
– Advertisement –
உக்கிர தெய்வங்களின் வரிசையில் திகழக்கூடியவள் வாராகி அம்மன் என்றும் வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகள் மற்றும் துரோகிகளின் தொல்லை அறவே இருக்காது என்றும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட வாராகி அம்மனை பலரும் பஞ்சமி திதியில் தான் வழிபாடு செய்வார்கள். வீட்டில் வாராஹி அம்மனின் சிலை வைத்து வழிபாடு செய்வதாக இருந்தாலும் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதாக இருந்தாலும் வாராஹி அம்மனை முழுமனதோடு நினைத்து அவளிடம் சரணாகதி அடைந்து விட்டோம் என்றால் பிறகு நம்முடைய வாழ்க்கையில் எந்தவித கஷ்டமுமே இருக்காது. அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்குரிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அதிர்ஷ்டம் தரும் வாராகி மந்திரம்
எந்த ஒரு தெய்வத்தை நாம் வழிபாடு செய்வதாக இருந்தாலும் மிகவும் எளிமையான முறையில் அந்த தெய்வத்திற்குரிய மந்திரங்களை கூறி வழிபாடு செய்தோம் என்றால் அந்த தெய்வத்தின் அருளை நம்மால் விரைவிலேயே பெற்று விட முடியும். செவிக்கு உணவில்லாத பொழுது தான் வயிற்றுக்கு உணவு தேவைப்படும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? அந்த மாதிரி நாம் என்னதான் வழிபாடு செய்தாலும் அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தையும் பாடலையும் உச்சரித்தோம் என்றால் அந்த தெய்வம் விரைவிலேயே மனமிரங்கி வந்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றும். அந்த வகையில் நம் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தக் கூடிய வாராகி அம்மனின் மந்திரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
– Advertisement –
இந்த மந்திரத்தை எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் நாம் சொல்லலாம். காலை உணவு உண்பதற்கு முன்பாகவும், மதிய உணவு உண்பதற்கு முன்பாகவும், இரவு உணவு உண்பதற்கு முன்பாகவும் வாராகி அம்மனை முழுமனதோடு நினைத்து இந்த மந்திரத்தை கூற வேண்டும். பூஜை அறையில் அமர்ந்து தீபம் ஏற்றி வைத்து கூற வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. மனதிற்குள் வாராகி அம்மனை முழுமனதோடு நினைத்து மூன்று முறை கூறினால் போதும்.
இந்த மந்திரத்தை சுத்தம் இல்லாதவர்கள் கூறக்கூடாது. அதாவது பெண்கள் தீட்டு நேரத்தில் கூறக்கூடாது, ஏதாவது அசுப நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கும் பட்சத்திலும் கூறக்கூடாது. அதேபோல் அசைவம் சாப்பிடும்பொழுதும் இந்த மந்திரத்தை கூறக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் தரையில் அமர்ந்து கூறாமல் ஒரு விரிப்பை விரித்து அமர்ந்து கூற வேண்டும்.
– Advertisement –
எதைத் தொட்டாலும் அது நடக்கவில்லை எனக்கு கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் மட்டுமே வந்து கொண்டு இருக்கிறது என்ன செய்தும் பலன் இல்லை என்று புலம்புபவர்கள் இந்த மந்திரத்தை இந்த முறையில் தொடர்ச்சியாக 48 நாட்கள் கூறும் பொழுது அவர்களை தேடி அதிர்ஷ்டம் வரும் என்று கூறப்படுகிறது. 48 நாட்கள் மட்டும் அல்லாமல் அனுதினமும் வாராகி அம்மனை நினைத்தும் இந்த மந்திரத்தை கூறிக் கொண்டே இருக்கலாம்.
மந்திரம்
“ஓம் ஸர்வ வஸ்ய வாராஹ்யை நேத்ரத்ராயய வௌஷட்”
இதையும் படிக்கலாமே:தேய்பிறை சஷ்டி முருகன் மந்திரம்
மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை மூன்று முறை மட்டும் மூன்று வேளையும் கூறி வாராகி அம்மனை நினைப்பவர்களுக்கு வாராகி அம்மனின் அருளால் எந்தவித கஷ்டமும் ஏற்படாது. அவர்கள் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்திற்கு மேல் அதிர்ஷ்டம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam