– Advertisement –
திருமணத்தில் செய்யக்கூடிய சமையலுக்கு என்று தனி ருசி இருக்கும். அதிலும் சில குறிப்பிட்ட காய்கறிகளை இது போன்ற திருமண விழாக்களில் சாப்பிட்டுவிட்டு அதே போல் வீட்டிலும் தயார் செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். எப்படி செய்தாலும் வீட்டில் அந்த சுவை வருவது மிகவும் கடினமாகவே இருக்கும். இதே போல் தான் இன்றைய சமையல் குறிப்பு குறித்த பகுதியில் கல்யாண வீடுகளில் செய்யக்கூடிய வெண்டைக்காய் பச்சடியை எப்படி நம்முடைய வீட்டில் செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம்.
வெண்டைக்காயில் பல நன்மைகள் இருக்கின்றன. வெண்டைக்காயை பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. இது செரிமானத்திற்கு உதவி செய்யும். நார்ச்சத்து இதில் அதிக அளவில் இருக்கிறது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கும், புற்றுநோயை தடுப்பதற்கும், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதற்கும் உகந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த வெண்டைக்காய் கல்லீரலை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் கண் நோய்கள் எதுவும் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. மேலும் இதய நோய்களிடம் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
– Advertisement –
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
வெண்டைக்காய் – 200 கிராம்
கடுகு உளுந்து – ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
வெங்காயம் – 2
தக்காளி – 2 ,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளி – நெல்லிக்காய் அளவு
தேங்காய் – 1/2 கப்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு மட்டும் எண்ணெய் சேர்த்து எண்ணெய் லேசாக சூடானதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை அதில் சேர்த்து அதன் வழவழப்பு தன்மை லேசாக நீங்கிதும் அடுப்பில் இருந்து இறக்கி ஒரு தட்டில் கொட்டி வைத்து விடுங்கள்.
மறுபடியும் அடுப்பில் கடாயை வைத்து கடாய் சூடானதும் மீதம் இருக்கும் எண்ணெய் ஊற்றி விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு உளுந்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
– Advertisement –
தக்காளியும் நன்றாக வதங்கி மசிந்த பிறகு அதில் வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு இவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். ஊற வைத்திருக்கும் புளியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து அந்த புளித் தண்ணீரை வெண்டைக்காயுடன் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.
புளித் தண்ணீரில் வெண்டைக்காய் நன்றாக வேகட்டும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் தேங்காய், சீரகம் இரண்டையும் சேர்த்து குறைந்த அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக விழுது போல அரைத்துக் கொள்ளுங்கள். வெண்டைக்காய் நன்றாக வெந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் இந்த விழுதை அப்படியே அந்த வெண்டைக்காயில் சேர்த்து ஒருமுறை நன்றாக கலந்து விட்டு இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் மிகவும் சுவையான கல்யாண வீட்டு வெண்டைக்காய் பச்சடி தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே ஜாக் ப்ரூட் 65 செய்முறை
இதில் புளிப்பு, உப்பு, உரைப்பு, இனிப்பு என்று அனைத்து சுவைகளும் கலந்து இருக்கும் என்பதால் ஒருமுறை வீட்டில் செய்து பாருங்கள். அதன் சுவை உங்கள் நாவை விட்டு நீங்காமல் என்றென்றும் நிலைத்திருக்கும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam