ஞானத்தைத் தரும் முருகன் மந்திரம் | Gnanathai tharum murugan manthiram

ஞானத்தைத் தரும் முருகன் மந்திரம் | Gnanathai tharum murugan manthiram

Qries

– Advertisement –

கலியுக தெய்வமாக கருதப்படுபவர் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை பல வேண்டுதலுக்காக பல வழிமுறைகளில் நாம் வழிபாடு செய்வோம். முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நாம் என்னென்ன வரங்களை கேட்டு வழிபாடு செய்கிறோமோ அந்த வரங்கள் அனைத்தையும் நமக்கு அருள்வார் என்பது பலரும் அனுபவபூர்வமாக கண்ட உண்மை. அப்படிப்பட்ட முருக பெருமானின் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவர்களுக்குரிய மந்திரங்கள் என்று இருக்கும். அந்த மந்திரங்களை நாம் உச்சரிப்பதன் மூலம் அந்த தெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். மேலும் சாதாரண வழிபாட்டை விட மந்திர வழிபாட்டிற்கு இன்னும் பலன்கள் அதிகமாகவே கிடைக்கும் என்று கூட கூறலாம். ஆனால் இதில் முழு மனதோடு மனதை ஒருநிலைப்படுத்தி எந்தவித கவனச் சிதறளும் இல்லாமல் கூற வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. அந்த வகையில் இன்று முருகன் மந்திரத்தை பார்ப்போம்.
– Advertisement –

முருகப்பெருமானுக்குரிய பாடல்கள் பல இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் கந்தர் அனுபூதி. கந்தர் அனுபூதியில் இருக்கக்கூடிய இந்த ஒரு பாடலை நாம் தினமும் முருகப்பெருமானை நினைத்து பாராயணம் செய்ய வேண்டும். அவ்வாறு பாராயணம் செய்வதற்கு முன்பாக நட்சத்திர கோலம் போட்டு அதில் சரவணபவ என்று எழுதி அதற்கு நடுவே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு பிறகு அந்த தீபத்தை பார்த்து இந்த பாடலை பாராயணம் செய்ய வேண்டும்.
இப்படி இந்த பாடலை பாராயணம் செய்வதன் மூலம் தேவர்களுக்கே குருவாக திகழக்கூடிய குரு பகவான் நமக்கும் குருவாக இருந்து நம்மை நல்வழிப்படுத்துவார். மேலும் திக்கற்று நிற்கும் சமயத்தில் நமக்கு நல்ல வழியை காட்டி சிறப்பான வாழ்க்கை வாழ செய்வார். பிறவாமை என்கின்ற ஒரு பெரிய கஷ்டத்தில் இருந்து நம்மை காப்பாற்றுவார். ஞானம் கிடைக்கும். முக்தியும் கிடைக்கும். அதே சமயம் முருகப்பெருமானின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
– Advertisement –

பாடல்:
…முருகன், தனிவேல் முனி, நம் குரு… என்றுஅருள் கொண்டு அறியார் அறியும் தரமோஉரு அன்று, அரு அன்று, உளது அன்று இலது அன்றுஇருள் அன்று ஒளி அன்று என நின்றதுவே.
பொருள்:
முருகப்பெருமான் உருவப் பொருளும் அன்று, அருவப் பொருளும் அன்று, உள்ள பொருளும் அன்று இல்லாத பொருளும் அன்று இருளும் அன்று ஒளியாகிய பொருளும் அன்று என்று சொல்லும் தன்மையில் உள்ள அப்பரம் பொருளே முருகப்பெருமான் என்றும் ஒப்பற்ற வேலேந்திய முனிவன் என்றும் நமது பரம குரு என்றும் அப்பரமனது திருவருளைக் கொண்டு அறியாமல் மற்ற வழிகளில் அறிய முடியுமோ? முடியாது.
– Advertisement –

இந்த பாடலை தினமும் ஒரு முறை மட்டும் நாம் உச்சரிக்கும் பொழுது முருகப்பெருமானின் அருளால் நம்முடைய சங்கடங்கள் தீருவதற்குரிய வாய்ப்புகள் உண்டாக்கும்.
இதையும் படிக்கலாமே காரிய சித்தி தரும் சித்தர் மந்திரம்
மிக எளிமையான தமிழில் இருக்கக்கூடிய இந்த முருகனின் பாடலை தினமும் பாடி வருபவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத நன்மைகள் ஏற்படும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top