
ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை இருக்கக்கூடிய மாதங்களை தட்சிணாயன புண்ணிய காலம் என்று கூறுவது உண்டு. இந்த தட்சிணாயன புண்ணிய காலத்தில் அதிக அளவில் ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபடும் வழக்கமும் இருக்கும். ஒவ்வொரு மாதமும் பலவிதமான தெய்வங்களுக்கு சிறப்பு மிகுந்த வழிபாடுகள் நடைபெறும். அந்த வகையில் தட்சிணாயன புண்ணிய காலத்தில் முதல் பிரதோஷமான இன்று சிவபெருமானுக்குரிய அற்புதமான இந்த மந்திரத்தை முழுமனதோடு யார் ஒருவர் கூறி வரம் கேட்கிறார்களோ அவர்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.கேட்ட வரம் கிடைக்க மந்திரம்ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையும் பிரதோஷ நாளும் சேர்ந்து வரக்கூடிய அற்புதமான இன்றைய நாளில் பலரும் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்திருப்போம். ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்தவர்களும் இருப்பார்கள். வீட்டிலிருந்தே வழிபாடு செய்தவர்களும் இருப்பார்கள். ஒரு சிலருக்கு தங்களுடைய சூழ்நிலை காரணமாக ஆலயத்திற்கு செல்ல முடியாமல் இருந்திருக்கும், விரதம் இருந்து வழிபாடு செய்ய முடியாமலும் போயிருக்கும். அப்படிப்பட்டவர்கள் மனதார சிவபெருமானை நினைத்து இந்த ஒரு மந்திரத்தை கூற அவர்களுக்கு கேட்ட வரம் கேட்டபடி கிடைக்கும். – Advertisement -பிரதோஷம் என்பது நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான தோஷங்களையும் கர்ம வினைகளையும் நீக்கக்கூடியது என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பிரதோஷம் கடன் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கும் வல்லமை பெற்றதாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட பிரதோஷ நாளில் பணம் தொடர்பாக நாம் எந்த வரத்தை கேட்டாலும் அந்த வரத்தை சிவபெருமான் அருள்வதற்கு சிவபெருமானுக்குரிய சிறப்பான ஒரு மந்திரம் இருக்கிறது.இந்த மந்திரத்தை கூறுவதற்கு எந்தவித தடைகளும் கிடையாது. பெண்கள் மாதவிடாய் சமயமாக இருந்தாலும் இந்த மந்திரத்தை கூறலாம். அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் இந்த மந்திரத்தை கூறலாம். பிறப்பு தீட்டு இறப்பு தீட்டு போன்ற தீட்டுகளில் இருந்தாலும் இந்த மந்திரத்தை கூறலாம். ஏன் குளிக்கவே இல்லை என்றால் கூட இந்த மந்திரத்தை கூறலாம். முழுமனதோடு சிவபெருமானையும், பார்வதி தேவியையும், நந்தியும் பதியையும் மனதார நினைத்துக் கொண்டு உங்களின் வேண்டுதலை முன்வைத்து இந்த மந்திரத்தை கூறினாலே போதும். இந்த மந்திரத்தை குறைந்தது 10 நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் 20 நிமிடம் வரை கூற வேண்டும். இன்று இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை கூறலாம். எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை கூறலாம். பூஜையறையில் தீபமேற்றி வைத்து தான் கூற வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கட்டுப்பாடும் கிடையாது. – Advertisement – சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட நேரத்தை தான் பிரதோஷம் என்று கூறுகிறோம். ஆலகால விஷயத்தை அவர் உண்டதன் விளைவால் தான் அவருக்கு நீலகண்டர் என்ற பெயரும் வந்தது. இந்த திருநாமத்தை வைத்து தான் நாம் சிவபெருமானின் மந்திரத்தை கூற போகிறோம். பிரதோஷத்திற்கே சிறப்பு வாய்ந்ததாக திகழ்வதுதான் நந்தியம்பதியின் மேல் சிவனும் பார்வதியும் அமர்ந்து வலம் வருவது. அதனால் அந்த சொரூபத்தை மனதில் நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை கூற ஆரம்பிக்க வேண்டும். மந்திரத்தை கூறி முடித்த பிறகு திரும்பவும் இவர்கள் மூவரையும் நினைத்து மனதார நன்றி தெரிவித்து இந்த மந்திர வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.மந்திரம்“ஓம் ஹ்ரீம் நீலகண்டாய நமஹ”இதையும் படிக்கலாமே: ஆடி கிருத்திகை கூற வேண்டிய மந்திரம்பிரதோஷத்திற்கு உரிய இந்த ஒரு மந்திரத்தை இன்று இரவுக்குள் யாரொருவர் முழு மனதோடு சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நந்தியம்பெருமானையும் நினைத்து கூறி வரத்தை கேட்கிறார்களோ அந்த வரம் நிச்சயம் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam