
நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தெய்வம் குலதெய்வமாக இருக்கும். அந்த குலதெய்வத்தை நாம் முழுமனதோடு வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும். மேலும் எந்தவித தடைகளோ, தடங்கல்களோ, துன்பங்களோ வராமல் அது நம்மை காக்கும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட குலதெய்வம் நமக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் என்றும் நம்முடனே இருந்து நம்மை காக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.பொதுவாகவே குலதெய்வ வழிபாடு என்பது சிறப்பான ஒன்று என்று நம் அனைவருக்கும் தெரியும். குலதெய்வத்தின் அருள் கிடைத்தால் தான் மற்ற தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைக்கும் என்றும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால் குலதெய்வத்தை அனுதினமும் வழிபாடு செய்ய வேண்டும். மேலும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது சகல நன்மைகளையும் உண்டாகும். அருகில் குலதெய்வத்தின் ஆலயம் இல்லை என்பவர்கள் வருடத்திற்கு ஒரு முறையோ, ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ, குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது என்பது அவர்கள் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்க்க உதவும். – Advertisement -குலதெய்வம் தெரிந்தவர்கள் குலதெய்வத்தின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யலாம். குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்வது? அப்படிப்பட்டவர்களும் பின்வரும் இந்த மந்திரத்தை தினமும் கூற ஏதாவது ரூபத்தில் அவர்களின் குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியவரும். மேலும் முழு மனதோடு எந்த தெய்வமாக இருந்தாலும் என்னை காக்கக்கூடிய குலதெய்வம் என்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்து கூறுபவர்களுக்கு அவர்களை அறியாமலேயே அவர்களின் குலதெய்வம் அவர்களுடன் இருந்து காப்பாற்றும் என்றே கூறலாம்.இந்த மந்திரத்தை தினமும் கூற வேண்டும். காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு முதலில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்து விட்டு கையில் விபூதியை எடுத்து வைத்துக்கொண்டு குலதெய்வத்தின் பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை குறைந்தபட்சம் மூன்று முறையாவது கூறி அந்த விபூதியை நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும். – Advertisement – இப்படி இந்த மந்திரத்தை கூறி விபூதியை பூசுவதன் மூலம் நம்முடைய குலதெய்வம் நம்முடனே இருந்து நம்மை காக்கும். அதிலும் குறிப்பாக பௌர்ணமி தினத்திலும், அமாவாசை தினத்திலும் 108 முறை இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்யும் பொழுது குலதெய்வம் நம்முடைய வீட்டில் குடியேறி நமக்கு சிறப்பான வாழ்க்கையை அருளும்.மந்திரம்“ஓம் தீர்க்க நேர்தாய வித்மஹேகேல ஹஸ்தாய தீமஹிதந்நோ குலதேவதா ப்ரசோதயாத்”இதையும் படிக்கலாமே:சகல செல்வமும் பெற்று சிறப்பாக வாழ முருகன் மந்திரம்குலதெய்வத்தை முழுமனதோடு நினைத்து தினமும் இந்த மந்திரத்தை கூறி வருபவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இதுவரை அவர்கள் பட்ட கஷ்டங்களும் அவர்களுடைய செயல்களில் இருந்த தடைகளும் முற்றிலும் நீங்கும் அனைத்து விதமான சுகபோகத்தையும் அனுபவிக்கும் யோகம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam