
முருகப்பெருமானை அனுதினமும் வழிபாடு செய்பவர்கள் பலர் இருந்தாலும் முருகப்பெருமானுக்கு உகந்த நாளில், திதியில், நட்சத்திரத்தில் வழிபாடு செய்பவர்கள் எண்ணில் அடங்காதவர்கள். அன்றைய தினத்தில் அருகில் இருக்கும் முருக ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்களை சாற்றி 6 தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் என்பது பலருக்கும் இருக்கும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் சஷ்டி திதி. சஷ்டி திதி தேய்பிறை, வளர்பிறை என்று இரண்டு சஷ்டி திதி வரும். இதில் ஜூலை மாதம் 16ஆம் தேதி ஆனி மாதத்தின் கடைசி நாள் தேய்பிறை சஷ்டி வருகிறது. இந்த நாளில் நம்மை சுற்றி இருக்கக்கூடிய எதிரிகள் விலகுவதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். தேய்பிறை சஷ்டி மந்திரம்ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் என்பது எந்த அளவிற்கு சிறப்போ அதேபோல் தான் ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளும் சிறப்பு வாய்ந்த நாளாகவே கருதப்படுகிறது. காரணம் அந்த மாதம் முழுவதும் நாம் அனுபவித்த நன்மைகளாக இருந்தாலும் கஷ்டங்களாக இருந்தாலும் அவற்றை நினைத்து அதிலிருந்து நமக்கு தேவையான அனைத்து பாடங்களையும் கற்று வருகின்ற காலத்தை சிறப்பான காலமாக மாற்றிக்கொள்ள அது உதவும். அப்படிப்பட்ட நாளாக தான் ஆனி மாதத்தின் 32 ஆம் நாள். அதாவது ஜூலை மாதம் 16ஆம் தேதி திகழ்கிறது. அன்றைய நாளில் தேய்பிறை சஷ்டி இருக்கிறது என்பதால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தேய்ந்து போக வேண்டும் நம்முடைய வாழ்க்கையில் இதுவரை இருந்த எதிரிகளின் தொல்லை விலக வேண்டும் என்று முருகப்பெருமானை வழிபாடு செய்யலாம். – Advertisement -அன்றைய தினம் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு நெற்றி நிறைய திருநீரை பூசி முருகப்பெருமானுக்கு முன்பாக தீபத்தை ஏற்றி வைத்து மந்திரத்தை கூற வேண்டும். தொடர்ச்சியாக முருகப்பெருமானுக்கு முன்பாக 108 முறை கூறலாம் அவ்வாறு கூறும் பொழுது முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்வது கூடுதல் சிறப்பை தரும். அதிக அளவில் எதிரிகள் தொல்லை இருக்கிறது, வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் நோக்கி செல்ல இயலவில்லை, தடைகள் வந்து கொண்டே இருக்கிறது, என்ன செய்தாலும் எதுவும் நடக்கவில்லை என்பவர்கள் அன்று முழுவதுமே இந்த மந்திரத்தை மனதிற்குள் கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.மாலை 6 மணிக்கு மேல் முருகப் பெருமானுக்கு முன்பாக தீபத்தை ஏற்றி வைத்து உங்களுடைய எதிரிகளின் தொல்லை முற்றிலும் நீங்க வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொண்டால் முருகப்பெருமாள் எதிரிகளின் தொல்லைகளை விலக்குவார் எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் சரி செய்வார். இந்த மந்திரத்தை பகல் முழுவதும் உச்சாடல் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அன்றைய தினம் உணவை தவிர்த்து விட்டு விரதம் இருந்து செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும். உணவை சுத்தமாக தவிர்க்க முடியாது என்று நினைப்பவர்கள் எளிமையான உணவை ஆகாரமாக எடுத்துக் கொண்டு விரதம் இருந்து முருகப்பெருமானின் மந்திரத்தை கூறி வழிபாடு செய்யலாம். – Advertisement – மந்திரம்“ஓம் சௌம் சரவணபவ”இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் நரசிம்மர் மந்திரம்மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை அனுதினமும் நாம் கூறலாம். அதிலும் குறிப்பாக தேய்பிறை சஷ்டி நாளில் கூறும் பொழுது இதற்கு அதீத பலன் உண்டாகும். இதன் மூலம் நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்யக்கூடிய அனைவரும் தவிடு பொடி ஆவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam