ஐஸ்வரியம் பெருக கூற வேண்டிய மந்திரம்

ஐஸ்வரியம் பெருக கூற வேண்டிய மந்திரம்

Qries





– Advertisement –

பங்குனி மாதம் என்பது சிறப்பு மிகுந்த மாதமாக கருதப்படுகிறது. அப்படி சிறப்பு மிகுந்த மாதத்தில் சிறப்பு மிகுந்த நாளாக திகழ்வதுதான் பங்குனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி. பங்குனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி இந்த வருடம் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் அந்த வழிபாட்டிற்கு அதிக அளவில் பலன் கிடைக்கும். அந்த வகையில் சகல ஐஸ்வர்யமும் பெருகுவதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஐஸ்வரியம் பெருக மந்திரம்
சந்திர பகவானின் ஆதிக்கம் மிகுந்த நாட்களாக திகழக்கூடியது தான் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள். அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாடு நமக்கு அதிக அளவில் பலனைத் தரும். எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் அந்த நாளில் வழிபடலாம். அதிலும் குறிப்பாக பௌர்ணமி தினத்தில் அம்மனை வழிபாடு செய்வது என்பது அதீத சக்தி வாய்ந்த ஒன்றாகவே திகழ்கிறது. அந்த வகையில் சகல ஐஸ்வரியத்தையும் பெறுவதற்கு அம்மனை நினைத்து கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –

இந்த மந்திரத்தை ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி முழுவதும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூறலாம். சந்திரன் வந்த பிறகுதான் கூற வேண்டும் என்று எந்த நிபந்தனையும் கிடையாது. காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கச் செல்வதற்கு முன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை கூறலாம். ராகு காலம் எமகண்ட நேரத்தை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த மந்திரத்தை வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு சொல்லக்கூடாது. அதேபோல் பயணங்களை மேற்கொள்ளும் பொழுதும் சொல்லக்கூடாது. வீட்டிற்கு வெளியே வந்தோ அல்லது மொட்டை மாடியில் அமர்ந்தோ அல்லது பால்கனியில் அமர்ந்தோ வானத்தைப் பார்த்தவாறு இந்த மந்திரத்தை கூற வேண்டும். வடக்கு திசை பார்த்து அமர்ந்து கொண்டு வானத்தைப் பார்த்து இந்த மந்திரத்தை முழுமனதோடு கூறுபவர்களுக்கு அம்பிகையின் அருளால் அனைத்து விதமான ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
– Advertisement –

இந்த மந்திரத்தை அருகில் இருக்கக்கூடிய அம்மன் ஆலயத்திற்கு சென்று அங்கு அமர்ந்து கொண்டு வானத்தைப் பார்த்தும் கூறலாம் அப்படி கூறுவதன் மூலம் பல விதமான அற்புத பலனை பெற முடியும். மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை முழு மனதோடு 11 முறை கூறுவதன் மூலம் ஐஸ்வரியம் பெருகுவதோடு அஷ்ட லட்சுமிகளின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும்.
மந்திரம்
“ஓம் ஐம் புவனேஸ்வரி தாயே போற்றி ஓம்”
இதையும் படிக்கலாமே:அதிர்ஷ்டம் பெற கூற வேண்டிய சிவ மந்திரம்மிகவும் எளிமையான இந்த அம்மனின் மந்திரத்தை முழுமனதோடு பௌர்ணமி தினத்தன்று கூறுபவர்களுக்கு அஷ்ட லட்சுமிகளின் அருளும் ஐஸ்வரியமும் பெருகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

– Advertisement –








Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top