ஏழு ஜென்ம பாவங்களை நீக்கும் மந்திரம்

ஏழு ஜென்ம பாவங்களை நீக்கும் மந்திரம்

Qries





– Advertisement –

ஒருவர் பிறப்பு எடுப்பதற்கு காரணமே அவர் முன் ஜென்மத்தில் செய்த கர்ம வினைகள் தான் என்பது நம்முடைய புராணங்களில் கூறப்பட்ட உண்மை. மேலும் அந்த பிறப்பில் நாம் அனுபவிக்க கூடிய கஷ்டங்கள் அனைத்திற்குமே முன் ஜென்மத்தில் நாம் செய்த பாவங்களும் கர்ம வினைகளுமே காரணமாக அமைகின்றன. ஒருவருக்கு ஏழு ஜென்மங்கள் இருக்கும் என்றும் ஏழாவது ஜென்மத்தில் அந்த ஏழு ஜென்மத்திலும் நாம் செய்த அனைத்து விதமான கர்ம வினைகளையும் போக்குவதற்குரிய கஷ்டங்களை அனுபவிப்போம் என்றும் கூறப்படுகிறது.
அப்படி பல கஷ்டங்களை தரக்கூடிய முன் ஜென்ம பாவங்களை நீக்குவதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒருவருடைய வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டதாக தான் மந்திரங்கள் திகழ்கின்றன. இந்த மந்திரங்களை நாம் உச்சரிக்கும் முறையை பொருத்தும் மாறுபடும். எந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை எப்பொழுது கூறினால் என்ன பலன் கிடைக்கும் என்று பல இருக்கின்றன. அவற்றுள் நம்முடைய பாவ வினைகளை நீக்குவதற்கு உதவக்கூடிய மந்திரமாக கருதப்படுவது தான் சப்த கன்னிகளின் மந்திரம். இந்த மந்திரத்தை எப்படி கூறுவது என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
– Advertisement –

துர்க்கை அம்மனின் அவதாரமாக தோன்றியவர்கள் தான் சப்த கன்னிகள். இவர்கள் சண்ட முண்டர் என்னும் அசுரனை வதம் செய்வதற்காக உருவானவர்கள் என்று கூறப்படுகிறது. இன்றளவும் பல கிராமங்களில் காவல் தெய்வமாக இந்த சப்த கன்னிகள் திகழ்கிறார்கள். இதில் பிரசித்தி பெற்ற திகழக்கூடிய தெய்வமாக வாராகி அம்மன் இருக்கிறார். இருப்பினும் இந்த சப்த கன்னிகளையும் நாம் தொடர்ச்சியாக வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய தலையெழுத்தை மாறும் அளவிற்கு நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
இந்த சப்த கன்னிகளின் மந்திரத்தை என்றைக்கு வேண்டுமானாலும் உச்சரிக்க தொடங்கலாம். தொடர்ச்சியாக 7 நாட்கள் உச்சரிக்க வேண்டும். அதுவும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் உச்சரிப்பது என்பது அதீத பலனை தரும். வீட்டு பூஜை அறையில் சப்த கன்னிகளின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாக ஏழு தீபத்தை ஏற்றி வைக்கலாம் இயலாதவர்கள் ஒரு தீபத்தை மட்டும் ஏற்றி வைத்தாலே போதும். ஏற்றி வைத்து ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து இந்த மந்திரங்களை கூற வேண்டும்.
– Advertisement –

அப்படி வீட்டில் சப்த கன்னிகளின் படம் இல்லை என்பவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய துர்க்கை அம்மன் அல்லது அம்பாளின் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூறலாம். சப்த கன்னிகளின் மந்திரத்தை ஒரு முறை மட்டும் உச்சரித்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மி மந்திரம் ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே தேவர்ணாயை தீமஹிதந்நோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்

மகேஸ்வரி மந்திரம் ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹிதந்நோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்
கௌமாரி மந்திரம் ஓம் சிகி வாஹனாயை வித்மஹே சக்தி ஹஸ்தாயை தீமஹிதந்நோ கௌமாரி ப்ரசோதயாத்
வைஷ்ணவி மந்திரம் ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹிதந்நோ வைஷ்ணவீ ப்ரசோதயத்
வாராகி மந்திரம் ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹிதந்நோ வாராஹி ப்ரசோதயாத்
இந்திராணி மந்திரம்ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹிதந்நோ ஐந்திரீ ப்ரசோதயாத்
 
சாமுண்டி மந்திரம்ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே சூலஹஸ்தாயை தீமஹிதந்நோ சாமுண்டா ப்ரசோதயாத்
இதையும் படிக்கலாமே: லட்சுமி கடாட்சம் பெருக தீர்த்தம்
நம் தலையெழுத்தை மாற்றக்கூடிய ஏழேழு ஜென்ம பாவங்களை தீர்க்கக்கூடிய சப்த கன்னிகளின் மந்திரத்தை முழுமனதோடு தொடர்ச்சியாக ஏழு நாட்கள் உச்சரிப்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

– Advertisement –








Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top