
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வரம் வேண்டும் என்றுதான் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோம். அப்படி நாம் வழிபாடு செய்யக்கூடிய அந்த நேரமானது மிகவும் சிறப்பு மிகுந்த நேரமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக நாம் எந்த தெய்வத்தை வழிபாடு செய்கிறோமோ அந்த தெய்வத்திற்குரிய நாளில் அந்த தெய்வத்திற்குரிய நேரத்தில் நாம் வழிபாடு செய்வதன் மூலம் நாம் கேட்ட வரம் நமக்கு கிடைக்கும் என்றே கூறலாம். அந்த வகையில் சிவபெருமானை வழிபாடு செய்பவர்கள் தவறாமல் இன்று இரவுக்குள் கூற வேண்டிய ஒரு சிவ மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.கேட்ட வரம் கிடைக்க உதவும் மந்திரம்சிவபெருமானை வழிபாடு செய்யக்கூடிய ஒவ்வொரு நபர்களும் பிரதோஷ நாளை தவறவிட மாட்டார்கள். அதிலும் இன்று திங்கட்கிழமையோடு சேர்ந்து சோமவார பிரதோஷமாக திகழ்கிறது. அதனால் இதற்கு இரட்டிப்பு பலன் உண்டு. மேலும் இன்றைய தினம் சிவராத்திரி என்பதால் இன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாட்டின் பலன் நமக்கு மூன்று மடங்கு கிடைக்கும் என்று கூறலாம். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் நாம் கேட்ட வரம் கிடைப்பதற்கு கூற வேண்டிய ஒரு சிவ மந்திரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம். – Advertisement -இந்த சிவ மந்திரத்தை இன்று இரவு 12 மணிக்குள் எப்பொழுது நமக்கு நேரம் கிடைக்கிறதோ அந்த நேரத்தில் கூற வேண்டும். பூஜையறையில் அமர்ந்து தான் கூற வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. எந்த இடத்தில் வேண்டுமானாலும் மனத்தூய்மையுடன் அமர்ந்து கூறினால் போதும். இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக குளிக்க வேண்டும் என்று இல்லை. பெண்கள் தங்களுடைய மாதவிடாய் சமயத்திலும் இந்த மந்திரத்தை கூறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மந்திரத்தை எந்த திசையை பார்த்து வேண்டுமானாலும் கூறலாம் என்பதால் நமக்கு இந்த மந்திரத்தை கூறுவதற்கு எந்த வித தடைகளுமே இருக்காது.நீண்ட நாட்களாக நமக்கு கிடைக்க வேண்டிய ஒரு வரத்தை முழுமனதோடு சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நந்தி பகவானையும் மனதார நினைத்துக் கொண்டு அவர்களிடம் கூற வேண்டும். ஏதாவது ஒரு வரத்தை மட்டும் முன்வைத்து இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். அவ்வாறு கூறி முடித்துவிட்டு கண்களை மூடி மனதார எந்தவித மன சஞ்சலமும் இல்லாமல் “மவசிவ” என்னும் சிவபெருமானுக்குரிய இந்த மந்திரத்தை தொடர்ச்சியாக 10 நிமிடம் கூற வேண்டும். பிறகு திரும்பவும் உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதை சிவபெருமானிடம் முன் வைக்க வேண்டும். இப்படி இன்று இரவுக்குள் நாம் செய்யக்கூடிய இந்த பத்து நிமிட மந்திர வழிபாட்டால் நாம் கேட்ட வரத்தை சிவபெருமான் நமக்கு அருள்வார். – Advertisement – இதையும் படிக்கலாமே: பாதுகாப்பு கவசமாக திகழும் ருத்ர மந்திரம்மிகவும் எளிமையான இந்த நான்கெழுத்து மந்திரத்தை முழு மனதோடு சிவபெருமானை நினைத்துக் கொண்டு இன்று இரவுக்குள் கூறுபவர்களுக்கு அவர்கள் கேட்ட வரம் கேட்டபடி கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam