
– Advertisement –
முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்கள் கண்டிப்பான முறையில் சஷ்டி தினத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அதே போல் கிருத்திகை நட்சத்திர நாளிலும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். முருகப்பெருமானுக்குரிய இந்த இரண்டு முக்கியமான தினங்களும் ஒரு சேர வரக்கூடிய அற்புதமான நாளாக தான் இன்று திகழ்கிறது. இன்று இரவு 12 மணிக்குள் முருகப்பெருமானின் எந்த திருநாமத்தை கூறி வழிபாடு செய்தால் ஏழேழு ஜென்ம பாவம் நீங்கும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஏழு ஜென்ம பாவம் நீங்க
பொதுவாகவே முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது முருகப்பெருமானுக்குரிய மந்திரங்களை கூறி வழிபாடு செய்வோம். அதேபோல் முருகப் பெருமானுக்கு கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல், சண்முக கவசம் என்று பலவிதமான கவசங்கள் இருக்கின்றன. அந்த கவசங்களையும் பாடி நாம் வழிபாடு செய்வோம். இருப்பினும் ஒரு சில சூட்சுமமான நாட்களில் ஒரு சில முருகப்பெருமானுக்குரிய சிறப்பு மிகுந்த திருநாமத்தை நாம் கூறும் பொழுது அந்த திருநாமத்தின் பலனால் நம்முடைய வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மாற்றம் உண்டாகும்.
– Advertisement –
இன்று சஷ்டி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புதமான நாள். இந்த நாளில் நாம் கண்டிப்பான முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் முருகப்பெருமானுக்குரிய மந்திரத்தை கூறி வழிபாடு செய்யும் பொழுது அந்த மந்திரத்தின் பலனால் நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும். அப்படி நாம் கூறக்கூடிய ஒரு முருகப்பெருமானின் திருநாமமானது நாம் மற்றும் நம்முடைய முன்னோர்கள் செய்த பாவத்தை நீக்கும்.
நாம் முன் ஜென்மத்தில் செய்த பாவத்தின் அடிப்படையில் தான் இந்த ஜென்மத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களும் வந்து கொண்டிருக்கிறது. அந்த பாவத்தை நீக்கி விட்டால் நமக்கு வரக்கூடிய கஷ்டங்களும் நின்றுவிடும் அல்லவா? அந்த பாவங்களை நீக்கக்கூடிய ஒரு அற்புதமான முருகப்பெருமானின் திருநாமம் ஒன்று இருக்கிறது. அந்த திருநாமத்தை இன்று இரவு 12 மணிக்குள் நாம் மனதார முருகப்பெருமானை நினைத்துக் கூறினாலே போதும் நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகி ஓடும் என்று கூறப்படுகிறது.
– Advertisement –
இந்த திருநாமத்தை குறைந்தபட்சம் 15 நிமிடத்தில் இருந்த அதிகபட்சம் 30 நிமிடம் வரை கூறலாம். எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து கூறலாம். எந்த திசையை பார்த்து வேண்டுமானாலும் அமர்ந்து கூறலாம். யார் வேண்டுமானாலும் கூறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. முழுமனதோடு வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானை மனதார நினைத்து என்றும் என்னுடன் நீயே இருக்க வேண்டும் என்று முருகப்பெருமானிடம் வேண்டிக் கொண்டு இந்த மந்திரத்தை கூறினாலே போதும். நம்முடைய ஏழு ஜென்ம பாவங்கள் தீருவதோடு நமக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறதோ அவை அனைத்தும் நாம் கேட்காமலேயே நமக்கு வந்து சேரும்.
மந்திரம்
“ஓம் அக்னி ஜன்மனே சுப்பிரமண்யாய நமஹ”
இதையும் படிக்கலாமே:வாழ்க்கையை மாற்றும் சிவ மந்திரம்
முருகப்பெருமானை முழுமனதோடு நினைத்து இன்று இரவு 12 மணிக்குள் இந்த ஒரு முருகப்பெருமானின் திருநாமத்தை கூறி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய பாவங்கள் நீங்கும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam