
– Advertisement –
வருடத்தின் கடைசி மாதமான பங்குனி மாதத்தின் வளர்பிறை பிரதோஷமும் இந்த தமிழ் வருடத்தின் கடைசி பிரதோஷமாக திகழக்கூடிய பிரதோஷம் என்பது ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது. வியாழக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய இந்த பிரதோஷ நாளை குபேர பிரதோஷம் என்றும் குரு பிரதோஷம் என்றும் கூறுவது உண்டு. அப்படிப்பட்ட நாளில் நாம் செய்யக்கூடிய சிவ வழிபாடு என்பது பின்வரும் மாதங்களில் சிறப்பான யோகத்தை பெறுவதற்கு உதவும் என்று கூறலாம். யோகத்தோடு மட்டுமல்லாமல் அதிர்ஷ்டத்தையும் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் கூற வேண்டிய சிவ மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
அதிர்ஷ்டம் பெற சிவ மந்திரம்
சிவபெருமானுக்கு உகந்த நாளாக திகழக்கூடியது தான் பிரதோஷம். பிரதோஷம் எந்த கிழமையில் வருகிறதோ அதற்கேற்றார் போல் பிரதோஷத்தின் பலனும் மாறுபடும். அந்த வகையில் இந்த பங்குனி மாதத்தின் வளர்பிறை பிரதோஷம் என்பது வியாழக்கிழமையில் வருவதால் குபேர பகவானுக்கும், குரு பகவானுக்கும் உகந்த பிரதோஷமாக இந்த பிரதோஷம் திகழும். இந்த நாளில் பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு சிவபெருமானின் அருளோடு மட்டுமல்லாமல் குபேரரின் அருளும் குரு பகவானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறலாம். அப்படிப்பட்ட நாளில் அதிர்ஷ்டத்தை பெறுவதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
– Advertisement –
பொதுவாகவே ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் மாலை நேரத்தில் வரக்கூடிய பிரதோஷ நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது என்பது சிவபெருமானின் அருளோடு மற்ற பிற தெய்வங்களின் அருளையும் பெறுவதற்கு உதவும் என்று கூறப்படுகிறது. மேலும் பிரதோஷ நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலைகளை வாங்கித் தருவதும் சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்காக பொருட்களை வாங்கி தருவதும் பல மடங்கு பலனைத் தரும் என்றே கூறப்படுகிறது. இவை அனைத்தும் அனைவருக்கும் தெரிந்தது. அப்படிப்பட்ட பிரதோஷ நாளில் நாம் செய்யக்கூடிய மந்திர வழிபாடு என்பது நமக்கு பல மடங்கு பலனை தரும். அதிலும் ஒரு சில குறிப்பிட்ட மந்திரங்களை நாம் கூறுவதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர்வதற்குரிய வழி கிடைக்கும். மேலும் நாம் வேண்டிய வரமும் கிடைக்கும்.
அந்த வகையில் இதுவரை எந்தவித நற்பலனையும் அனுபவிக்காமல் கஷ்டத்தில் இருப்பவர்கள் துரதிர்ஷ்டசாலியாக திகழ்பவர்கள் இந்த ஒரு மந்திரத்தை குபேர பிரதோஷ நாளன்று 508 முறை கூறும் பொழுது அவர்களை தேடி அதிர்ஷ்டம் வரும். இந்த மந்திரத்தை பிரதோஷ நேரமான 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் வீட்டு பூஜை அறையில் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு கூறலாம்.
– Advertisement –
ஒருவேளை இந்த நேரத்தை தவறவிட்டவர்கள் மாலை 6:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் வடக்கு திசை பார்த்தவாறு இந்த மந்திரத்தை கூறலாம் அல்லது சிவாலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் எந்த நேரத்தில் சிவாலயத்திற்கு செல்கிறீர்களோ அந்த நேரத்தில் அந்த ஆலயத்திலேயே அமர்ந்து இந்த மந்திரத்தை கூறலாம்.
மந்திரம்
“ஓம் அங் சிவாய நம”
இதையும் படிக்கலாமே:வாழ்க்கையை மாற்றும் பங்குனி உத்திர மந்திரம்
முழு மனதோடு சிவபெருமானை நினைத்து இந்த ஒரு மந்திரத்தை குபேர பிரதோஷ நாள் அன்று கூறுபவர்களுக்கு அவர்கள் வாழ்வில் இதுவரை இருந்து வந்த துரதஷ்டம் அனைத்தும் தூரச்சென்று அதிர்ஷ்டம் அவர்களை தேடி வரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam