
– Advertisement –
ஒவ்வொரு வருடமும் புதிதாக பிறக்கும் பொழுது அந்த வருடம் சிறப்பாக அமைய வேண்டும் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுவோம். போன வருடத்தில் நாம் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி இந்த வருடத்திலாவது தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் உண்டாக வேண்டும் என்றும் நீண்ட நாட்களாக தடைப்பட்டு இருக்கக்கூடிய காரியங்கள் அனைத்தும் தடையின்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்றும் தான் ஆசைப்படுவோம். அப்படி பிறந்து இருக்கக்கூடிய இந்த தமிழ் வருடம் சிறப்பான வருடமாக அமைவதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
விசுவாவசு வருடம் சிறப்பாக அமைய
நாம் அனைவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் வழிபாடு என்பதை செய்து கொண்டு தான் இருக்கிறோம். நாம் செய்யக்கூடிய எந்த ஒரு செயலாக இருந்தாலும் அந்த செயலில் தெய்வத்தின் அருள் என்பது கண்டிப்பான முறையில் இருக்கும். சாதாரணமாக நம்மை அறியாமலேயே கூறக்கூடிய தெய்வங்களின் பெயர்களும் ஒருவிதமான வழிபாடு தான். அதேபோல் தீபமேற்றுவதும் ஒரு வகையான வழிபாடுதான். ஆலயத்திற்கு செல்வதும் ஒரு வகையான வழிபாடுதான். அந்த வகையில் நமக்கு பிடித்தமான தெய்வத்தின் மந்திரத்தை கூறுவதும் ஒருவகையான வழிபாடுதான். அந்த வகையில் இந்த பதிவில் முருகனின் அற்புதமான ஒரு மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
– Advertisement –
கலியுகத்தின் கடவுளாகத்திகழக் கூடியவர் முருகப்பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். பலரது இஷ்ட தெய்வமாகவும் குலதெய்வமாகவும் திகழக்கூடியவர்தான் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருக பெருமானின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் நம் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி வெற்றிக்கு மேல் வெற்றி கிடைத்து வாழ்க்கையில் சிறப்பாக முன்னேறுவதற்கும் அனு தினமும் முருகப் பெருமானை நினைத்து கூற வேண்டிய மந்திரம் ஒன்று இருக்கிறது.
இந்த மந்திரத்தை தினமும் ஆறு முறை மட்டும் கூறினால் போதும். எந்த நேரத்தில் கூற வேண்டும் என்று எந்தவித நிபந்தனையும் கிடையாது. முழுமனதோடு காலையில் எழுந்ததும் கூறலாம். இரவு படுக்கச் செல்லும் பொழுதும் கூறலாம். சாப்பிடுவதற்கு முன்பாகவும் கூறலாம். இப்படி எந்த நேரம் நமக்கு வசதியான நேரமாக இருக்கிறதோ? எந்த நேரத்தில் யாருடைய தொந்தரவும் இல்லாமல் இருக்கிறதோ? அந்த நேரத்தில் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை ஆறு முறை கூற வேண்டும்.
– Advertisement –
தொடர்ச்சியாக கூற வேண்டும் என்று நினைத்ததும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு சந்தேகம்தான் மாதவிடாய் சமயத்தில் எப்படி கூறுவது என்று. பெண்கள் மாதவிடாய் சமயத்திலும் இந்த மந்திரத்தை கூறலாம் என்பது மிகவும் சிறப்புக்குரியது. எந்த அளவிற்கு தொடர்ச்சியாக இந்த மந்திரத்தை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து நாம் கூறுகிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.
மந்திரம்
“ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஆறுமுகம் அனுதினம் தரும் ஏறுமுகம்”
இதையும் படிக்கலாமே:ஐஸ்வரியம் பெருக கூற வேண்டிய மந்திரம்முருகப்பெருமானின் பரிபூரணமான அருளை பெற்று வாழ்க்கையில் சிறப்பான ஒரு முன்னேற்றத்தை பெறுவதற்கு இந்த மந்திரத்தை முழுமனதோடு கூறினால் போதும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam