எடுத்த காரியம் வெற்றி பெற வாராகி மந்திரம்

எடுத்த காரியம் வெற்றி பெற வாராகி மந்திரம்

Qries





– Advertisement –

ஏதாவது ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைத்து முயற்சி செய்யும்பொழுது ஏதோ ஒரு சூழ்நிலையில் அது தடைப்பட்டு அந்த காரியம் நடைபெறாமல் நின்றுவிடும். அந்த நிலை நமக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நாம் எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்காக காரியசித்தி மந்திரத்தை நாம் உச்சரிக்க வேண்டும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான காரியசித்தி மந்திரம் இருக்கும். நம்முடைய இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரத்தை கூறி வழிபாடு செய்த பிறகு நாம் அந்த காரியத்தை செய்ய தொடங்கும் போது அந்த காரியத்தில் வெற்றி உண்டாகும். அந்த வகையில் வாராகி அம்மனை நினைத்து கூற வேண்டிய காரிய சித்தி மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
எடுத்த காரியம் வெற்றி பெற வாராகி மந்திரம்
காரிய தடையை நீக்கக்கூடிய அம்மனாக திகழக்கூடியவள் வாராகி அம்மன் என்றும் நமக்கு இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லை நீங்கி துன்பத்திலிருந்து நம்மை காப்பாற்ற கூடியவளாகவும் இவள் திகழ்கிறார். அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்குரிய காரிய சித்தி மந்திரத்தை தினமும் 11 முறை நாம் உச்சரித்தோம் என்றால் நம் வாழ்வில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இந்த மந்திரம் என்ன? அதை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று இப்பொழுது பார்ப்போம்.
– Advertisement –

இந்த மந்திரத்தை வாராகி அம்மனுக்குரிய பஞ்சமி திதியில் அல்லது செவ்வாய் வெள்ளிக்கிழமையில் கூற ஆரம்பிக்கலாம். தினமும் 11 முறை உச்சரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் மட்டும் இரவு 7 மணிக்குப் பிறகு ஒரு நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்து அந்த தீபத்தை பார்த்தவாறு பதினோரு முறை கூற வேண்டும். அதற்குப் பிறகு தினமும் காலையிலோ, மாலையிலோ தங்களுடைய நேரத்தை பொறுத்து கூறலாம். தீபம் ஏற்றி வைத்து கூற வேண்டும் என்று எந்த நிபந்தனையும் கிடையாது. இந்த மந்திரத்தை அசைவம் சாப்பிட்டுவிட்டு கூறக்கூடாது. சுத்தமாக குளித்து முடித்த பிறகு தான் கூற வேண்டும். பெண்கள் மாதவிடாய் சமயத்தில் இந்த மந்திரத்தை கூறக்கூடாது.
அதேபோல் ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்காக செல்கிறோம் என்னும் பட்சத்தில் வீட்டில் ஒரு நல்லெண்ணெய் தீபத்தை தனியாக ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை 108 முறை வாராகி அம்மனை மனதார நினைத்துக் கொண்டு உச்சரித்துவிட்டு பிறகு சென்றோம் என்றால் அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி காரிய வெற்றி உண்டாகும். தினமும் இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் நம் வாழ்க்கையில் நாம் என்னென்ன காரியத்தை செய்கிறோமோ அவை அனைத்தும் நல்ல காரியங்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த காரியத்தில் வெற்றியும் உண்டாகும். மேலும் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
– Advertisement –

மந்திரம்
“ஸ்ரீம் பஞ்சமி சர்வசித்தி மாதா மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம”
இதையும் படிக்கலாமே:பிரதோஷ நாளன்று கூற வேண்டிய சிவ மந்திரம்.
மிகவும் எளிமையான அதேசமயம் அதீத சக்தி வாய்ந்த இந்த வாராகி அம்மனின் காரிய சித்தி மந்திரத்தை முழுமனதோடு உச்சரிப்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் எந்தவித காரிய தடையும் ஏற்படாமல் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

– Advertisement –








Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top