கஷ்டங்களை நீக்கும் சரபேஸ்வரர் மந்திரம் | kastangalai neegum sarabeswarar manthiram in tamil

கஷ்டங்களை நீக்கும் சரபேஸ்வரர் மந்திரம் | kastangalai neegum sarabeswarar manthiram in tamil



வாழ்க்கையில் எப்பொழுதும் ஏதாவது ஒரு கஷ்டத்தை அனுபவித்து கொண்டே இருக்கிறோம் அல்லது நோய்களால் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கிறோம் கடன் பிரச்சனை தீராமல் அவதிப்பட்டு கொண்டே இருக்கிறோம் என்று புலம்பக்கூடிய நபர்கள் வழிபாடு செய்வதற்காகவே திகழக்கூடிய தெய்வங்கள்தான் உக்கிர தெய்வங்கள். உக்கிர தெய்வங்களை நாம் வழிபாடு செய்யும்பொழுது எதிரிகளால் நமக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்வதோடு நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களும் விலகும். அப்படிப்பட்ட உக்கிர தெய்வங்களுள் ஒருவராக திகழ்ந்தவர் தான் சரபேஸ்வரர். சரபேஸ்வரரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தீய சக்திகளாக இருந்தாலும், எதிர்மறை ஆற்றலாக இருந்தாலும், கஷ்டங்களாக இருந்தாலும் அவை நீங்கும். அப்படிப்பட்ட சரபேஸ்வரரின் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.கஷ்டங்களை நீக்கும் சரபேஸ்வரர் மந்திரம்நரசிம்மரின் உக்கிரத்தை தணிப்பதற்காக சிவபெருமான் எடுத்த அவதாரமே சரபேஸ்வரர் அவதாரம் என்று கூறப்படுகிறது. இவர் சற்று வித்தியாசமான தோற்றத்தில் இருப்பார். இவருக்கென்று தனியாக ஆலயங்கள் என்பது அந்த அளவிற்கு கிடையாது என்றாலும் சிவாலயங்களில் சரபேஸ்வரரின் உருவம் என்பது தூண்களில் இருக்கும். அதிலும் குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் இருக்கும் குறுங்காலீஸ்வரர் கோவிலில் வெளி மண்டபத்தில் சரபேஸ்வர் உருவம் தூணில் இருக்கிறது. அந்த சரபேஸ்வரருக்கு சிறப்பான அபிஷேக ஆராதனைகள் என்பது நடைபெறும். இயன்றவர்கள் அந்த ஆலயத்திற்கு சென்று சர்வேஸ்வரனை வழிபாடு செய்ய நல்லதொரு மாற்றம் வாழ்க்கையில் உண்டாகும். – Advertisement -சரபேஸ்வரரை வழிபாடு செய்வதற்கு பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்கள் எந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததோ அதேபோல்தான் ஒவ்வொரு வாரத்திலும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய ராகு காலம் என்பது அவருக்கு மிகவும் உகந்த நேரமாக திகழக்கூடியது. இன்றைய நாள் பௌர்ணமி தினத்தோடு சேர்ந்து வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றைய நாளில் நாம் சரபேஸ்வரரை வழிபாடு செய்ய ஆரம்பித்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும். இந்த வழிபாட்டை அருகில் எந்த ஆலயத்தில் சரபேஸ்வரரின் உருவ சிலை இருக்கிறதோ அங்கு சென்று செய்யலாம். ஒருவேளை தங்களுக்கு எங்கு சரபேஸ்வரர் இருக்கிறார் என்று தெரிய வில்லை என்னும் பட்சத்தில் வீட்டிலேயே அவரை நினைத்து மனதார ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்தும் இந்த மந்திர வழிபாட்டை மேற்கொள்ளலாம்.ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்கள் அவருக்கு மலர்களை சாற்றி இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து அவருக்கு முன்பாக அமர்ந்து உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் நினைத்து பார்த்து அது அனைத்தும் நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு பிறகு இந்த மந்திரத்தை கூற வேண்டும். மந்திரத்தை இத்தனை முறைதான் கூற வேண்டும் என்று இல்லை. தங்களால் இயன்ற அளவு தங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் எவ்வளவு விரைவில் தீர வேண்டுமோ அவ்வளவு தூரம் இந்த மந்திரத்தை கூறலாம். – Advertisement – வீட்டில் வழிபாடு செய்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் ஒரு சிறிய தாம்பாள தட்டில் புதிதாக வாங்கிய ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு பானகத்தை நெய்வேத்தியமாக வைத்து மனதார அவரை நினைத்து தீபமேற்றி இந்த மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரம் சரபாஷ்டகத்தின் ஒரு பகுதியாகும்.மந்திரம்” ஹராய பீமாய ஹரிப்ரியாயபவாய சாந்தாய பராத்பராயம்ருடாய ருத்ராய த்ரிலோசனாயநமோஸ்து துப்யம் சரபேச்வராய “ – Advertisement -மந்திரத்தின் பொருள் (சுருக்கமாக):” அழிப்பவரே, பயங்கரமானவரே, நாராயணரின் விருப்பமானவரே!:உலகத்தின் ஆதாரமானவரே, அமைதியானவரே, எல்லாவற்றிற்கும் மேலானவரே!:இன்பம் தருபவரே, ருத்ரனே, மூன்று கண்களை உடையவரே!ஓம் சரபேஸ்வரரே, உங்களுக்கு நமஸ்காரம்! “இதையும் படிக்கலாமே: சந்திர கிரகண சமயத்தில் கூற வேண்டிய மந்திரம்வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களையும் நீக்குவதற்குரிய மன வலிமையை தரக்கூடிய இந்த மந்திரத்தை முழுமனதோடு கூறி கஷ்டங்களில் இருந்து வெளியில் வரலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top