கடனை தீர்க்கும் வாராகி மந்திரம் | kadanai theerkum varahi manthiram in tamil

கடனை தீர்க்கும் வாராகி மந்திரம் | kadanai theerkum varahi manthiram in tamil



சாதாரண வழிபாட்டை விட மந்திர வழிபாட்டிற்கு அதிக அளவில் பலன் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் அதில் இருக்கக்கூடிய வார்த்தைகள் தான். அந்த வார்த்தைகளை நாம் சரியாக உச்சரித்தோம் என்றால் அந்த வார்த்தைகளின் பலனால் நாம் என்ன நினைத்து அந்த மந்திரத்தை கூறுகிறோமோ அது நமக்கு விரைவிலேயே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் முனிவர்கள் மந்திர வழிபாட்டில் அதிக அளவில் ஈடுபட்டார்கள். அப்படி மந்திர வழிபாடு செய்யும்பொழுது மனதை ஒருநிலைப்படுத்தி எந்த தெய்வத்தை நினைத்து மந்திரத்தை கூறுகிறோமோ அந்த தெய்வத்தை முழு மனதோடு நினைத்து கூற வேண்டும்.இந்த முறையில் வளர்பிறை பஞ்சமி தினத்தன்று வாராகி அம்மனை நினைத்து வாராகி அம்மனுக்குரிய இந்த ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தை கூறினால் போதும். நமக்கு இருக்கக்கூடிய எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் அந்த கடன் தீருவதற்குரிய வழியை வாராகி அம்மன் அருள்வார். அந்த மந்திரம் என்ன என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். – Advertisement -இந்த மந்திரத்தை வாராகி அம்மனுக்குரிய பஞ்சமி தினத்தன்று கூறவேண்டும். அதுவும் வராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு வரக்கூடிய நேரம் தான் உகந்த நேரம் என்பதால் மாலை 6 மணிக்கு மேல் இந்த மந்திர வழிபாட்டை நாம் செய்யலாம். இதற்கு நாம் வாராகி அம்மனின் படத்திற்கு முன்பாக தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். வாராகி அம்மனுக்கு கிழங்கு வகைகளை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மாதுளம் பழம் முத்துக்களை உதிர்த்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் ஒரு கிண்ணத்தில் சுத்தமான தேனையும் வைத்துக் கொள்ளுங்கள். வாராகி அம்மனுக்கு முன்பாக ஒரு கிண்ணத்தை வைத்துக்கொண்டு வாராகி அம்மனின் இந்த ஒரு மந்திரத்தை 1008 முறை கூறி மாதுளம் பழ முத்துக்களை தேனில் தொட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.முன்னதாகவே மாதுளம் பழ முத்துக்களை 1008 எண்ணிக்கை சரியாக எண்ணி வைத்து விட்டோம் என்றால் மந்திர எண்ணிக்கையும் மாதுளம் பழம் முத்துக்களின் எண்ணிக்கையும் சரிசமமாக இருக்கும். இப்படி நாம் மந்திரத்தை கூறி வாராகி அம்மனுக்கு மாதுளம் பழ முத்துக்களால் அர்ச்சனை செய்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி கடன் பிரச்சினை தீர்வதற்குரிய பணவரவை அருள வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். வழிபாடு முழுவதும் நிறைவடைந்த பிறகு நெய்வேத்தியமாக வைத்த கிழங்கு வகைகளையும் அர்ச்சனை செய்த மாதுளம் பழ முத்துக்களையும் வீட்டில் இருக்கக் கூடிய அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்க வேண்டும். – Advertisement – மந்திரம்“ஓம் ஹ்ரீம் வாராஹி”இதையும் படிக்கலாமே:விரய செலவை குறைக்கும் வாராகி மந்திரம்கேட்பதற்கு மிகவும் எளிமையாக தெரிந்தாலும் இந்த சக்தி வாய்ந்த மந்திர வழிபாட்டை முழுமனதோடு ஒவ்வொரு பஞ்சமி திதி அன்றும் கூறி வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது வாராகி அம்மனின் அருளால் நம்முடைய கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழி உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top