இந்த பூலோக வாழ்க்கையை வாழ்வதில் பலவிதமான பிரச்சனைகளை நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதில் பலரும் சந்திக்க கூடிய மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சினை தான். கடன் ஒருவருடைய வாழ்க்கையை சீர்குலைத்து விடும் என்றே கூறலாம். கடனை கொடுத்து இருந்தாலும் சரி அல்லது பிறரிடம் இருந்து கடனை வாங்கி இருந்தாலும் சரி அதை சரியான நேரத்தில் சரியான முறையில் பராமரித்தால் மட்டுமே தான் அதனால் எந்த பிரச்சனைகளும் வராது. ஒருவேளை கொடுத்த இடத்திலிருந்து பணத்தை வாங்க முடியவில்லை என்றாலும் வாங்கிய இடத்திலிருந்து பணத்தை கொடுக்க முடியவில்லை என்றாலும் அதனால் பல விதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.அப்படிப்பட்ட கடன் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய சுக்கிர பிரதோஷமாக தான் இந்த பிரதோஷம் திகழ்கிறது. பொதுவாகவே பிரதோஷம் என்றால் நமக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தையும் நீக்கக்கூடிய நாள் என்று நமக்கு தெரியும். அதனால் இன்றைய நாளில் நாம் சிவபெருமானையும், பார்வதி தேவியையும், நந்தி பகவானையும் நினைத்து முழு மனதோடு வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இருக்கக்கூடிய பணம் தொடர்பான பிரச்சனைகளும், கடன் தொடர்பான பிரச்சனைகளும் முற்றிலும் தீரும் என்று கூறப்படுகிறது. அப்படி கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்வதற்கு, இன்றைய நாளில் நாம் கூற வேண்டிய சிவபெருமானின் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். – Advertisement -கடன் பிரச்சினை தீர்க்கும் மந்திரம்இந்த மந்திர வழிபாட்டை இன்று இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் செய்யலாம். வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து தான் கூற வேண்டும் என்று இல்லை. அதேபோல் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்துவிட்டு தான் கூற வேண்டும் என்றும் இல்லை. நாம் எந்த இடத்தில் இருக்கிறோமோ அந்த இடத்தில் இருந்து கொண்டு முழு மனதோடு சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நந்தி பகவானையும் நினைத்து இந்த மந்திரத்தை கூறினாலே போதும். சிவ அருளால் நம்முடைய கடன் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். இந்த மந்திரத்தை கூறுவதற்கு எந்த வித தடைகளும் கிடையாது. அசைவம் சாப்பிட்டிருந்தாலும் இந்த மந்திரத்தை கூறலாம். இருப்பினும் அசைவம் சாப்பிட்டு இருப்பவர்கள் இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக கை கால்களை சுத்தமாக கழுவி விட்டு பிறகு கூறுவது நல்ல பலனை தரும்.இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நந்தி பகவானையும் நம்முடைய மனக்கண்ணிற்கு கொண்டுவந்து அவர்களிடம் பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும், குறிப்பாக கடன் பிரச்சினைகள் தீர வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை 20 நிமிடம் மனதார கூறவேண்டும். நிறுத்தி நிதானத்துடன் கூற வேண்டும். அவசர அவசரமாக கூறக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மந்திரத்தை 20 நிமிடம் கூறி முடித்த பிறகு திரும்பவும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நந்தி பகவானையும் நினைத்து எப்பொழுதும் எனக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். – Advertisement – மந்திரம்” ஸ்ரீம் ஐயும் கிலியும் நமசிவாய “இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்புடன் வாழ பெருமாள் மந்திரம்சக்தி வாய்ந்த இந்த பீஜாசர மந்திரத்தை முழுமனதோடு இன்று இரவுக்குள் சிவபெருமானை நினைத்து கூறுபவர்களுக்கு சுக்கிர பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்குவதோடு கடன் தொடர்பான பிரச்சனைகளும் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam