– Advertisement –
எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் அவர்களுக்கு ஏதாவது ஒரு நோய் வந்துவிட்டால் மற்றவர்களைப் போலவே தான் பாதிக்கப்படுவார்கள். நோயின் தாக்கம் என்பது ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே விதமாகத்தான் இருக்கும், ஒரே விதமான கஷ்டத்தை தான் தரும். வலி என்றால் அனைவருக்கும் வலிதான். கஷ்டம் என்றால் அனைவருக்கும் கஷ்டம் தான். எந்த நோயால் யார் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு ஒரே விதமான மருத்துவத்தை தான் மேற்கொள்ள முடியும். மருத்துவமனை வேண்டுமானாலும் வேறாக இருக்கலாம். ஆனால் மருத்துவம் என்பது ஒன்றாக தான் இருக்கும். அதனால் ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் நோய்களற்ற ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும். அப்படி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு உதவக்கூடிய ஒரு சிவ மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ மந்திரம்
படைக்கும் தெய்வமாக திகழக்கூடியவர் பிரம்மா, காக்கும் தெய்வமாக திகழக்கூடியவர் பெருமாள், அழிக்கும் தெய்வமாக திகழக்கூடியவர் சிவபெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். நம்முடைய கர்ம வினைகளை அழித்து மீண்டும் பிறவாமை வரத்தை தரக்கூடியவர் தான் சிவபெருமான். அப்படிப்பட்ட சிவபெருமானை நாம் வழிபாடு செய்யும் பொழுது கர்ம வினைகளின் காரணமாக நமக்கு ஏற்படக்கூடிய நோய்களையும் அவர் நீக்குவார் என்றே கூற வேண்டும். அப்படி நோய்களை நீக்குவதற்கு சிவபெருமானை நினைத்து கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
– Advertisement –
நாம் பிறவி எடுத்ததற்கு காரணமே நம்முடைய கர்ம வினைகள் தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் காரணமாக திகழ்வதும் கர்ம வினைகள் தான் என்பதும் நமக்குத் தெரியும். அந்த வரிசையில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய நோய்களுக்கு காரணமும் அவர்களுடைய கர்ம வினைகள் தான். அதனால் கர்ம வினைகளை நீக்குவதற்குரிய வழிகளை முதலில் கண்டறிந்து அந்த கர்ம வினைகளை நீக்கினால் தான் நமக்கு கர்ம வினைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் நீங்கும். அந்த வகையில் நம்முடைய கர்ம வினைகளை நீக்க நமக்கு அருள் புரியக்கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் சிவபெருமான்.
தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்துவிட்டு சிவபெருமான் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து வைத்து அதில் ஒரு வில்வ இலையையும் சிறிது விபூதியையும் போட்டு சிவபெருமானுக்கு முன்பாக வைத்துவிட்டு சிவபெருமானின் இந்த மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்வாறு பாராயணம் செய்து முடித்த பிறகு அந்த டம்ளரின் இருக்கக்கூடிய தண்ணீரை நாம் அப்படியே குடித்து விட வேண்டும். வில்வ இலை கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் வில்வ இலைக்கு பதிலாக துளசியை பயன்படுத்திக் கொள்ளலாம். வில்வ இலையிலும் துளசியிலும் பல மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதால் உடலில் இருக்கக்கூடிய நோய்களை நீக்குவதற்கு இதுவும் ஒரு காரணமாக திகழும். மேலும் அந்த தண்ணீரில் நாம் சிவபெருமானின் இந்த பஞ்சாட்சர மந்திரத்தை உருவேற்றிய பிறகு அருந்துவதன் மூலம் நமக்கு சிவபெருமானின் அருளால் நோய்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
– Advertisement –
மந்திரம்
“அங் சிவாய நம”
இதையும் படிக்கலாமே: வாழ்க்கை போராட்டத்தைப் போக்கும் காலபைரவர் வழிபாடு
இந்த மூன்றெழுத்து மந்திரத்தை முழுமனதோடு முக்கண்ணனான சிவபெருமானை நினைத்து தினமும் கூறுபவர்களுக்கு அவர்களுடைய உடலில் இருக்கக்கூடிய நோய்கள் அனைத்தும் நீங்கி ஆரோக்கியமான நீண்ட வாழ்க்கையை வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam