தோல் நோய்கள் நீங்க | Thool noigal neenga

தோல் நோய்கள் நீங்க | Thool noigal neenga

Qries

– Advertisement –

நம்முடைய உடலில் இருக்கக்கூடிய மிகப்பெரிய உறுப்பாக திகழவது நம்முடைய தோல் தான். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இது இருக்கிறது. இதில் பல பிரச்சினைகள் ஏற்படும். அதனால் நமக்கு பல பாதிப்புகளும் உண்டாகும். மேலும் நம் உடலுக்குள் இருக்கக்கூடிய கழிவை வெளியேற்றுவதற்கு ஒரு முக்கியமான காரணியாக தோல் திகழ்கிறது. அதனால் தோலை எந்த அளவிற்கு நாம் சுத்தமாக பராமரிக்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தோலில் வரக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான வழிமுறையை பற்றி தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தோல் நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தங்களுடைய அடையாளத்தை வெளியே காட்டிக் கொள்ள முடியாமல் கஷ்டப்படுவார்கள். மேலும் தோல் ரீதியாக ஏற்படக்கூடிய எந்த பிரச்சினையாக இருந்தாலும் அது மற்றவர்களுக்கும் பரவக்கூடிய அபாயம் இருப்பதால் தோல் நோய் ஏதாவது ஏற்பட்டால் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து ஒதுக்கி வைக்க கூடிய சூழ்நிலை கூட உண்டாகும். அந்த சூழ்நிலை அனைத்தையும் நீக்கி அதே சமயம் இயற்கையான பொருட்களை வைத்தே தோல் நோயை சரி செய்வதற்குரிய சில வழிமுறைகளை பார்ப்போம்.
– Advertisement –

தோலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் நீக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். சுத்தமான செக்கில் ஆட்டிய நல்லெண்ணையை உபயோகப்படுத்தலாம். அப்படி இல்லாத பட்சத்தில் சுத்தமான செக்கில் ஆற்றிய தேங்காய் எண்ணெயை உபயோகப்படுத்தலாம். இதை அப்படியே உபயோகப்படுத்துவதற்கு பதிலாக ஒரு ஸ்பூன் வெந்தயம் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் மற்றும் நம் உடலுக்கு தேவையான எண்ணெய் இதை ஊற்றி நன்றாக வெந்தயம் சிவக்கும் வரை அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும்.
பிறகு அந்த எண்ணையை குளிர வைத்து தேய்க்க வேண்டும். இப்படி உச்சந்தலை முதல் உள்ளம் கால் வரை இந்த எண்ணையை தேய்ப்பதன் மூலம் நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக நீங்குவதோடு நம்முடைய சருமம் பளபளப்பாகவும் இளமையாகவும் தென்படும். சரும நோய்களை நீக்குவதற்குரிய அற்புத ஆற்றல் மிகுந்ததாக தான் வெந்தயமும் கருஞ்சீரகமும் திகழ்கிறது என்பதால் எந்தவித தயக்கமும் இன்றி தலைமுடி முதல் உள்ளங்கால்வரை நாம் பயன்படுத்தலாம்.
– Advertisement –

எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு ஆண்களாக இருக்கும் பட்சத்தில் புதன்கிழமையும் சனிக்கிழமையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்களாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் பயன்படுத்த வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த எண்ணெயோடு சேர்த்து நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை நம்முடைய உணவில் நாம் அதிக அளவில் சேர்ப்பதன் மூலம் உடலில் இருக்கக்கூடிய கழிவுகள் அனைத்தும் வெளியேறி தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே முடக்கத்தான் பலன்கள்
நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய இந்த வழிமுறைகளை நாமும் தொடர்ச்சியாக பின்பற்றி தோல் நோய் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபட்டு இளமையான ஆரோக்கியமான சருமத்தை பெறுவோம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top