அழகான முகத்தையும் ஆரோக்கியமான தலைமுடியையும் பெற உதவும் பயோட்டின் பவுடர்

அழகான முகத்தையும் ஆரோக்கியமான தலைமுடியையும் பெற உதவும் பயோட்டின் பவுடர்

Qries

– Advertisement –

நம்முடைய உடல் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு தான் நம்முடைய தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும் நம்முடைய முக அழகும் சிறப்பாக இருக்கும். இளமையான தோற்றத்தை பெற வேண்டும் என்பவர்கள் தங்களுடைய உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். இப்படி ஆரோக்கிய குறைப்பாட்டினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்குவதற்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய ஒரு பயோட்டின் பவுடரை பற்றி தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒருவருடைய முடி ஆரோக்கியத்திற்கும் முக அழகிற்கும் தேவையான அனைத்து விதமான சத்துக்களையும் கொண்டதுதான் பயோட்டின் பவுடர். இந்த பயோட்டின் பவுடரை கடைகளிலிருந்து நாம் வாங்குவதற்கு பதிலாக நாமே நல்ல தரமான பொருட்களாக பார்த்து வாங்கி வீட்டிலேயே தயார் செய்து வைத்துக் கொண்டால் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அதைப் கொடுத்து அனைவரையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள முடியும். இந்த பயோட்டின் பவுடரை எப்படி தயார் செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
– Advertisement –

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொண்டு அதில் அரை கப் அளவிற்கு பாதாமை போட்டு குறைந்த தீயில் வைத்துக்கொண்டு நன்றாக வருக்க வேண்டும். பாதாமை கையில் எடுத்து உடைக்கும் பொழுது உடையும் அளவிற்கு வருக்க வேண்டும். பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி ஆரவைத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் இதே கடாயை அடுப்பில் வைத்து கால் கப் முந்திரி, கால் கப் அக்ரூட் இரண்டையும் சேர்த்து நன்றாக வருத்து அதையும் அந்த பாதாமுடன் கொட்டி வைத்து விடுங்கள்.
அடுத்ததாக கால் கப் வேர்க்கடலையை போட்டு நன்றாக வறுத்து அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அது ஆறியதும் அதன் தோலை நாம் நீக்க வேண்டும். அடுத்ததாக வெள்ளரி விதை மூன்று டேபிள்ஸ்பூன், பூசணி விதை ஒன்னரை டேபிள் ஸ்பூன், ஆளி விதை ஒரு டேபிள் ஸ்பூன், சூரியகாந்தி விதை ஒன்னரை டேபிள் ஸ்பூன், பிஸ்தா ஒன்னரை டேபிள் ஸ்பூன், ஏலக்காய் 8 இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்து அதையும் அந்த தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

வேர்க்கடலை தோளையும் நீக்கிவிட்டு அதையும் இதனுடன் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு விட்டு விட்டு அரைத்துக் கொள்ளுங்கள். ஒரே முறையில் அரைப்பதாக இருந்தால் அதில் இருக்கக்கூடிய பாதாம் மற்றும் முந்திரியில் இருக்கக்கூடிய எண்ணெய் பசையானது கெட்டி தன்மையை ஏற்படுத்திவிடும் என்பதால் விட்டுவிட்டு அரைக்க வேண்டும்.
இவ்வாறு அரைத்த பிறகு இதனுடன் ஸ்கிம்டு மில்க் பவுடர் ஒரு கப் சேர்த்து மறுபடியும் அரைத்துக் கொள்ளுங்கள். இனிப்பு வேண்டாம் தேவைப்படும் பொழுது சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் இதை அப்படியே எடுத்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளலாம். இனிப்பு வேண்டும் குழந்தைகளுக்கும் நாம் தருவோம் என்று நினைப்பவர்கள் இதனுடன் மேற்கொண்டு அரைக்கப் அளவிற்கு ஸ்கிம்டு மில்க் பவுடரையும், ஒரு கப் அளவிற்கு பிரவுன் சுகரையும் சேர்த்து மறுபடியும் ஒருமுறை அரைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
– Advertisement –

தினமும் காலையில் காபி, டீ, ஹார்லிக்ஸ், பூஸ்ட் என்று சாப்பிடுவதற்கு பதிலாக இந்த பயோட்டின் பவுடரை இரண்டு ஸ்பூன் போட்டு பால் ஊற்றி கலந்து குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துகளும் கிடைக்கப்பெற்று தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது பத்து நாட்களிலேயே குறையும். முகமும் நன்றாக பொலிவாக இளமையாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே: முடி வளர்ச்சியை தூண்டும் மோர்
வீட்டிலேயே இந்த முறையில் தயார் செய்யும் இந்த பயோட்டின் பவுடரை நாமும் தயார் செய்து நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வோம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top