– Advertisement –
சிறுவயதில் இருப்பவர்களுக்கு குறைவான வயது ஆகிறது என்று கூறினால் கோபம் வரும். இல்லை நான் பெரியவன் ஆகிவிட்டேன். எனக்கு அனைத்தும் தெரியும் என்று கூறுவார்கள். இதே 35 வயதிற்கு மேல் சென்ற பிறகு உனக்கு வயதாகி விட்டது என்று கூறினால், அப்பொழுதும் கோபம் வரும். பலருக்கும் தங்களுடைய வயதை வெளிப்படையாக காட்ட விருப்பம் இருக்காது. முடிந்த அளவிற்கு வயதை குறைத்துக் காட்ட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இதற்காக செயற்கையான முறைகளை பின்பற்றாமல் இயற்கையிலேயே நம்முடைய உடலை முதுமை அடையாமல் பார்த்துக்கொள்ள முடியும். அப்படி முதுமையை தள்ளிப் போட உதவக்கூடிய சில உணவுப் பொருட்களை பற்றி தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் கண்டிப்பான முறையில் முதுமை என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். அது எப்பொழுது வருகிறது என்பதுதான் முக்கியமான விஷயம். பலருக்கும் தங்களுடைய இளம் வயதிலேயே முதுமை தோற்றம் என்பது ஏற்பட்டுவிடும். இன்னும் சிலருக்கோ வயதான பிறகும் அவர்கள் இளமையாக தோற்றம் அளிப்பார்கள். இதற்கு அவர்களின் மரபணுக்களே காரணமாக திகழ்கின்றன. முதுமை அடைந்தவர்களுக்கு மரபணுக்களில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும்.
– Advertisement –
இந்த மரபணுக்கள் பழுதடைவதற்கு முக்கியமான காரணமாக திகழ்வது நம்முடைய உணவு பழக்க வழக்கமும், சுற்றுச்சூழலும் தான். இதை சரி செய்தாலே நம்முடைய இளமையை நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியும். இந்த முதுமையை தள்ளிப்போட்டு இளமையை தக்க வைப்பதற்கு சில உணவுப் பொருட்களை நாம் அன்றாடம் நம்முடைய உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாகவே இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பழங்களையும், காய்கறிகளையும், கீரை வகைகளையும் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
இதோடு எண்ணெயில் பொறிக்கக்கூடிய பொருட்களை சாப்பிடக்கூடாது. வெள்ளை சர்க்கரையை அதிகமாக சேர்க்கக் கூடாது, உப்பை அதிகமாக சேர்க்கக் கூடாது, பதப்படுத்தப்பட்ட பொருட்களை சேர்க்கக்கூடாது என்று முதுமையை வரவழைக்கக்கூடிய பொருட்களின் பட்டியல் நீண்டு கொண்டு செல்லும். அதே சமயம் முதுமையை தாமதப்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களும் இருக்கின்றன. அதை நாம் உண்ணும் பொழுது நம்முடைய மரபணு ரீதியான மாற்றங்கள் சரியாகி முதுமை சில நாட்களுக்கு தள்ளி போகும்.
– Advertisement –
இதில் முதலிடம் பிடிக்கக் கூடியது மாதுளம் பழம். மாதுளம் பழத்தில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சைடுகள் நம்முடைய மரபணுக்களில் பழுதுகள் ஏற்பட்டு இருப்பின் அந்த பழுதை சரி செய்து இளமையை தக்க வைக்க உதவுகிறது. அடுத்ததாக பப்பாளி, பப்பாளியில் பெப்பின் என்னும் ஆன்டிஆக்சைடு இருக்கிறது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. மேலும் வைட்டமின் ஏ, சி, இ போன்ற சத்துக்கள் இதில் அதிக அளவு இருக்கின்றன. கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும் பொழுது தான் வயதான தோற்றம் என்பது குறையும்.
மூன்றாவதாக கிரீன் டீ, கிரீன் டீயில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சைடு அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும் இருக்கும் கொலாஜினை பாதுகாப்பதற்கும் அதனால் வயதாவதை தாமதப்படுத்தவும் உதவுகிறது. நான்காவதாக நாவல் பழம். இதில் இருக்கும் விட்டமின் சி நம் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், பருக்கள், சுருக்கம் போன்றவற்றை நீக்கி இளமையை தக்க வைக்க உதவுகிறது.
– Advertisement –
அடுத்ததாக நாம் பார்க்கக் கூடியது ஆலிவ் ஆயில். இதில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்சைடுகள் மரபணுவை மாற்றி அமைக்கும் தன்மை உடையதாக திகழ்வதால் நம்முடைய மரபணுக்களில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதை சரி செய்து இளமையை தக்க வைக்க உதவும். ஆறாவதாக திராட்சை, இதில் சிவப்பு திராட்சை, கருப்பு திராட்சை என்று இருக்கிறது. இரண்டையும் நாம் சாப்பிடலாம். இதில் அதிக அளவு நமக்கு பலன் தரக்கூடியது கருப்பு திராட்சியே. கருப்பு திராட்சையை நாம் சாப்பிடுவதன் மூலம் அதில் இருக்கக்கூடிய ஆன்டிஆக்சைடுகள் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய பழுதடைந்த அணுக்களை நீக்கக்கூடியதாக திகழ்கிறது.
கடைசியாக டார்க் சாக்லேட். இதில் கொக்கோ பவுடர் அதிகளவில் இருக்கிறது. இந்த கொக்கோ பவுடர் நம்முடைய தோலை பாதுகாக்க உதவுகிறது. மேலும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும், நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இதோடு மட்டுமல்லாமல் சூரிய ஒளி கதிர்களில் இருந்து வரக்கூடிய புற ஊதா கதிர்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளிலிருந்து நம்முடைய சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.
இதையும் படிக்கலாமே பல நோய்களை தடுக்கும் கீழாநெல்லி
மேற்சொன்ன இந்த உணவுப் பொருட்களை நம்முடைய உணவில் அன்றாடம் நாம் எடுத்துக் கொள்வதன் மூலம் முதுமையை தள்ளிப் போட முடியும். செயற்கையான பொருட்களை பயன்படுத்தாமல் இப்படி ஆரோக்கியமான பொருட்களை பயன்படுத்தி இளமையுடன் திகழ்வோம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam