வேர்க்கடலை புட்டு ரெசிபி | Verkadalai puttu recipe

வேர்க்கடலை புட்டு ரெசிபி | Verkadalai puttu recipe

Qries

– Advertisement –

புட்டு என்றாலே குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். வழக்கமாக செய்யும் புட்டை விட இந்த வேர்க் கடலை கொண்டு செய்யப்படும் புட்டு ரொம்பவே வித்தியாசமானது மற்றும் சுவையானது ஆகும். பிரமாதமான வேர்க் கடலை மாவு புட்டு ஆரோக்கியமாக எப்படி தயாரிப்பது? என்னும் ரகசியத்தை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தொடர்ந்து காண இருக்கிறோம்.
வேர்க்கடலை புட்டு செய்ய தேவையான பொருட்கள் :வேர்க்கடலை – ஒரு கப்ஏலக்காய் – மூன்றுசுக்கு – ஒரு சிறு துண்டுமிளகு – அரை ஸ்பூன்பொடித்த வெல்லம் – ஒரு கப்பச்சரிசி மாவு – ஒரு கப்உப்பு – தேவையான அளவு
– Advertisement –

வேர்க்கடலை புட்டு செய்முறை விளக்கம் :வேர்க்கடலை புட்டு செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் தயாராக முதலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் பச்சரிசி மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். சூடாக இருக்கும் தண்ணீரில் உப்பு சேர்த்து அந்த தண்ணீரை மாவில் தெளித்து உதிரி உதிரியாக உதிர்த்து பிசைய வேண்டும். நன்கு உதிர்த்து வைத்த பின்பு அதை இட்லி பாத்திரத்தில் துணி போட்டு அவித்து எடுக்க வேண்டும். பத்து நிமிடம் அவித்தால் பூ போல வெந்து வரும்.
இந்த மாவை ஒரு புறம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து அதில் ஏலக்காய், மிளகு, சுக்கு ஆகியவற்றை லேசாக தணலில் வறுக்க வேண்டும். அதே வாணலியில் தோல் உரித்து வைத்துள்ள வேர்க்கடலைகளை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். பின் வறுத்த பொருட்களை அற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள்.
– Advertisement –

அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை மாவுடன், அவித்து வைத்துள்ள பச்சரிசி புட்டையும் சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு கப் வெல்லத்தை நன்கு பொடி பொடியாக இடித்து அதையும் இதனுடன் சேர்த்து மிக்ஸியை இயக்கி கொரகொரவென்று அரைத்து வாருங்கள். அரைத்து எடுத்த இந்த விழுதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இந்த விழுதுடன் கொஞ்சம் நெய் சுட வைத்து சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் அருமையான வேர்கடலை புட்டு தயார்!
இதையும் படிக்கலாமே:தை மாதம் மகாலட்சுமி வழிபாடு
பொதுவாக பச்சரிசி மாவுடன் கொஞ்சம் ஏலக்காயை தட்டி போட்டு, தேங்காயை துருவி, சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது தான் வழக்கம் ஆனால் இது போல வேர்க்கடலையை அரைத்து மேற்கூறிய பொருட்களையும் சேர்த்து, ஒரு முறை புட்டு தயாரித்து பாருங்கள், ரொம்பவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடக் கூடிய இந்த வேர்க் கடலை புட்டு செய்வதற்கு ரொம்ப நேரமும் பிடிக்காது. வேர்க் கடலையில் ஏராளமான புரோட்டின் சத்துக்கள் உள்ளன. வெல்லத்தில் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. அடிக்கடி இது போல ஆரோக்கியமான ரெசிபிகளை செய்து கொடுக்கும் பொழுது, தேவையில்லாத ஸ்னாக்ஸ் வகைகளை குழந்தைகள் கேட்பதை நிறுத்தி விடுவார்கள். கடைகளில் விற்கப்படும் செயற்கை ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட தின்பண்டங்களை காட்டிலும், இது போல வீட்டிலேயே ஆரோக்கிய அக்கறையோடு செய்து கொடுத்துப் பாருங்கள், உங்களுக்கும் மனம் திருப்தி கொள்ளும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top