செல்வ வளம் தரும் லட்சுமி மந்திரம்

Qries

– Advertisement –

நாளைய தினம் சித்திரை ஒன்றாம் தேதி இதை நாம் தமிழ் வருட பிறப்பாக ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறோம். அன்றைய தினத்தில் ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்து வீட்டிலும் வழிபாடு செய்து அறுசுவை உணவு படைத்து உண்டு இந்த வருடத்தை சிறப்பாக வரவேற்பது நம்முடைய வழக்கம்.
இவையெல்லாம் செய்வதற்கான காரணம் அன்றைய தினத்தில் நாம் நல்ல விஷயங்களையும் நல்லவற்றையும் செய்யும் பொழுது இந்த ஆண்டு முழுவதும் அதற்கான பலன் அனுபவிக்க முடியும் என்பது தான். அப்படி தான் இந்த மந்திர வழிபாடும்.
– Advertisement –

நாளைய தினம் உங்களுடைய வழிபாட்டின் போது இந்த ஒரு மந்திரத்தை சொல்லும் பொழுது வரும் ஆண்டு முழுவதும் செல்வ செழிப்போடும் வாழக் கூடிய யோகத்தை அன்னை மகாலட்சுமி தாயார் வழங்குவார் என்று சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் என்பது பற்றி மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
செல்வ வளத்தை அள்ளித் தரும் மகாலட்சுமி தாயார் மந்திரம்
பொதுவாக சித்திரை ஒன்றாம் தேதி அன்று அனைவரும் கனி காணுதல் என்னும் நடைமுறையை பின்பற்றி வருவது வழக்கம். ஒரு வருடத்தின் முதல் நாள் பிறக்கும் பொழுதே நாம் நல்ல மங்களகரமான பொருட்களையும் இனிப்புகளையும் தங்கம் வெள்ளி பணம் முதலியவற்றை முதன் முதலாக பார்க்க வேண்டும்.
– Advertisement –

இதனால் அந்த வருடம் முழுவதும் நமக்கு இது போன்ற யோகங்கள் நிறைந்து இருக்கும் என்பது தான் இந்த கனி காணுதலின் முக்கியமான காரணம். இந்த வழிமுறையை செய்பவர்கள் எப்பொழுதும் போல செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு நாளைய தினம் ஆலயம் சென்று வழிபாடு செய்பவர்கள் செய்யுங்கள். ஆனால் வீட்டில் இந்த ஒரு வழிபாட்டு முறை தவறாமல் செய்து விடுங்கள்.
தமிழ் வருடப்பிறப்பு என்பதால் கட்டாயமாக வீடு பூஜை அறை அனைத்தையும் சுத்தம் செய்து அலங்காரம் செய்து வைத்திருப்பீர்க.ள் அதனால் மறுபடியும் இதை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து ஒரு தட்டில் இந்த அகல் விளக்கை வைத்து விடுங்கள்.
– Advertisement –

அடுத்து இந்த தட்டை சுற்றி நல்ல வாசம் மிக்க மலர்களால் அலங்காரம் செய்து விட்டு அகலில் சுத்தமான பசு நெய் ஊற்றி தாமரைத் தண்டு திரி, பஞ்சு திரி இரண்டையும் ஒன்றாக சேர்த்து அன்னைக்கு முதலில் ஒரு நெய் தீபம் ஏற்றுங்கள். இந்த தீபம் கிழக்கு நோக்கி எரிய வேண்டும். ஏதேனும் ஒரு எளிமையான இனிப்பு நெய்வேத்தியத்தை அன்னைக்கு படைப்பது மிகவும் சிறந்தது. இவையெல்லாம் செய்த பிறகு இந்த மந்திரத்தை மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.

ஓம் ஸ்ரீம் ஸீரீம் ஸ்ரீம் மகாலக்ஷ்மியை நமஹ
இந்த மந்திரத்தை சொல்லும் போது நீங்கள் வடக்கு நோக்கி அமர்ந்து சொல்வது சிறப்பு. வழிபாடு முடிந்த பிறகு அன்னைக்கு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு நிறைவேத்தியத்தை வீட்டில் உள்ள அனைவரும் பகிர்ந்துஉண்ணுங்கள்.
இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற மந்திர வழிபாடு
தமிழ் வருட பிறப்பின் போது நீங்கள் செய்யும் இந்த ஒரு எளிமையான வழிபாடானது வரும் ஆண்டு முழுவதும் செல்வ செழிப்புடன் வாழக் கூடிய யோகத்தை தரும். அது மட்டும் இன்றி பணத்திற்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற்று வாழ்க்கையில் உயர இந்த மந்திர வழிபாடு உதவி புரியும் என்று சொல்லப்படுகிறது.

– Advertisement –

Qries
Scroll to Top