
– Advertisement –
பங்குனி மாதம் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முக்கிய காரணம் அந்த மாதத்தில் வரக்கூடிய உத்திர நட்சத்திரம் தான். அந்த உத்திர நட்சத்திரம் வரக்கூடிய நாளை தான் நாம் பங்குனி உத்திரம் என்று கூறுகிறோம். பொதுவாகவே உத்திர நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் ஒன்றாக சேர்ந்து வரக்கூடிய நாளை தான் நம் பங்குனி உத்திரம் என்று கொண்டாடுவோம். ஆனால் இந்த வருடம் உத்திர நட்சத்திரம் நிறைவடைந்த பிறகு தான் பௌர்ணமி திதி என்பது தொடங்குகிறது. இருப்பினும் பங்குனி உத்திரம் என்பது அனைத்து விதமான தெய்வங்களின் ஆலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட நாளில் நாம் செய்ய வேண்டிய மந்திர வழிபாட்டை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வாழ்க்கையை மாற்றும் மந்திரம்
பங்குனி உத்திரம் என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடியத தெய்வம் முருகப்பெருமான் தான். முருகப்பெருமானுக்கு மட்டும் அல்ல அந்த நாள் என்பது சிவபெருமானுக்கும், பார்வதி அம்மனுக்கும், பெருமாளுக்கும், லட்சுமிதேவிக்கும் உரிய நாளாகவே கருதப்படுகிறது. அன்றைய நாளில் பல ஆலயங்களிலும் அங்கு இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு திருக்கல்யாணம் என்பது நடைபெறும். அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த நாளாக தான் அந்த நாள் திகழ்கிறது. அப்படிப்பட்ட நாளில் நம்முடைய வாழ்க்கை மாறுவதற்கு நாம் உச்சரிக்க வேண்டிய மந்திரத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
– Advertisement –
திருமண வைபவம் நடக்கக்கூடிய நாளன்று மணமக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அப்படி மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது நாம் என்ன கேட்டாலும் அது நமக்கு கிடைக்கும் அல்லவா? இதே தான் தெய்வங்களுக்கும் பொருந்தக் கூடியதாக திகழ்கிறது. அனைத்து தெய்வங்களின் திருமணம் நடைபெறக்கூடிய பங்குனி உத்திர நாள் அன்று அந்த தெய்வங்களை நாம் முழுமனதோடு வழிபாடு செய்ய நாம் வேண்டியது அனைத்தும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீர்வதற்கு சிவபெருமானை நினைத்து கூற வேண்டிய ஒரு மந்திரம் இருக்கிறது.
இந்த மந்திரத்தை பங்குனி உத்திர நாளான ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கூறவேண்டும். அதுவும் காலையில் கண் விழித்ததும் அந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டு கூற வேண்டும். பல் துலக்க வேண்டும், குளிக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் கிடையாது. கண் விழித்ததும் நாம் படுத்திருந்த அதே இடத்திலேயே அமர்ந்து கொண்டு சிவபெருமானை முழுமனதோடு நினைத்து இந்த ஒரு மந்திரத்தை ஐந்து முறை கூறினால் போதும். சிவபெருமானின் அருளால் நம் வாழ்க்கையில் நாம் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடும். அதோடு மட்டுமல்லாமல் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி புண்ணியம் சேர ஆரம்பிக்கும்.
– Advertisement –
மந்திரம்
“ஓம் ஸ்ரீயும் ஐயும் கிலியும் சிவயநம”
இதையும் படிக்கலாமே:ஆயிரம் மடங்கு பலன் தரும் ராம மந்திரம்
அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த பங்குனி உத்திர நாளென்று சிவபெருமானுக்குரிய இந்த ஒரு மந்திரத்தை முழுமனதோடு கூறுபவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி நிறைவான வாழ்க்கையை வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam