
– Advertisement –
கோடைகாலம் ஆரம்பித்துவிட்டது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பரீட்சையும் ஆரம்பித்துவிட்டது. பரீட்சை நேரம் முடியும்பொழுது வெயிலின் தாக்கத்தால் மிகவும் சோர்வடைந்து வீட்டிற்கு வருவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வெயிலின் தாக்கம் குறைய பலவிதமான செயற்கையாக தயாரிக்க கூடிய ஷேக் மற்றும் ஐஸ்கிரீமை தருவதற்கு பதிலாக ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே சக்கரவள்ளி கிழங்கை வைத்து ஒரு ஷேக் செய்து தரலாம். இந்த ஷேக்கை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
சக்கரவள்ளி கிழங்கு – 200 கிராம்கேரட் – 100 கிராம்பால் – 100 எம்எல்வெண்ணிலா ஐஸ்கிரீம் – ஒரு கரண்டிஏலக்காய் தூள் – ஒரு டீஸ்பூன்தேன் – 2 டேபிள் ஸ்பூன்
– Advertisement –
செய்முறை
சக்கர வள்ளி கிழங்கின் தோலை நீக்கிவிட்டு நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை குக்கரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதேப்போல் கேரட்டின் தோலையும் நீக்கி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் சேர்த்து இவை இரண்டும் நன்றாக குலைய வேகம் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள். இரண்டும் நன்றாக வெந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆர வைத்துக் கொள்ளுங்கள்.
காய்ச்சிய 100 எம்எல் பாலை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். இது ஐஸ் கட்டியாக மாற வேண்டும். வேக வைத்த கிழங்கு ஆரிய பிறகு இதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் ஐசாக மாறிய காய்ச்சிய பாலை சேர்க்க வேண்டும். பிறகு வெண்ணிலா ஐஸ்கிரீம், ஏலக்காய் தூள், தேன் போன்றவற்றை சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த ஷேக் கெட்டியாக இருக்கும் பட்சத்தில் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் காய்ச்சிய பாலை சேர்த்து நன்றாக கலந்து ஷேக் பதத்திற்கு தயார் செய்து கொள்ளலாம்.
– Advertisement –
அவ்வளவுதான் சக்கரவள்ளி கிழங்கு சேக் தயாராகிவிட்டது. இதை கிளாஸில் ஊற்றி அதற்குமே விருப்பத்திற்கு ஏற்றார் போல் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றை துருவிப்போட்டு அதற்கு மேலே ஒரு ஸ்பூன் அளவிற்கு தேனையும் ஊற்றி கொடுக்கலாம். இதில் நாம் இனிப்பிற்காக தேனை மட்டும்தான் பயன்படுத்துகிறோம் என்பதால் வயதானவர்களும் எந்தவித தயக்கமும் இல்லாமல் இந்த சக்கரவள்ளி கிழங்கு ஷேக்கை பருகலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியமான வெயிலுக்கு இதமான சக்கரவள்ளி கிழங்கு ஷேக் தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே:கொங்கு செலவு ரசம் ரெசிபி
ஆரோக்கியமான முறையிலும் மிகவும் எளிதில் வீட்டில் தயாரிக்க கூடிய இப்படிப்பட்ட ஷேக்குகளை செய்து தருவதன் மூலம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam