கேட்டதை கொடுக்கும் மகாவிஷ்ணு மந்திரம் | ketathai kodukkum mahavishnu manthiram in tamil

கேட்டதை கொடுக்கும் மகாவிஷ்ணு மந்திரம் | ketathai kodukkum mahavishnu manthiram in tamil



நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தேவைகள் என்று ஒன்று இருக்கும். அந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்காக முயற்சிகளையும் மேற்கொள்வோம். அந்த முயற்சிகள் வெற்றியடைவதற்காக இறைவனை வழிபாடும் செய்வோம். அப்படிப்பட்ட தேவைகள் பூர்த்தியடிவதற்கும், வீட்டிற்குள் மகாலட்சுமி குடியேறவும், தரித்திரமும், கஷ்டங்களும், கவலைகளும் வீட்டை விட்டு வெளியே செல்லவும் தினமும் கூற வேண்டிய மந்திரங்கள் இருக்கின்றன. அந்த மந்திரங்கள் மிகவும் முக்கியமான விஷ்ணு சகஸ்ர நாமத்தில் இருந்து எடுக்கப்பட்ட மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.கேட்டதை கொடுக்கும் மந்திரம்மகாவிஷ்ணுவிற்கு உரிய மந்திரங்கள் பல இருந்தாலும் விஷ்ணு சகஸ்ரநாமம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. யார் ஒருவர் வீட்டில் விஷ்ணு சகஸ்ரநாமம் ஒலிக்கிறதோ அவர்கள் வீட்டில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் நிரந்தரமாக இருந்து அருள் புரிவார்கள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட விஷ்ணு சகஸ்ர நாமத்தை நம் அனைவராலும் எளிதில் பாராயணம் செய்ய முடியாது. அதற்கு பதிலாக ஒரு சில நாமங்களை மட்டும் நாம் உச்சரிப்பதன் மூலம் நமக்கு சில நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் நாம் கேட்டது கிடைப்பதற்கும், கடன், எதிரி, நோய் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கும் கூற வேண்டிய விஷ்ணு சகஸ்ரநாம மந்திரத்தை பற்றி தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம். – Advertisement -விஷ்ணு சகஸ்ர நாமத்தில் மகாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் இடம் பெற்று இருக்கும். அந்த ஆயிரம் நாமங்களில் இருந்து ஐந்தே ஐந்து நாமங்களை மட்டும் தினமும் நாம் பாராயணம் செய்தோம் என்றால் நாம் என்ன நினைத்து மகாவிஷ்ணுவை வழிபாடு செய்கிறோமோ அது நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஐந்து நாமங்களை ஐந்து முறை கூறினால் போதும். இந்த நாமத்தை கூற தொடங்கக்கூடிய நாள் வியாழக்கிழமையாக இருக்க வேண்டும். அதுவும் வளர்பிறை வியாழக்கிழமை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.அன்றைய தினத்தில் காலையில் சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு மகாவிஷ்ணுவிற்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து பின்வரும் இந்த ஐந்து நாமங்களை ஐந்து முறை கூற வேண்டும். பிறகு தினமும் தீபம் ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூறிக் கொண்டே வர வேண்டும். காலையிலும் மாலையிலும் தீபமேற்றி இந்த மந்திரத்தை கூறும் பட்சத்தில் விரைவிலேயே நாம் கேட்டது நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வீட்டில் இருக்கக் கூடிய தரித்திர முற்றிலும் நீங்கி மகாலட்சுமி வீட்டிற்குள் குடியேறுவதற்குரிய ஒரு அற்புதமான மந்திரம் ஆக தான் இந்த மந்திரம் திகழ்கிறது. – Advertisement – நம்முடைய வாழ்நாள் முடியும் வரை பணம் என்பது தேவைப்படும். நம்முடைய முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும் என்று நாம் நினைப்போம். ஏதாவது ஒரு தேவைகள் இருந்து கொண்டே இருக்கும். எந்த தேவையாக இருந்தாலும் அதை மனதில் நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றி வைத்து மகாவிஷ்ணுவை நினைத்து கூறுவதன் மூலம் நாம் கேட்டது கிடைக்கும்.மந்திரம்“ஓம் பூதபவனாய நமஹஓம் ஸம்மிதாய நமஹஓம் ஸ்ரஷ்ட்ரே நமஹ.ஓம் ஸுவீராய நமஹஓம் ப்ரியகிருதே நமஹ”இதையும் படிக்கலாமே: கை நிறைய பணம் சேர கிருத்திகை வழிபாடுவிஷ்ணு சகஸ்ர நாமத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஐந்தே ஐந்து நாமங்களை முழு மனதோடு மகாவிஷ்ணுவை நினைத்து தினமும் கூறுபவர்களுக்கு மகாவிஷ்ணுவின் அருளால் நினைத்தது அனைத்தும் நடக்கும், கேட்டது கிடைக்கும், வெற்றிக்கு மேல் வெற்றி உண்டாகும், மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top