அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் அதிக அளவில் டிபன் வகைகளை சாப்பிடாமல் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் போன்றவற்றை சாப்பிட்டு தங்களுடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் நம்மில் பலரும் டிபன் வகைகளையே அதிக அளவில் சாப்பிடுகிறோம். அப்படி டிபன் வகைகளை சாப்பிடும் பொழுது அதற்கு தொட்டுக் கொள்வதற்காக எப்பொழுதும் போல் சட்னி வகைகளை செய்யாமல் சற்று வித்தியாசமான முறையில் எளிதில் வெங்காயத்தை வைத்து செய்யக்கூடிய ஒரு வெங்காய குருமாவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.தேவையான பொருட்கள்:கிராம்பு – 3ஏலக்காய் – 2கல்பாசி – 1அன்னாசிப்பூ – பாதிசோம்பு – ஒரு டீஸ்பூன்பட்டை – ஒன்றுகசகசா – ஒரு டீஸ்பூன்உடைத்த கடலை – ஒரு டீஸ்பூன்இஞ்சி – 2 இன்ச்பூண்டு – 5 பல்பச்சை மிளகாய் – 6முந்திரி – 4வெங்காயம் – 3துருவிய தேங்காய் – 1/4 கப்எண்ணெய் – ஒரு குழி கரண்டிகடுகு – 1/2 டீஸ்பூன்சீரகம் – 1/2 டீஸ்பூன்பிரியாணி இலை – ஒன்றுதக்காளி – 2புதினா நறுக்கியது – ஒரு கைப்பிடி அளவுமஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்மல்லித்தூள் – 2 டேபிள் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுகொத்தமல்லி பொடியாக நறுக்கியது – ஒரு கைப்பிடி அளவு – Advertisement -செய்முறை:முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, அண்ணாச்சி பூ, அரை டீஸ்பூன் சோம்பு, பட்டை, கசகசா, உடைத்த கடலை, தோல் நீக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், முந்திரி, பாதி வெங்காயம், துருவிய தேங்காய் இவை அனைத்தையும் போட்டு சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் கடுகு, சோம்பு, சீரகம், பிரியாணி இலை போன்றவற்றை போட்டு கடுகு வெடித்து சோம்பும் சீரகமும் சிவக்கும் வரை விட வேண்டும். பிறகு நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை அதில் போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் நிறம் மாற வேண்டும் என்று அவசியம் இல்லை. அதற்கு முன்பாகவே பொடியாக நறுக்கிய தக்காளியை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இதில் புதினா இலை, மஞ்சள் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். – Advertisement – இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் அந்த விழுதை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். குருமாவின் பதத்திற்கு ஏற்றார் போல் தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி நன்றாக கலந்து மூடி போட்டு பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும். பத்து நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை தூவி இறக்கினால் கமகமக்கும் வெங்காய குருமா தயாராகிவிட்டது. வெங்காயமும் தக்காளியும் இருந்தாலே போதும் மிகவும் சுவையான எளிதில் விரைவில் செய்யக்கூடிய குருமா தயாராகி விடும்.இதையும் படிக்கலாமே: ரவா லட்டு செய்ய டிப்ஸ்இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று அனைத்து விதமான டிபன் ஐட்டத்திற்கும் இந்த வெங்காய குருமா மிகவும் அருமையாக இருக்கும். குருமாவிற்காக டிபனா டிபனுக்காக குருமாவா என்னும் போட்டியே நடக்க ஆரம்பித்து விடும். ஒருமுறை செய்து ருசித்து பாருங்கள்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam