி ரொம்பவே வித்தியாசமான சுவையில் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு முறை இப்படி செய்து கொடுத்துப் பாருங்கள். இனி அடிக்கடி இது போல செய்வீங்க. அந்த அளவிற்கு சுவை அட்டகாசமாக இருக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top