
– Advertisement –
நம் சுவாச மண்டலத்தில் உற்பத்தியாகும் இந்த சளி, நுரையீரலில் படிய படிய சுவாச பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது. காற்றுப்பாதையில் ஏற்படுகின்ற ஒவ்வாமை, தொற்றுக்கிருமிகள், மெல்லிய தூசு போன்றவற்றால் சளி அதிகமாக உற்பத்தியாகி நுரையீரல் நோய்களை ஏற்படுத்துகிறது. இதனால் ஆஸ்துமா, அலர்ஜி, சுவாசக் கோளாறுகள், மூச்சு விடுவதில் சிரமம், மார்பில் நெரிசல் போன்ற பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டி இருக்கிறது. இந்த நுரையீரலில் படிந்திருக்கும் சளியை இயற்கையான முறையில் எப்படி வெளியேற்றுவது? என்பதைத்தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.
நுரையீரலில் அதிகப்படியான சளி படிவதற்கான காரணங்கள்:
தொற்றுக்கிருமிகள் நம் சுவாசிப்பதன் மூலம் சுவாசப் பாதைக்குள் சென்றுவிடுவதால் உடல் அதனை எதிர்த்து போராடுவதில் சளியை உருவாக்குகிறது. ஒரு சிலருக்கு ஒவ்வாமை இருக்கும், இதனால் அடிக்கடி தும்மல் ஏற்படும், இவர்களுக்கும் அதிகம் சளி உருவாகும். புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரலில் எரிச்சல் ஏற்பட்டு, சளியை உற்பத்தி செய்கிறது. மூச்சுக் குழாய் அழற்சி, நுரையீரல் அடைப்பு நோய், GERD போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கும் சளி அதிகம் உற்பத்தி ஆகிறது.
– Advertisement –
நுரையீரல் சளியை இலக்குவதில் இயற்கை முறைகள் :
ஆவி பிடித்தல் :சுத்தமான தண்ணீரை கொதிக்க வைத்து கனமான பெட்ஷீட் அல்லது ஏதாவது ஒரு துணியை போர்த்திக் கொண்டு 10 இல் இருந்து 15 நிமிடங்கள் வரை நீராவியை உள்ளிழுக்க வேண்டும். கெட்டியாக இருக்கும் சளியை இது இலக்கி மென்மையாகிறது, இதனால் அதனை வெளியேற்றுவது சுலபமாகிறது. நீராவி தினமும் இரண்டு முறை பிடிப்பதன் மூலம், சுவாச பாதை ஈரமாகி, நுரையீரலில் படிந்திருக்கும் சளியை தளர்த்தி வெளியேற்றுகிறது.
வெந்நீர் குடித்தல் :நுரையீரல் நோய்களால் அவதிப்படுபவர்கள், வெதுவெதுப்பான சுடுதண்ணீரை பருக வேண்டும். அடிக்கடி சுடு தண்ணீர் குடிப்பதால், சளியின் தடிமன் குறைந்து நீர்த்துப் போகிறது. வெதுவெதுப்பான தண்ணீருடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பருக, நுரையீரலில் படிந்திருக்கும் சளி குறைகிறது, இதனால் சுவாசிப்பதில் இருக்கும் பிரச்சனைகளும் குறையும்.
– Advertisement –
இயற்கை மூலிகைகள் :தினமும் இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள், தேன் ஆகிய இந்த ஐந்து இயற்கை மூலிகை பொருட்களையும் ஏதாவது ஒரு விதத்தில் உணவின் மூலம் எடுத்துக் கொள்ளுங்கள். இஞ்சியில் இருக்கக்கூடிய அழற்சி எதிர்ப்பு பண்புகள், நுரையீரலை சுத்தம் செய்கிறது. மிளகில் இருக்கக்கூடிய பைபரின், சளியை உடைக்கிறது. பூண்டு இயற்கையான முறையில் சளியை கட்டுப்படுத்துகிறது.
மஞ்சளில் இருக்கக்கூடிய குர்குமின் என்னும் மூலக்கூறு, நோய் தொற்று கிருமிகளில் இருந்து நுரையீரலை பாதுகாக்கிறது. மஞ்சள் மற்றும் தேன் சிறந்த ஆன்டிபயாட்டிக்காக செயல்படுகிறது. இது சுவாச பாதையில் ஏற்படக்கூடிய நோய்க்கிருமிகளை அழித்து, நுரையீரலில் சளி படிவதை தடுக்கிறது. தேனின் இயற்கையான நற்குணங்கள், சுவாசக் குழாயை சுத்தம் செய்கிறது, இதனால் நுரையீரலில் படிந்திருக்கக்கூடிய சளியானது இலகி, வாய் வழியாக வெளியேறுவதற்கு ஏதுவாக இருக்கும்.
– Advertisement –
சுவாச பயிற்சி :தினமும் 10 நிமிடத்திற்கு மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து இரண்டு வினாடிகள் பிடித்து வைத்துக் கொண்டு வாய் வழியாக வெளியில் விட வேண்டும். இந்த எளிய மூச்சுப் பயிற்சியை இரண்டில் இருந்து மூன்று முறை ஒரு நாளைக்கு செய்து வர, ஆக்சிஜன் ஓட்டத்தை மேம்படுத்தி, சளியை தளர்த்தி, நுரையீரல் திறனை அதிகரிக்கும்.
இதையும் படிக்கலாமே:நல்ல கணவன் அமைய மந்திரம்
உப்பு நீர் கொப்பளித்தல் : தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு கலந்து, தொண்டை வரை கொண்டு போய், 30 வினாடிகளுக்கு நன்கு கொப்பளித்து துப்ப வேண்டும். இது தொண்டை எரிச்சலை கட்டுப்படுத்தி, பாக்டீரியா கிருமிகளை அழித்து, சளி உருவாவதை தடுக்கிறது. மேலும் சுவாச பாதையில் இருக்கக்கூடிய தொற்று கிருமிகளையும் அழித்து நுரையீரலை பாதுகாக்கிறது.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam