கொடுத்த கடன் தொகை திரும்ப கிடைக்க மந்திரம்

கொடுத்த கடன் தொகை திரும்ப கிடைக்க மந்திரம்

Qries

– Advertisement –

ஒருவரிடம் பணம் இருந்து விட்டால் அவரால் நினைத்ததை அனைத்தையும் செய்ய முடியும். அதே சமயம் பணம் இல்லாவிட்டால் எதையும் செய்ய முடியாது. இந்த உலகில் பணத்திற்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. அப்படி ஒருவரால் தனக்கு வேண்டியவற்றை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் பொழுது பிறரிடம் இருந்து கடனாக பணத்தை வாங்குவார்கள். அப்படி வாங்கிய பணத்தை திரும்ப தருவதற்கு பலரும் முயற்சி செய்தாலும் ஒரு சிலர் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே கடனை வாங்கி இருப்பார்கள். அப்படி ஏமாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் தாங்களே வந்து கடன் தொகையை திருப்பித் தருவதற்கு எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
மந்திர உச்சரிப்பு என்பது மிகப்பெரிய செயலாக திகழ்கிறது. ஓம் என்பது கூட மந்திரம் தான். எந்த மந்திரத்தை நாம் முழுமனதோடு எதை நினைத்து உச்சரிக்கிறோமோ அது நடக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில மந்திரங்களை பல விஷயங்களுக்காக நாம் பயன்படுத்த முடியும். ஒரே மந்திரத்தை நாம் எந்த வகையில் உச்சரிக்கிறோமோ அதற்கேற்றார் போல் பலனை நம்மால் பெற முடியும் என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது.
– Advertisement –

அந்த வகையில் இந்த பதிவிலும் நாம் ஒரு மந்திரத்தை தான் பார்க்கப் போகிறோம். அந்த மந்திரத்தை நாம் எதை நினைத்து உச்சரிக்கிறோமோ அது நம்மிடம் வருவதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று கூறப்படுகிறது. நாம் கொடுத்த பணம் நமக்கு திரும்ப வர வேண்டும் என்றாலோ அல்லது நாம் உழைத்து சம்பாதித்த பணம் நம்மிடம் திரும்ப வர வேண்டும் என்றாலோ வேறு ஏதாவது பொருட்களோ வேலையோ எதுவாக இருந்தாலும் அது நம்மிடம் வரவேண்டும் என்று நாம் நினைத்தோம் என்றால் அதை நம்மிடம் வர வைப்பதற்கு இந்த மந்திரம் உதவி செய்யும்.
குறிப்பாக இந்த மந்திரத்தை நியாயமான வேண்டுதலுக்காக தான் பயன்படுத்த வேண்டுமே தவிர்த்து நியாயமற்ற பேராசைமிக்க வேண்டுதலை வைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. நாம் ஒருவரிடம் பணத்தை கொடுத்து விட்டோம். அவர் நம்மிடம் வாங்கிய பணத்தை திரும்பத் தராமல் இருக்கிறார் என்றால் அவரின் பெயரை உச்சரித்து அவரிடம் கொடுத்த பணம் நம்மிடம் வரவேண்டும் என்று மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
– Advertisement –

மந்திரம்
ஓம் ரீங் ஆகர்ஷிய ஆகர்ஷிய கொடுத்த நபரின் பெயர் தொகை ஆகர்ஷிய ஆகர்ஷிய
– Advertisement –

உதாரணமாக தரணி என்பவரிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் வரவேண்டும் என்று இருந்தால் “ஓம் ரீங் ஆகர்ஷிய ஆகர்ஷிய தரணியிடம் கொடுத்த பத்தாயிரம் ரூபாய் ஆகர்ஷிய ஆகர்ஷிய” என்று கூற வேண்டும்.
இந்த மந்திரம் விரைவிலேயே பலன் தருவதற்கு சுத்தமான ஸ்படிக மாலையை வாங்கிக்கொண்டு அதை கையில் வைத்துக்கொண்டு காலை சூரிய உதயத்தின் பொழுதும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் 108 முறை கூறி வர விரைவிலேயே யாரிடமிருந்து பணம் வர வேண்டுமோ அந்த பணம் வந்து சேரும்.
இதையும் படிக்கலாமே: எதிரிகள் தொல்லை நீங்க ஹனுமன் மந்திரம்
மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை முழு நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக 48 நாட்கள் உச்சரிப்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் அந்த 48 நாட்களுக்கு உள்ளாகவே கொடுத்த பணம் வந்துவிடும்.

– Advertisement –

Qries
Scroll to Top