ஆரோக்கியமான வாழ்க்கை வாழ கூற வேண்டிய மந்திரம்

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ கூற வேண்டிய மந்திரம்

Qries


நாம் ஒவ்வொருவரும் நம்முடைய குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும், எந்தவித குறையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் படாத பாடு பட்டு கொண்டு இருக்கிறோம். எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் சம்பாதித்த பணத்தை நல்ல விதத்தில் செலவு செய்ய முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் சம்பாதித்த பணத்தில் பாதிக்கு மேல் மருத்துவ செலவாகவே சென்றுவிடும். அப்படி தீராத நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களும், அடிக்கடி மருத்துவ செலவால் சம்பாதித்த பணத்தை இழக்க கூடியவர்களும் வரலட்சுமி விரத நாளன்று கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.ஆரோக்கியமான வாழ்க்கை வாழ மந்திரம்மகாலட்சுமி தாயாரை நாம் வழிபாடு செய்யும்பொழுது செல்வ செழிப்பு உயரும் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதே மகாலட்சுமி தாயாரை நாம் ஒவ்வொரு விதத்தில் வழிபாடு செய்யும் பொழுதும் ஒவ்வொரு விதமான செல்வங்கள் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் எந்தவித நோய் நொடிகளும் தாக்காமல் இருப்பதற்கும் மருத்துவ செலவுகள் இல்லாமல் நிம்மதியாக வாழ்வதற்கும் வரலட்சுமி விரத நாள் அன்று கூற வேண்டிய மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரத்தை பற்றி இப்பொழுது பார்ப்போம். – Advertisement -இந்த மந்திர வழிபாட்டை ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்தில் கூற வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் கூற இயலாது என்பவர்கள் மாலை ஆறு மணியில் இருந்து பத்து மணிக்குள் கூற வேண்டும். ஆறு மணி என்றதும் சரியாக ஆறு மணிக்கு தொடங்காமல் சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு கூற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சில இடங்களில் ஆறு மணிக்கு சூரியன் அஸ்தமனம் ஆகாது என்பதால் சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு கூறும் பொழுது தான் இந்த மந்திரத்தின் பலனை நம்மால் முழுமையாக பெற முடியும்.வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். தனியாக தீபம் ஏற்ற முடியாது என்பவர்கள் நாம் எப்பொழுதும் ஏற்றக்கூடிய காமாட்சி அம்மன் தீபத்தை கூட ஏற்றி வைத்துவிட்டு இந்த வழிப்பாட்டை செய்யலாம். வடக்கு திசை பார்த்தவாறு ஒரு விரிப்பை விரித்து அதில் அமர்ந்து கொள்ளுங்கள். நமக்கு முன்பாக ஒரு டம்ளரில் சுத்தமான குடிக்கின்ற தண்ணீரை வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வரலட்சுமி தாயாரின் இந்த ஒரு மந்திரத்தை 111 முறை கூறவேண்டும். – Advertisement – இவ்வாறு கூறி முடித்த பிறகு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு நமக்கு முன்பாக இருக்கக்கூடிய அந்த தண்ணீரை நாமும் அருந்திவிட்டு நம் வீட்டில் இருக்கக்கூடிய நபர்களுக்கும் அருந்த கொடுக்க வேண்டும். வீட்டில் உடல் நலம் சரியில்லாமல் யாராவது இருந்தால் அவர்களுக்கு முழுமையாக அந்த தண்ணீரை கொடுக்க வேண்டும். இப்படி செய்யக்கூடிய இந்த மந்திர வழிபாட்டால் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைப்பதோடு சௌபாக்கியங்கள் அனைத்தும் நமக்கு ஒரு சேர கிடைக்கும்.மந்திரம்“ஓம் ஸ்ரீம் க்ரீம் க்லீம் ஐம் சௌபாக்ய லட்சுமியை நமஹ”இதையும் படிக்கலாமே: அஷ்ட ஐஸ்வர்யம் பெற தாந்த்ரீக பரிகாரம்சக்தி வாய்ந்த இந்த சௌபாக்கிய லட்சுமி மந்திரத்தை முழு மனதோடு அம்மனை நினைத்து யார் ஒருவர் வரலட்சுமி விரத நாளில் கூறுகிறார்களோ அவர்களுக்கு அனைத்துவித சௌபாக்கியங்களோடு ஆரோக்கியமான வாழ்க்கையும் அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top