செல்வம் பெருக ஜூலை மாத மந்திரம்

செல்வம் பெருக ஜூலை மாத மந்திரம்

Qries

– Advertisement –

ஒவ்வொரு மாதமும் சிறப்பு மிகுந்த விரதங்கள் வரும். அந்த விரதங்களுக்குரிய தெய்வங்களை நாம் வழிபடுவதன் மூலம் அந்த மாதம் சிறப்பாக இருக்கும். இது ஒவ்வொரு ராசிகளுக்கும் வேறுபடும் என்றாலும் மாதத்தை பொறுத்தவரை சில மந்திரங்கள் நன்மையை தரும்.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மந்திரத்தை கூறுவது சிறப்பு என்றாலும் நம்முடைய குலதெய்வத்தின் நாமத்தையும், இஷ்ட தெய்வத்தின் நாமத்தையும் தினமும் உச்சரிப்பது என்பது பல நன்மைகளை நமக்கு கொண்டு வந்து சேர்க்கும். நன்மைகள் வரும் என்பதை விட நமக்கு வரக்கூடிய துன்பங்கள் நீங்கும் என்றுதான் கூற வேண்டும். இந்த மந்திரம் குறித்த பதிவில் ஜூலை மாதம் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
– Advertisement –

முருகன் வழிபாடு
ஜூலை மாதத்தில் ஆடி மாதம் பிறக்கப்போகிறது. அதில் மிகவும் விசேஷமாக கருதக்கூடியது தான் ஆடி கிருத்திகை. கிருத்திகை என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது .அதிலும் ஆடி கிருத்திகை என்பது மிகவும் விஷேசகரமான ஒன்றாக திகழ்கிறது. அதனால் இந்த ஜூலை மாதம் முழுவதும் நாம் முருகப் பெருமானுக்குரிய மந்திரத்தை உச்சரித்தோம் என்றால் அந்த மந்திரத்தின் பலனால் நமக்கு நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
முருகப் பெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. சாதாரணமாக முருகா என்று கூறினாலே அதற்குரிய பலன் நமக்கு கிடைக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஜூலை மாதத்தில் நாம் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை அதுவும் முருகனின் மந்திரத்தை மனதார கூற வேண்டும். எந்த நேரத்தில் கூற வேண்டும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் இதற்கு என்று ஒரு கணக்கு இருக்கிறது. ஜூலை மாதம் முடிவதற்குள் ஐந்தாயிரத்தி ஒருமுறை இந்த மந்திரத்தை கூறி இருக்க வேண்டும்.
– Advertisement –

உங்கள் வசதிக்கேற்ப ஒவ்வொரு நாளுக்கும் இத்தனை முறை மந்திரத்தை கூறுவோம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். காலையில் மட்டும் கூறுவதாக இருந்தாலும் அதற்கேற்ற மாதிரியும் காலையிலும் மாலையிலும் சேர்த்து கூறலாம் என்று இருந்தால் அதற்கேற்ற மாதிரியும் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்த மந்திரத்தை கூற வேண்டும். மூன்று வேளையும் கூறினால் மிகவும் சிறப்பு.
அதிலும் குறிப்பாக பிரம்ம முகூர்த்த நேரம், உச்சிப் பொழுதான பன்னிரண்டு மணி, மாலை பொழுதில் ஆறு மணிக்கு மேல் இந்த மூன்று நேரங்களிலும் கூறுவது என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. வீட்டில் இருப்பவர்களாய் இருக்கும் பட்சத்தில் மூன்று வேளையும் இந்த மந்திரத்தை கூறுவதாக இருந்தால் பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு கூறுங்கள். முருகப்பெருமானுக்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூறுவது என்பது மிகவும் சிறப்பு.
– Advertisement –

அவ்வாறு மூன்று வேளையும் தீபம் ஏற்றி கூறமுடியாது என்பவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மட்டுமாவது முருகப்பெருமானுக்கு என்று தனியாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூறலாம். மற்ற நேரங்களில் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அந்த இடத்தில் அமைதியாக அமர்ந்து இந்த மந்திரத்தை கூறுவது என்பது சிறப்பு. அப்படி இல்லாத பட்சத்தில் நாம் வேலை செய்து கொண்டு இருக்கும் பொழுதும் இந்த மந்திரத்தை மனதார உச்சரித்துக் கொண்டு இருக்கலாம்.
எந்த இடத்தில் இருந்து கூறுகிறோம் எவ்வளவு நேரம் கூறுகிறோம் எத்தனை முறை கூறுகிறோம் என்பதை விட எப்படி கூறுகிறோம் என்பதுதான் முக்கியம். மனதார முருகப்பெருமானை நினைத்து இந்த மந்திரத்தை கூறும் பொழுது அதற்குரிய பலனை நம்மால் பெற முடியும்.
மந்திரம்
ஓம் சரவணபவ ஓம்
இதையும் படிக்கலாமே:அங்கார கிருத்திகை முருகன் வழிபாடு
மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை ஜூலை மாதம் முடிவதற்குள் 5001 முறை கூறுபவர்களுக்கு செல்வநிலை உயரும். யோகம் உண்டாகும். தங்களுக்கு வரக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் முருகப்பெருமான் பார்த்துக் கொள்வார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top