– Advertisement –
கார்த்திகை மாதம் என்பது சிவபெருமானுக்குரிய மாதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட சிவபெருமானுக்கு திங்கட்கிழமை என்பது மிகவும் உகந்த கிழமையாக கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமையில் இருக்கக்கூடிய விரதத்தை சோமவார விரதம் என்று கூறுவதும் உண்டு. மேலும் அந்த நாளில்தான் அனைத்து சிவாலயங்களிலும் சங்காபிஷேகமும் நடைபெறும். அப்படிப்பட்ட சிறப்புமிகுந்த நாளில் நாம் வீட்டிலேயே எந்த தீபத்தை ஏற்று எப்படி வழிபட்டால் நம் தலைவிதி மாறும் அளவிற்கு மாற்றம் உண்டாகும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய தலையெழுத்தையோ அல்லது நம்முடைய விதியையோ நினைத்து வருத்தப்பட்ட நாள் என்று ஒன்று கண்டிப்பாக இருக்கும். இந்த விதி மட்டும் என் தலையில் எழுதி இருக்காமல் இருந்திருந்தால் நான் இவ்வளவு தூரத்திற்கு இருந்திருக்க மாட்டேன் என்று பலரும் புலம்பி கேள்விப்பட்டு இருப்போம். பலரும் இப்பொழுது இருக்கக்கூடிய சில பிரச்சினைகளால் அவர்களுடைய விதியை நொந்து கொண்டு இருப்பார்கள். அப்படி விதியை நொந்து கொண்டு இருக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்குரிய ஒரு பேராற்றல் மிகுந்த நாளாக தான் சோமவாரம் திகழ்கிறது. இந்த சோமவாரத்தில் எந்த முறையில் தீபம் ஏற்று எப்படி வழிபட்டால் நம்முடைய விதி மாறும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
– Advertisement –
கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய ஏதாவது இரண்டு திங்கட்கிழமை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி எடுத்து நம்முடைய தலையை வலது புறமாக எட்டு முறையும் இடது புறமாக எட்டு முறையும் சுற்றி நான்கு திசைகளிலும் வீட்டிற்கு வெளியே போட்டு விட வேண்டும். பிறகு வீட்டில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” என்னும் மந்திரத்தை 27 முறை கூற வேண்டும்.
அடுத்ததாக “ஓம் நமசிவாய நம நமசிவாய சிவ சிவ நாமசிவாய” என்னும் மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். காலையிலும் மதியத்திலும் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. மாலை 6 மணிக்கு 6 நெல்லிக்கனிகளை வாங்கி வந்து அதை இரண்டாக நறுக்கி நடுவில் இருக்கக்கூடிய விதையை நீக்கிவிட வேண்டும். இப்பொழுது அது மொத்தம் 12 அகல் விளக்காக தயாராக இருக்கும். அதற்குள் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
– Advertisement –
இந்த தீபத்திற்கு முன்பாக பச்சரிசியில் சிறிது இனிப்பு கலந்து நெய்வேத்தியமாக தயார் செய்து வைத்திருக்க வேண்டும். இந்த தீபத்திற்கு வில்வ இலைகளையும், மலர்களையும் வைக்க வேண்டும். பிறகு உங்களுடைய விதியை மாற்றும் அளவிற்கு எந்த செயல் நடைபெற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த செயலை ஒரு பிரியாணி இலையில் எழுதி இந்த தீபத்திற்கு முன்பாக வைத்துவிட்டு சிவபெருமானை முழுமனதோடு நம்பி சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை கூற வேண்டும்.
பிறகு உங்களுடைய பிரச்சனை என்னவோ எந்த பிரச்சனை தீர வேண்டுமோ அதை சிவபெருமானிடம் முழு மனதோடு அந்த தீபத்தை பார்த்தபடி கூறவேண்டும். பிறகு அந்த பிரியாணி இலையை நெல்லிக்கனி தீபத்தில் காட்டி எரித்து விட வேண்டும். இப்படி கூறி முடித்து கற்பூர தீப தூப ஆராதனை அனைத்தும் காட்டி வழிபாட்டை நிறைவு செய்த பிறகு நாம் நெய்வேத்தியமாக வைத்திருந்த இந்த பச்சரிசியை நம் வீட்டிற்கு வெளியே வடக்கு பார்த்தவாறு சிறிதளவு தூவி விட்டு மீதம் இருக்கக்கூடிய நெய்வேத்தியத்தை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தந்து தங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
– Advertisement –
இரவு மிகவும் எளிமையான உணவை எடுத்துக் கொண்டு படுக்கச் செல்வதற்கு முன் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை ஒரு பேப்பரில் மடித்து நம்முடைய தலையணைக்கு கீழே வைத்துவிட்டு “ஓம் சந்திரமௌலீஸ்வராய நமஹ” என்னும் மந்திரத்தை 27 முறை கூறி உறங்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்ததும் இந்த பச்சரிசியை எடுத்து பார்த்து மறுபடியும் மந்திரததை 27 முறை கூறிய பிறகு அதை பறவைகளுக்கு தானமாக போட்டு விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: நாளை கார்த்திகை மாதம் 2வது வார சோமவார விரதம்
சக்தி மிகுந்த இந்த சோமவார தீப வழிபாட்டை மேற்கொள்ள கூடியவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய தலையெழுத்து மாறும் அளவிற்கு சிவபெருமானின் அருள் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam