2 நிமிஷத்துல சாம்பார் பொடி சேர்த்து ரொம்பவே வித்தியாசமான சட்னி ரெசிபி. இட்லி தோசை பூரி சப்பாத்திக்கு செமையா இருக்கும்.

2 நிமிஷத்துல சாம்பார் பொடி சேர்த்து ரொம்பவே வித்தியாசமான சட்னி ரெசிபி. இட்லி தோசை பூரி சப்பாத்திக்கு செமையா இருக்கும்.

Qries

– Advertisement –

சட்னியை பொருத்த வரையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி என வகை வகையாக உண்டு. இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் வித்தியாசமாக சாம்பார் பொடி சேர்த்து ஒரு சட்னி செய்யப் போகிறோம். இந்த சட்னி ரொம்பவே சுவையாக இருப்பதுடன் சுலபமாகவும் செய்து விடலாம் வாங்க. அந்த சிம்பிள் குயிக் சட்னி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
கார சட்னி செய்முறை
இந்த சட்னி செய்ய மீடியம் சைஸ் வெங்காயம் இரண்டை கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் மீடியம் சைஸ் தக்காளியாக இருந்தால் ஒன்று, பெரிய தக்காளியாக இருந்தால் பாதி மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் இரண்டு பச்சை மிளகாய் கீறி வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

இப்போது மிக்ஸி ஜாரில் அரிந்து வைத்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இத்துடன் ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி, அரை டீஸ்பூன் மிளகாய்த் தூள், அரை டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் வெல்லம் பத்து கறிவேப்பிலை இலை, இந்த சட்னிக்கு கருவேப்பிலை சேர்க்கும் போது அதன் சுவை பிரமாதமாக இருக்கும். இவை அனைத்தையும் சேர்த்து ஒரே ஒரு முறை அரைத்து விட்டு இப்போது கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்த பிறகு அரைத்து வைத்த டேஸ்ட்டை இதில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடுங்கள்.
– Advertisement –

இந்த சட்னி ரெண்டு நிமிடம் வரை கொதித்தாலே போதும் நன்றாக சுண்டி எண்ணெய் பிரிந்து வந்து விடும். அவ்வளவு தான் சுவையான சட்னி நிமிடத்தில் தயார். இதை செய்ய அதிகப்பட்சம் இரண்டு நிமிடம் கூட ஆகாது வேலைக்கு செல்லும் நேரத்தில் அவசரமாக ஒரு சட்னி அரைக்க வேண்டும். அதே நேரத்தில் அது எல்லாவற்றிற்கும் செட்டாக வேண்டுமென்றால் இந்த சட்னி ரெசிபியை செய்து பார்க்கலாம்.
இதையும் படிக்கலாமே: உங்க குட்டீஸ்க்கு ஒரு முறை இப்படி வித்தியாசமா கேரட் சிப்ஸ் பண்ணி குடுங்க.
ரொம்பவே சுவையான இந்த சட்னியை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, பொங்கல் என எந்த வகையான டிபன் ஆக இருந்தாலும் அனைத்திற்குமே இது நல்ல சைடு டிஷ்ஷாக இருக்கும். ஒரு முறை இதை செய்து விட்டால் இனி நேரமே இருந்தால் கூட இந்த சட்னியை தான் செய்வீர்கள். அந்த அளவிற்கு இதன் சுவை நன்றாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top