மூலிகை பற்பசை தயார் செய்யும் முறை

மூலிகை பற்பசை தயார் செய்யும் முறை

Qries





– Advertisement –

இன்றைய காலத்தில் நாம் உபயோகப்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருட்களுமே ஏதாவது ஒரு ரூபத்தில் கெமிக்கல் நிறைந்த பொருட்களாகவே திகழ்கின்றன. அவற்றை தவிர்த்து இயற்கையான முறையில் நாம் பயன்படுத்தினால் தான் நம்முடைய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் காலையில் அனைவரும் எழுந்த உடனே உபயோகப்படுத்தக்கூடிய பற்பசை அதாவது டூத் பேஸ்ட் என்பது எந்த அளவிற்கு இயற்கையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நாமும் ஆரோக்கியமாக இருப்போம். அப்படிப்பட்ட பற்பசையை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் எப்படி தயார் செய்வது என்று தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மூலிகை பற்பசை தயார் செய்யும் முறை
அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் ஆலங்குச்சி, வேப்பங்குச்சி போன்றவற்றை வைத்து தான் பல் துளக்கினார்கள். அவர்களின் பற்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. பற்கள் ஆரோக்கியமாக இருப்பதன் மூலம் அவர்களுடைய செரிமான சக்தியும் நன்றாக இருந்தது. அதன் மூலம் அவர்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் யாரும் அந்த முறையில் தங்களுடைய பற்களை துளக்குவது கிடையாது.
– Advertisement –

கடைகளில் பலவிதமான பற்பசைகள் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி இது நன்றாக இருக்குமா? அது நன்றாக இருக்குமா என்று மாற்றி மாற்றி பல்வேறு நிறங்களில் வாங்கி உபயோகப்படுத்துகிறோம். இதில் என்னதான் இந்த பொருட்கள் இருக்கிறது அந்த பொருட்கள் இருக்கிறது என்று கூறினாலும் அதில் கண்டிப்பான முறையில் கெமிக்கல் கலந்துதான் இருக்கும். அதனால் தான் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பற்களில் பாதிப்பு ஏற்பட்டு விரைவிலேயே பற்களை இழக்க கூடிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். அதை தவிர்த்து பற்களை பாதுகாப்பதற்கு வீட்டிலேயே தயார் செய்யும் ஒரு பற்பசை பற்றி தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.
இதற்கு தேவைப்படக்கூடிய பொருட்கள் அனைத்துமே எளிமையான முறையில் நாட்டு மருந்து கடைகளிலோ அல்லது நாமே தயார் செய்யும் வகையிலோ தான் இருக்கும். இதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய பொருட்கள் கரித்தூள் இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக வேப்ப இலை பொடி இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக துளசி பொடி இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இலவங்க பொடி இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் உப்பு ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
– Advertisement –

இதை அனைத்தையும் ஒரு பௌலில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு இது ஒரு பேஸ்ட் பதத்திற்கு வருவதற்கு சுத்தமான செக்கிலாட்டிய தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக கலந்து கொண்டு இருக்க வேண்டும். பேஸ்ட் பாதம் வந்த பிறகு இதை ஒரு கண்ணாடி பாட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலையில் இந்த பற்பசையை நாம் உபயோகப்படுத்தி பற்களை தேய்க்கும் பொழுது நம்முடைய வாயில் இருக்கக்கூடிய கிருமிகளும் பற்களில் இருக்கக்கூடிய கிருமிகளும் முற்றிலும் நீங்கும். ஈறுகள் வலுவடைந்து பற்கள் உறுதியாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே:எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வழி
மற்றவர்கள் இந்த பேஸ்டில் வேப்பிலை இருக்கிறது, இந்த பேஸ்டில் உப்பு இருக்கிறது, இந்த பேஸ்டில் கிராம்பு இருக்கிறது என்று கூறி அதை வாங்குவதற்கு பதிலாக நாமே அதை செய்து உபயோகப்படுத்தினோம் என்றால் அது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் அல்லவா? முயற்சி செய்து பலன் பெறுங்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

– Advertisement –








Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top