முடி வளர்ச்சியை அதிகரிக்கும் லட்டு | mudi valarchiyai athigarikkum laddu in tamil

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் லட்டு | mudi valarchiyai athigarikkum laddu in tamil

Qries

– Advertisement –

முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அடர்த்தியாக வளர வேண்டும், முடி உதிர்தல் பிரச்சனை இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் தங்களுடைய முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு எண்ணெய் பயன்படுத்துவது, ஹேர்பாக் போடுவது, சீரம் போடுவது என்று பல விதங்களில் முயற்சிகளை செய்வார்கள். எவ்வளவு எண்ணெய், ஷாம்பு, கண்டிஷனர், சீரம் என்று எதையோ தடவினாலும் முடி வளரவே இல்லை. மேற்கொண்டு முடி உதிர்தல் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பவர்கள் இந்த ஒரு லட்டுவை தினமும் ஒன்று என்ற விதம் சாப்பிட்டால் போதும். இந்த லட்டுவை எப்படி செய்வது என்று தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முடி வளர்ச்சியை அதிகரிக்கும் லட்டு
பொதுவாக முடி வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்றால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க வேண்டும். இதை வெளிப்புறமாக நாம் செய்வதோடு மட்டுமல்லாமல் நம்முடைய உடலுக்குள்ளும் நாம் எடுத்துக் கொண்டால்தான் அதனுடைய முழு பலனையும் நம்மால் பெற முடியும். நம்முடைய உடல் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு தான் நம்முடைய முடியும் ஆரோக்கியமாக இருக்கும். அப்படி முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒரு லட்டுவை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
– Advertisement –

இந்த லட்டுவை தயார் செய்வதற்கு நமக்கு பெரிதும் செலவாகாது. எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து தான் இந்த லட்டுவை செய்யப் போகிறோம். இதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய பொருட்கள் கருவேப்பிலை, பச்சைப்பயறு, பொட்டுக்கடலை, வெல்லம் அவ்வளவுதான். இரண்டு கைப்பிடி அளவு கருவேப்பிலையை எடுத்து சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு அரை கிலோ அளவிற்கு பச்சைபயிறு வேண்டும். பொட்டுக்கடலை 300 கிராம் வேண்டும். வெல்லம் அரை கிலோ வேண்டும். இப்பொழுது எப்படி செய்வது என்று பார்ப்போமா…
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். சிறிதளவு நெய் ஊற்றி அதில் கருவேப்பிலையை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். கையில் அதை அமுக்கினால் நொறுங்க வேண்டும். அந்த பதம் வரவேண்டும். அந்த பதம் வந்த பிறகு அதை எடுத்து ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு அதே பாத்திரத்தில் பச்சை பயிரை சேர்த்து அது நன்றாக சிவக்கும் வரை குறைந்த தீயில் வைத்து வறுத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது இரண்டும் நன்றாக ஆரிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பொடியை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

பொட்டுக்கடலையும் மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அதையும் இதனுடன் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது அரை கிலோ வெல்லத்தை இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு 500 எம்எல் தண்ணீர் ஊற்றி 5 ஏலக்காயை அதில் இடித்து போட்டு வெல்லம் நன்றாக கரைந்து திக்காகும் பொழுது அடுப்பை அணைத்து விடுங்கள். இப்பொழுது இதை வடிகட்டி சிறிது சிறிதாக நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவில் சேர்த்து ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலந்து விட வேண்டும்.
நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் இதனுடன் நாம் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி நன்றாக கலந்து இதை ஒரு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிணைந்து கொள்ள வேண்டும். பிறகு கைகளில் ஈரம் இல்லாமல் சிறிது நெய்யை தடவிக்கொண்டு இதை உருண்டையாக பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் இதில் நமக்குத் தேவையான பருப்பு வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த லட்டுவை தினமும் காலையில் ஒன்று என்ற வீதம் சாப்பிட்டு வருபவர்களுக்கு முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
இதையும் படிக்கலாமே:முதுமையை தள்ளிப்போடும் உணவு பொருள்
வீட்டிலேயே இப்படி சத்து மிகுந்த பொருட்களை ஒன்றாக சேர்த்து தயார் செய்து பெண் பிள்ளைகளுக்கு தருவதன் மூலம் அவர்களின் உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதோடு முடி வளர்ச்சியும் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top