நல்லது நடக்க மந்திரம் | Nallathu Nadakka manthiram in Tamil

நல்லது நடக்க மந்திரம் | Nallathu Nadakka manthiram in Tamil

Qries

– Advertisement –

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமக்கு நன்மை தருவதாக அமைய வேண்டும் என்று தான் நினைத்து செய்வோம். அதற்காகத்தான் ஆலயம் செல்வது வழிபாடுகள் செய்வது வீட்டில் பூஜைகள் பரிகாரங்கள் என அனைத்தும் செய்கிறோம். நல்லது எனில் நாமும் நம்முடைய சுற்றத்தாரும் சேர்ந்து மகிழ்ந்திருப்பது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் குறிப்பாக நல்ல வேலையாக இருக்கலாம் திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஏன் இன்னும் சிலருக்கு பெரிய பணக்காரராக வேண்டும் வீடு வாசல் அமைய வேண்டும் இப்படியான ஆசைகள் கூட இருக்கலாம். இது அவரவர் மனதின் விருப்பத்திற்கு ஏற்ப அமையும். இப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும் எனில் அவர்களுக்கு நல்ல நேரம் நல்ல வாய்ப்புகள் வர வேண்டும். அதை எப்படி பெற வேண்டும் என்பதை தான் மந்திரம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
– Advertisement –

நல்லது நடக்க மந்திரம்இன்று ஞாயிற்றுக்கிழமை 30.6.2024 சனி பகவான் ஆனவர் வக்கிர பெயர்ச்சி இன்றைய நாளில் அடைகிறார். இந்த நாளில் நாம் செய்யும் ஒரு சிறிய செயல் நம்முடைய வாழ்க்கையில் பெருமளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தரும் என்று சொல்லப்படுகிறது. அதைப் பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம் இந்த மந்திர வழிபாட்டை நம் வீட்டில் பூஜை அறையில் அமர்ந்தே செய்யலாம்.
முதலில் இந்த வழிபாடு செய்வதாக இருந்தால் இன்றைய தினத்தில் சுத்தமாக இருத்தல் மிகவும் முக்கியம். அடுத்ததாக வீட்டின் பூஜையறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். இப்பொழுது ஒரு மஞ்சள் நிற காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் நிற காகிதம் கிடைக்காத பட்சத்தில் வெள்ளை நிற காகிதத்தில் நான்கு முனைகளிலும் மஞ்சளை தடவி விடுங்கள். இந்த தீபத்தின் முன் அமர்ந்து உங்கள் குலதெய்வத்தை நினைத்து ஒரு முறை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
– Advertisement –

அதன் பிறகு ஸ்ரீ ராம ஜெயம் என்னும் இந்த மந்திரத்தை 108 முறை எழுதுங்கள். 109 ஆவது முறை ஸ்ரீ ராமர் பாதம் பணிகிறேன் என்ற வார்த்தையை எழுத வேண்டும். அதன் பிறகு இந்த காகிதத்தை பூஜை அறையில் வைத்து விடுங்கள். இந்த மந்திர வழிபாட்டை இன்றைய தினம் மதியம் ஒரு மணிக்குள் செய்து விட வேண்டும். இது மிகவும் முக்கியம். அதன் பிறகு இந்த காகிதத்தை நீங்கள் பூஜை அறையில் அப்படியே வைப்பதாக இருந்தாலும் வைக்கலாம் அல்லது பீரோவில் வைத்து விடலாம் பத்திரப்படுத்தி வைக்க முடியாதவர்கள் உங்கள் வீட்டின் அருகில் உள்ள ஆலயத்தின் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.
நீங்கள் எழுதும் இந்த மந்திர வார்த்தையானது இன்று மாலைக்குள் உங்களை தேடி நல்ல செய்தி ஒன்றை வரவேற்கும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி இந்த வக்கிர பெயர்ச்சியின் மூலம் ஏற்பட இருக்கும் துன்பங்களை இந்த மந்திர வழிபாடு பெருமளவு குறைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: பணக்கஷ்டமும் மன கஷ்டமும் தீர பெருமாள் வழிபாடு
நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த மந்திர வழிபாட்டை செய்து பலன் அடையலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top