கோபம் குறைய நாமக்கட்டி | Kobam kuraiya namakkatti

கோபம் குறைய நாமக்கட்டி | Kobam kuraiya namakkatti

Qries

– Advertisement –

இன்று இருக்கும் சூழலில் ஆண், பெண் இருவருமே சம்பாதித்தால் தான் ஒரு குடும்பத்தை சிரமம் இல்லாமல் நடத்த முடியும் என்றாகிவிட்டது. கால ஓட்டத்தினால் மெஷின் போல மாறி இருக்கும் நமக்கு ஆயிரத்தெட்டு டென்ஷனும், அதனால் மன இறுக்கம் எனப்படும் ஸ்ட்ரெஸ் உண்டாகிறது. திருநாமம், திருமண் எனப்படும் இந்த நாமக்கட்டியை வைத்து எப்படி கோபத்தை குறைப்பது? என்பதை தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பகுதியின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு பெற்ற ஊர் செய்யாறு பக்கத்தில் உள்ள “ஜடேரி கிராமம்”. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனி சிறப்பு இருப்பது போல ஜடேரி கிராமம் என்றாலே நாமக்கட்டி தயாரிப்பதில் தான் முதலிடம் வகிக்கிறது. வெள்ளை பாறைகளை உடைத்து எடுத்து செக்கில் ஆட்டுவது போல அரைத்து கூழாக்கி அதன் மூலம் கீழே படியும் சுத்தமான களிமண்ணை ரசாயனங்கள் எதுவும் சேர்க்காமல் பதப்படுத்தி உலர வைத்து தயாரிப்பதை தான் நாமக்கட்டி என்கிறோம்.
– Advertisement –

இந்த நாமக்கட்டி பொதுவாக வைணவ சமயங்களில் திருநாமம் இட்டுக் கொள்ள பயன்படுத்தப்படுகிறது. எல்லா வைணவ ஸ்தலங்களுக்கும், ஜடேரி கிராமத்திலிருந்து தான் நாமக்கட்டி ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கட்டி திருநாமம் இட்டுக் கொள்வதற்கு மட்டுமல்லாமல், பல்வேறு மருத்துவ பயன்களுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
உடலை குளிர்ச்சியாக்க நாமக்கட்டி பயன்படுகிறது. உடல் உஷ்ணத்தை தணிக்க வயிற்று பகுதியில் நாமத்தை குழைத்து தடவினால் போதும்! உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று வலி, வயிற்று உபாதைகளை இது தீர்த்து வைக்கும். இதில் ஏராளமான கால்சியம் நிறைந்துள்ளது. உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. கொப்புளங்கள், கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றை குணப்படுத்த நாமக்கட்டியை பயன்படுத்துவார்கள். சிறிதளவு நாம கட்டியை தண்ணீரில் கரைத்து முகத்தில் தடவ, முகம் பளிச்சென்று இருக்கும். கை, கால் மூட்டு வீக்கம், ரத்த கட்டு போன்றவற்றுக்கு நாமத்தை குழைத்து தடவி இரவு முழுவதும் விட்டு காலையில் வெந்நீரையோ, சாதம் வடித்த கஞ்சியையோ வெதுவெதுப்பாக ஊற்ற ரத்தக்கட்டு, வீக்கம் அனைத்தும் குணமாகும்.
– Advertisement –

நாமக்கட்டியுடன் சந்தனம் கலந்து தடவினால் அரிப்பு, சொறி, சிரங்கு போன்றவற்றிலிருந்து நிவாரணம் காணலாம். கண் எரிச்சல், கண் வீக்கம், கண் சார்ந்த பிரச்சனைகளை போக்கவும் கண்களை சுற்றி நாமக்கட்டியை குழைத்து தடவலாம். இப்படி இவ்வளவு பலன்களை கொடுக்கக் கூடிய நாமக்கட்டியை தண்ணீரில் குழைத்து நெற்றியில் பத்து போடுவது போல போட்டு காய வைத்து பின் கழுவினால் மூளை நரம்புகளுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். இதனால் கோபம் குறைந்து, மன இறுக்கத்தில் இருந்து தளர்வு அடைவீர்கள். அடிக்கடி கோபப்படுபவர்கள் தினமும் இரவில் இப்படி நெற்றியில் நாமத்தை குழைத்து தடவி வரலாம்.
இதையும் படிக்கலாமே:கடன் பிரச்சனையிலிருந்து சுலபமாக வெளிவர மந்திரம்
நாமக்கட்டியை சிலர் பல்பம் சாப்பிடுவது போல சாப்பிடுவது உண்டு. எல்லா நாமக்கட்டிகளும் இரசாயனங்கள் கலக்கப்படாமல் செய்யப்படுவது இல்லை. சுத்தமான நாமக்கட்டியை சாப்பிடுவதால் பிரச்சனைகள் ஏதுமில்லை, ஆனால் தரம் இல்லாத நாமக்கட்டியை சாப்பிடுபவர்களுக்கு சிறு சிறு உடல் நல கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு எனவே நாமக்கட்டியை சாப்பிடுவதை தவிர்ப்பது உத்தமம். நாமக்கட்டி சருமத்தில் இருக்கும் பாக்டீரியா கிருமிகளை அழித்து, நச்சுக்களை நீக்கி, அழுக்குகளை போக்கி முக துவாரங்களுக்குள் ஆழமாக சென்று சுத்தம் செய்து முகத்தை சுருக்கங்கள் விழாமல், இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சூரிய ஒளி கதிர்களில் இருந்தும் நாமக்கட்டி சருமத்தை பாதுகாக்கிறது எனவே நாமக்கட்டியை பேக் போலவும் வாரம் ஒரு முறை நீங்கள் போட்டு வரலாம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top