– Advertisement –
ஆரோக்கியமான உணவுகளை நம்முடைய அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பலரும் கூறியிருக்கிறார்கள். அப்படி உணவு பொருட்களோடு பழ வகைகளையும் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பழ வகைகள் என்று பார்க்கும் பொழுது தினமும் நம்முடைய உடலுக்கு தேவையான ஆற்றல்களை இந்த பழங்கள் தருகிறது.
அதிலும் குறிப்பாக வாழைப்பழம் என்பது தினமும் சாப்பிட வேண்டிய முக்கியமான பழமாக கருதப்படுகிறது. அதற்காகவே கடையிலிருந்து வாழைப்பழத்தை வாங்கி வைத்தாலும் வீட்டில் இருப்பவர்கள் அதை எடுத்து சாப்பிடாமல் அந்த வாழைப்பழம் வீணாகிவிடுகிறது. இப்படி கனிந்த வாழைப்பழத்தை யாரும் சாப்பிடாமல் இருக்கும் பட்சத்தில் அதை வைத்து மிகவும் எளிமையான முறையில் ஒரு ஸ்வீட் கட்லெட் தயார் செய்துவிடலாம். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் வாழைப்பழத்தை வைத்து எப்படி ஸ்வீட் கட்லெட் செய்வது என்று தான் பார்க்க போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 4
ரவை – 1/2 கப்
தேங்காய் துருவல் – 1/2 கப்
காய்ச்சிய பால் – ஒரு கப்
நெய் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சர்க்கரை – 1/2 கப்
ஏலக்காய் – 1/4 டீஸ்பூன்
செய்முறை
முதலில் கனிந்த வாழைப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு அந்த வாழைப்பழத்தை ஒரு பாத்திரத்தில் மாற்றி நன்றாக பிணைந்து கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி நெய் உருகியதும் அதில் மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும்.
இது நிறத்திற்காக மட்டுமே தவிர்த்து வேறு எதுவும் கிடையாது. விருப்பம் இருப்பவர்கள் சேர்த்துக் கொள்ளலாம். விருப்பமில்லாதவர்கள் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுது மஞ்சள் வாடை நன்றாக நீங்கிய பிறகு நாம் மசித்து வைத்திருக்கும் வாழைப்பழத்தை அதில் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். பிறகு இதில் ரவையை சேர்த்து கைவிடாமல் நன்றாக வதக்கி கொண்டே இருங்கள்.
– Advertisement –
ரவையும் வாழைப்பழமும் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் அளவு வதக்கிய பிறகு இதில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்க வேண்டும். தேங்காய் துருவல் நன்றாக கலந்த பிறகு கெட்டியாக காய்ச்சி ஆரம்பித்த பாலை இதில் ஊற்றி கைவிடாமல் நன்றாக கிளறி கொள்ளுங்கள். இதில் சர்க்கரை சேர்த்து ஏலக்காய் துளியும் சேர்த்து நன்றாக பிரட்டி அடுப்பை அணைத்து விடுங்கள். கை பொறுக்கும் சூடு வந்ததும் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் வடிவத்தில் இதை தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.
உருண்டையாகவோ, சதுரமாகவோ, வட்டமாகவோ எப்படி வேண்டுமோ அப்படி தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை ஒரு தோசை கல்லை வைத்து அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் கட்லெட்டை வைத்து அதை சுற்றி ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி இரண்டு புறமும் திருப்பி போட்டு சிவக்கும் வரை வேக விட வேண்டும். அவ்வளவுதான் ஸ்வீட் பனானா கட்லெட் தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே கல்யாண வீட்டு ரசம் ரெசிபி
சற்றும் சிரமமில்லாமல் நினைத்த மாத்திரத்தில் செய்யக்கூடிய ஒரு எளிமையான ஸ்னாக்ஸ் ஆக தான் இந்த ஸ்னாக்ஸ் திகழ்கிறது. இனிமேல் வாழைப்பழத்தை வீணாக்காமல் இப்படி ஸ்நாக்ஸ் செய்து வீட்டில் இருப்பவர்களை சாப்பிட வைத்து விடுங்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam