– Advertisement –
அன்றைய காலத்திலேயே நம்முடைய அவ்வை பிராட்டி கொடிது கொடிது வறுமை கொடிது என்று கூறியிருக்கிறார். அந்த வறுமையின் காரணமாக தான் நாம் கடன் என்ற ஒன்றையே வாங்குகிறோம். இப்படி கடனை வாங்கிவிட்டு அந்த கடனை அடைப்பதற்காக மேலும் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டு தவிக்கிறோம். இதனால் வறுமையும் சரியாவது கிடையாது. கடனும் அடையப்போவது கிடையாது. இன்றைய காலத்தில் பலரும் நிம்மதியான வாழ்க்கை வேண்டும் அதுவும் குறிப்பாக கடனற்ற வாழ்க்கை வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் கடனை வாங்கிவிட்டு அந்த கடனை அடைப்பதற்காக வட்டிக்காக அல்லது மாதாந்திர தவணைக்காக தங்களுடைய வருமானத்தை முற்றிலுமாக இழந்து விடுகிறார்கள் என்பதுதான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கடன் அற்ற நிம்மதியான வாழ்க்கையை பெறுவதற்கு ஆஞ்சநேயரை நினைத்து சொல்ல கூடிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் தீர்க்கும் ஹனுமன் மந்திரம்
கடன் என்ற ஒன்று ஒருவருக்கு ஏற்படுகிறது என்றால் அவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் என்பது இருக்கிறது என்று அர்த்தம். செவ்வாய் பகவான் சாதகமற்ற நிலையில் இருந்தால் தான் ஒருவர் கடனை வாங்குவார். அப்படி அவர் கடனை வாங்கி அதை அவரால் அடைக்க முடியவில்லை என்றால் முதலில் நாம் செவ்வாய் பகவானின் தாக்கத்திலிருந்து வெளியே வரவேண்டும். அப்படி வெளியே வரும் பட்சத்தில் தான் நம்மால் கடனை அடைக்க முடியும். அதனால்தான் பலரும் செவ்வாய் பகவானுக்குரிய அதி தேவதையான முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை அன்று வழிபாடு செய்வார்கள். முருகப்பெருமான் எப்படி கலியுக தெய்வமாக திகழ்கிறாரோ அதேபோல் ஆஞ்சநேயரும் கலியுக தெய்வமாக திகழ்கிறார்.
– Advertisement –
இதற்கு முக்கியமான காரணம் ஆஞ்சநேயர் பல யுகங்களாக இந்த பூலோகத்தில் உயிருடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார், அவர் என்றும் சிரஞ்சீவி என்பதுதான். மேலும் அனுமனை நாம் வழிபாடு செய்யும்பொழுது நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும், தாக்கங்களும், தோஷங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய கடன் பிரச்சினை தீர வேண்டும் என்றாலும் நாம் அனுமனை வழிபட வேண்டும். அவரை வழிபடுவதற்குரிய சூட்சுமமான வழிமுறையை தெரிந்து கொள்வோம்.
செவ்வாய் பகவானுக்கு உகந்த கிழமையாக திகழக்கூடியது செவ்வாய்க்கிழமை. கடன் ரீதியான பிரச்சினைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் வழிபாடு செய்ய நினைத்தால் செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்ய வேண்டும். பரிகாரம் செய்வதாக இருந்தாலும் செவ்வாய்க்கிழமை செய்தால் தான் கடன் பிரச்சினை முற்றிலும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதனால் அனுமனை கடன் ரீதியான பிரச்சினைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று வழிபாடு செய்ய வேண்டும்.
– Advertisement –
அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய ஹனுமன் ஆலயத்திற்கு சென்று அவருக்கு துளசியிலை மாலை வாங்கி கொடுத்து நெய் தீபம் ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை அங்கேயே அமர்ந்து 108 முறை உச்சரிக்கலாம். அவ்வாறு உச்சரித்த பிறகு 11 முறை அவரை வலம் வந்து வீட்டிற்கு வந்துவிடலாம். அருகில் ஆஞ்சநேயரின் கோவில் இல்லை என்பவர்கள் தங்களுடைய வீட்டிலேயே இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வீட்டில் இருக்கக் கூடிய ஹனுமன் படத்திற்கோ சிலைக்கோ துளசி இலையை வைத்து அவருக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இந்த மந்திரத்தை 108 முறை மனதார ஆஞ்சநேயரை நினைத்து கூற வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 16 வாரங்கள் கூறலாம். இந்த வழிபாட்டை காலையிலோ, மாலையிலோ எந்த நேரம் உங்களுக்கு வசதியான நேரமாக இருக்குமோ அந்த நேரத்தில் செய்ய வேண்டும். முதல் வாரம் எந்த நேரத்தில் செய்கிறோமோ அதே நேரத்தில் தான் மற்ற வாரங்களில் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
– Advertisement –
மந்திரம்
ஓம் ஹம் ஹனுமதே நமஹ!
இதையும் படிக்கலாமே:மனபாரத்தை நீக்கும் முருகன் மந்திரம்
மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை ஆஞ்சநேயரை மனதார நினைத்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை அன்று கூறுபவர்களுக்கு கடன் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விடும். செவ்வாய் பகவானால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam