
முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்கள் கண்டிப்பான முறையில் முருகப் பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரத்தை தவிர விடமாட்டார்கள். அதிலும் ஒரு சில மாதங்களில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரத்திற்கு அதிதளவு சக்தி இருக்கிறது. அப்படிப்பட்ட சக்தி மிகுந்த கிருத்திகையாக தான் ஆடி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை திகழ்கிறது. அதிலும் இந்த வருடம் ஆடி மாதத்திலேயே இரண்டு முறை கிருத்திகை வருகிறது என்பதால் இந்த இரண்டு நாட்களையும் நாம் தவறவிடாமல் வழிபாடு செய்யும்பொழுது முருகப்பெருமானின் பரிபூரண அருளைப் பெற முடியும். அதே சமயம் நாம் வேண்டிய வரமும் நமக்கு கிடைக்கும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஆடி கிருத்திகை நாளன்று கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.ஆடி கிருத்திகை மந்திரம் வழிபாடுமுருகப்பெருமானுக்கு என்று பலவிதமான மந்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது என்று கூட கூறலாம். அதிலும் குறிப்பாக முருகப்பெருமானின் மந்திரத்தையும் முருகப் பெருமான் கையில் இருக்கக்கூடிய வேலின் மந்திரத்தையும் நாம் உச்சரிக்கும் பொழுது முருகப்பெருமானும் முருகப்பெருமானின் வேலும் நமக்கு என்றென்றும் உறுதுணையாக இருந்து நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி நன்மைகளை தருவார்கள் என்று கூறப்படுகிறது. – Advertisement -இந்த மந்திரத்தை ஜூலை மாதம் 20ஆம் தேதி ஆடி மாதத்தின் நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் கூறுவது என்பது மிகவும் சிறப்பு. அதாவது காலையில் எழுந்து வெறும் வயிற்றில் இந்த மந்திரங்களை குறைந்தபட்சம் ஆறுமுறையும் அதிகபட்சம் 108 முறையும் கூறலாம். இந்த மந்திரத்தை கூறும் பொழுது முருகப்பெருமானை முழுமனதோடு நினைத்துக் கொண்டு கூற வேண்டும் என்றும் நம்முடைய வாழ்க்கையையே முருகப்பெருமானின் கையில் கொடுத்து விட்டோம் என்ற எண்ணத்துடனும் கூற வேண்டும். இப்படி நாம் கூறுவதன் மூலம் நம் வாழ்க்கையில் நமக்கு எது நல்லதோ அதை முருகப்பெருமான் அருள்வார் என்று நம்பப்படுகிறது. இதையே நாம் முழு சரணாகதி என்றும் கூறுகிறோம்.இந்த மந்திரத்தை கூறும் பொழுது தண்ணீர் கூட அருந்தி இருக்கக் கூடாது. இயன்றவர்கள் காலையிலேயே சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு ஒரு தீபத்தை ஏற்றி வைத்து கூறலாம். இயலாதவர்கள் முகத்தை மட்டும் கழுவி விட்டு அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை கூறலாம். எப்படி கூறுகிறோம் என்பதை விட எந்த அளவிற்கு முழுமனதோடு முருகப்பெருமானை நம்பி கூறுகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம். – Advertisement – முதலில் வள்ளி தெய்வானையுடன் சேர்ந்து இருக்கக்கூடிய ஷண்முகரை மனதில் நிறுத்திக் கொண்டு முருகப் பெருமானின் “ஓம் சௌம் சண்முகாய நமஹ” என்னும் மந்திரத்தை ஆறு முறை கூற வேண்டும். பிறகு முருகப்பெருமானின் கையில் இருக்கக்கூடிய வேலை மனதில் நிறுத்தி “ஓம் ஐம் ரீம் வேல் காக்க” என்னும் மந்திரத்தை ஆறு முறை கூற வேண்டும். இது குறைந்தபட்ச எண்ணிக்கை தான் தங்களால் இயலும் பட்சத்தில் 108 முறை கூட இந்த மந்திரங்களை கூறலாம்.இதையும் படிக்கலாமே: ஆடி மாதம் கூற வேண்டிய மந்திரம்மிகவும் எளிமையான இந்த மந்திர உச்சாடலை முழுமனதோடு முருகப் பெருமானை நினைத்து அவரிடம் முழு சரணாகதி அடைந்து கூறுபவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் முருகனின் அருளால் அனைத்து நன்மைகளும் நடைபெறும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam