– Advertisement –
அடியும் முடியும் தெரியாத ஜோதி மயமான தெய்வமாக திகழக்கூடியவர்தான் சிவபெருமான். அப்படிப்பட்ட சிவபெருமானின் அருளை யார் ஒருவர் பரிபூரணமாக பெறுகிறார்களோ அவர்களுக்கு மறு பிறவி என்பதே இருக்காது. அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்தவராக திகழக்கூடியவர் தான் சிவபெருமான். பற்றற்ற நிலையை ஏற்படுத்துபவராகவும் இவர் திகழ்கிறார். அதனால் இவரை பலரும் வழிப்பட யோசிப்பார்கள். ஆனால் இவரிடம் நாம் எதை வேண்டி வழிபாடு செய்கிறோமோ அதை தரக்கூடிய ஆற்றல் மிகுந்தவர் ஆகவே திகழ்கிறார். இதற்கு நமக்கு அவர் மீது உண்மையான அன்பு ஒன்று இருந்தால் போதும். அப்படி முழு மனதுடன் எந்த மந்திரத்தை கூறினால் சிவபெருமானின் அருள் கிடைக்கும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சிவன் அருள் பெற மந்திரம்
சிவபெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. அவர் எந்த வடிவத்தில் இருக்கிறாரோ அந்த வடிவத்திற்கு ஏற்றார் போல் மந்திரங்கள் இருக்கின்றன. மூல மந்திரம், காயத்ரி மந்திரம் என்று பல இருந்தாலும் பொதுவாக பலராலும் சொல்லக்கூடிய மந்திரமாக திகழ்வதுதான் “ஓம் நமசிவாய” என்னும் பஞ்சாட்சர மந்திரம். இந்த மந்திரத்தை நாம் கூறினாலே நமக்கு நிறைய பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
– Advertisement –
இருப்பினும் சிவபெருமானின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், சிவனின் தீவிர பக்தனாக இருப்பவர்கள், அவருடைய அருளை பெற்று நலமுடன் சீரும் சிறப்புடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் கூறக்கூடிய மந்திரங்கள் என்றும் இருக்கிறது. அந்த மந்திரத்தை இத்தனை முறை பாராயணம் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.
வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு சிவபெருமானை மனதார நினைத்துக் கொண்டு ஒரே ஒருமுறை மட்டும் அவரை நினைத்து கூறினால் போதும். அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மேலும் நாம் என்ன வேண்டுதல் முன்வைத்து இந்த மந்திரத்தை கூறுகிறோமோ அந்த வேண்டுதலும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
– Advertisement –
அந்த மந்திரத்தை ஆனி மாத கடைசி திங்கட்கிழமையான இன்றைய தினம் மாலை 6:30 மணியில் இருந்து இரவு 10:30 மணிக்குள் ஒரே ஒருமுறை பூஜை அறையிலோ அல்லது சிவபெருமான் ஆலயத்திலோ, நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்து கூற வேண்டும். இயன்றவர்கள் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யலாம். இந்த மந்திரத்தை ஒரு முறை தான் கூற வேண்டும் என்று இல்லை. ஒரு முறையாவது கூற வேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளது. விருப்பம் இருப்பவர்கள் இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க சிவபெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ரஹ் பிரச்சோதயாத்
இதையும் படிக்கலாமே : எதிரி தொல்லை நீங்க பெருங்காய பரிகாரம்
இந்த எளிமையான மந்திரத்தை ஒரே ஒரு முறை இன்று மாலை பொழுதில் சிவபெருமானை நினைத்து கூறுபவர்களுக்கு சிவபெருமானின் அருளும் வேண்டிய வரமும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam