– Advertisement –
ஒரு சிலர் எப்பொழுதும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். எப்படி அவர்களால் மட்டும் இது சாத்தியம் ஆகிறது? என்று யோசிப்போம். இதற்கு காரணம், அவர்கள் மூளையில் சுரக்கக் கூடிய “டோபமைன்” என்னும் சுரப்பி தான். மனிதனுடைய மகிழ்ச்சியுடன் நேரடியாக தொடர்பு கொண்டது இந்த “டோபமைன்” சுரப்பி. இது மூளையில் ஆழமாக சுரக்கக் கூடிய ஒரு நரம்பிய கடத்தி. இது சமநிலையில் இருந்தால் தான் மனிதன் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.
இது அளவிற்கு அதிகமானாலும் அல்லது குறைந்தாலும் கஷ்டம் தான். மனிதன் ஒரு விஷயத்திற்கு அடிமையாக இருப்பதற்கும் இந்த சுரப்பி தான் காரணம் என்கிறது அறிவியல். எந்த விஷயத்திற்கும் அடிமைப்படாமல் அதில் இருந்து மீண்டு சுதந்திரமாகவும், சந்தோஷமாகவும் இருக்க என்ன வழி? என்னும் ஆரோக்கியம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவில் தொடர்ந்து காண இருக்கிறோம்.
– Advertisement –
எப்பொழுதெல்லாம் டோபமைன் அதிகம் சுரக்கும்? நாம் நமக்கு பிடித்த விஷயங்களை ஆர்வமுடன் செய்யும் பொழுது இந்த சுரப்பி அதிகம் சுரக்கிறது. அதனால் தான் நாம் மகிழ்ச்சியாக உணருகிறோம். நம் மகிழ்ச்சி என்னும் மனநிலைக்கு காரணம் இந்த டோபமைன். அளவுக்கு அதிகமாக இது சுரக்கும் பொழுது நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளையும், மனநல பிரச்சனைகளையும் உண்டு செய்யும் அபாயமும் இதற்கு உண்டு.
டோபமைன் சுரக்கும் காலம்:சாதாரணமாக ஒரு மனிதன் உடற்பயிற்சி செய்யும் போது, பிடித்தமான இனிய இசை அல்லது பாடல்கள் கேட்கும் பொழுது, யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளும் பொழுது, நல்ல ஆரோக்கியமான சத்துள்ள உணவுகளை சாப்பிடும் பொழுது, உறவில் உச்சத்தை அடையும் பொழுது, எதிலாவது வெற்றி பெரும் பொழுது இயல்பாக டோபமைன் சுரக்கிறது. அதனால் தான் அந்த நேரங்களில் எல்லாம் மனிதன் அதிகம் மகிழ்ச்சியுடனும், நேர்மறையான சிந்தனையுடனும் இருக்கிறான்.
– Advertisement –
டோபமைன் ஆபத்தான நேரம் :மூளையில் செயல்படும் டோபமைன் சுரப்பி மகிழ்ச்சியை கொடுத்தாலும், சில சமயங்களில் பலவற்றுக்கு நம்மை அடிமையாக்கி விடும். உதாரணத்திற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் அதிகமான ஈர்ப்பு உருவாகும். அதில் முக்கியமானவை விளையாட்டு, குடிப்பழக்கம், பிடித்த உணவுகள் போன்றவை ஆகும். திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை செய்ய தூண்டுவிடும். அதனால் தான் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகின்றோம், அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றோம். இது போல எவ்வளவோ விஷயங்கள் நம்மை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கும்.
ஒரு விஷயத்தை தொடர்ந்து 40 நாட்கள் நாம் செய்ய தொடங்கினால் அது மூளையில் பதிவாகிவிடும். அது நமக்கு பிடித்ததாக இருந்தால் டோபமைன் அதிகம் சுரக்க ஆரம்பித்து விடும். திரும்பத் திரும்ப அதை செய்ய வேண்டும் என்று நமக்கு தூண்டுதல் உண்டாகும். அதை நம்மால் செய்யாமல் இருக்கவே முடியாது.
இதையும் படிக்கலாமே:சொந்த வீடு வாங்க தை வெள்ளி மகாலட்சுமி வழிபாடு
அந்த விஷயம் உங்களுக்கு கெடுதல் தருபவையாக இருந்தால் இப்போதிலிருந்து தொடர்ந்து 40 நாட்களுக்கு மட்டும் அதை செய்யாமல் இருந்து பாருங்கள். மூளையிலிருந்து பதிவாகிய அந்த துணுக்குகள் அழிந்து போய்விடும். இதனால் டோபமைன் அதை செய்யுமாறு மீண்டும் தூண்டி விடாது. நீங்களாகவே விருப்பப்பட்டால் மட்டுமே அதை செய்வீர்கள். டோபமைன் நம் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பது! அதை சரியாக பயன்படுத்துபவர்கள், வாழ்க்கையில் நிச்சயம் வெற்றியாளர்களாக திகழ்வார்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam