– Advertisement –
இந்த உலகத்தில் பணம் இல்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது. எதை செய்வதாக இருந்தாலும் அதற்கு அடிப்படையான தேவையாக பணம் திகழ்கிறது. அதனால் தான் இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் பணத்தை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி பணத்தை சம்பாதிப்பதற்காக ஓடிக்கொண்டு இருந்தாலும் பலருக்கும் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு என்பது ஏற்படுவது இல்லை. அப்படி ஏற்படாத நபர்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடனில் மாட்டிக்கொள்கிறார்கள். அப்படி கடனால் பாதிக்கப்பட்டவர்களும் பணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு வழி தெரியாமல் கஷ்டப்படுபவர்களும் கூற வேண்டிய ஒரு அம்மன் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
பணவரவு அதிகரிக்க அம்மன் மந்திரம்
நாம் செய்யக்கூடிய முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும் என்றால் சரியான முயற்சிகளை விடாமல் செய்ய வேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் தெய்வத்தின் அருளும் பரிபூரணமாக கிடைக்க வேண்டும். அப்படி தெய்வத்தின் அருள் கிடைத்தால் மட்டுமே நாம் செய்யக்கூடிய முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். கடன் ரீதியான பிரச்சினைகள் தீருவதற்கும், பணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்குவதற்கும் நம்முடைய முயற்சியோடு சேர்த்து தெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படி நாம் தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது ஆண் தெய்வ வழிபாட்டை விட பெண் தெய்வ வழிபாடு என்பது விரைவில் பலனை தரக்கூடியதாக திகழ்கிறது.
– Advertisement –
தாய்மை உள்ளம் கொண்ட பெண் தெய்வங்களை நாம் மனதார வழிபாடு செய்யும்பொழுது அந்த தெய்வம் எளிதில் மனமிரங்கி வந்து நமக்கு மேற்கொண்டு சோதனைகளை தராமல் நம் கண்ணீரை துடைக்க ஓடோடி வந்து விடுவார்கள். அதனால் பெண் தெய்வ வழிபாடு என்பது விரைவிலேயே பலன் தரக்கூடிய வழிபாடாக திகழ்கிறது. இதற்காக நாம் பெரிதும் சிரமப்பட வேண்டியது இல்லை.
தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கொள்ள வேண்டும். சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் போல் உங்களுடைய வழிபாட்டை நீங்கள் நிறைவு செய்த பிறகு இந்த ஒரு மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி நாம் தினமும் உச்சரிக்கும் பொழுது நமக்கு பணவரவு என்பது அதிகரிக்கும். பணவரவு அதிகரித்தால் பணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தீரும். மேலும் கடன் பிரச்சனையும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
– Advertisement –
முழு நம்பிக்கையுடன் பரிபூரணமாக அம்மனை சரணாகதி அடைந்து இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் பணவரவு மட்டும் அல்லாமல் நம் வாழ்க்கையில் நல்ல மாற்றமும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த மந்திரத்தை கடன் பிரச்சினை தீர வேண்டும் என்பதற்காகவோ அல்லது பணப் பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காகவோ கூறுவது போலவே நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காகவும் கூறலாம். எந்த வேண்டுதல் நிறைவேற வேண்டுமோ அதை மனதார நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை கூறும்பொழுது அம்மனின் அருளால் அந்த வேண்டுதல் நிறைவேறும்.
மந்திரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் கோமதியே நமஹ
மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை அம்மனை முழுமனதோடு நினைத்து எந்தவித மன சஞ்சலமும் இல்லாமல் தினமும் கூறுபவர்களுக்கு அம்மனின் அருளால் அவர்கள் வேண்டியது கிடைப்பதோடு மட்டுமல்லாமல் பண வரவும் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam