சகல செல்வங்களைப் பெற உதவும் பெருமாள் மந்திரம்

சகல செல்வங்களைப் பெற உதவும் பெருமாள் மந்திரம்



காக்கும் கடவுளாக திகழக் கூடியவர் திருமால் என்று நம் அனைவருக்குமே தெரியும். இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு உயிரினத்தையும் காத்து ரட்சிக்க கூடிய தெய்வமாக தான் பெருமாள் திகழ்கிறார். அதனால் நாம் கண்டிப்பான முறையில் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். பெருமாளை வழிபாடு செய்யும்பொழுது தான் இந்த பூலோக வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் நம்மால் பெற முடியும். அப்படிப்பட்ட பெருமாளை வழிபாடு செய்வதற்குரிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.சகல செல்வங்களைப் பெற மந்திரம்தன்னை முழுமனதோடு நினைத்து வேண்டி வழிபாடு செய்பவர்களுக்கு உடனே காட்சியளித்து அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றக்கூடிய ஒரு அற்புதமான தெய்வமாக தான் பெருமாள் திகழ்கிறார். பெருமாளை பல விதங்களில் பல நாமங்களில் வழிபாடு செய்யும் வழக்கத்தை நாம் வைத்திருக்கிறோம். பெருமாளுக்குரிய மாதமான புரட்டாசி மாதத்திலும் சரி, பெருமாளுக்குரிய கிழமையான சனிக்கிழமை மற்றும் புதன்கிழமையிலும் சரி, பெருமாளை சிறப்பான முறையில் வழிபாடு செய்வோம். அதேபோல் மார்கழி மாதமும் பெருமாளுக்கு உரிய மாதமாகவே கருதப்படுகிறது. இப்படி பெருமாளுக்கு உரிய மாதங்களில் மட்டும் நாம் பெருமாளை வழிபாடு செய்யாமல் அனுதினமும் வழிபாடு செய்யும்பொழுது பெருமானின் அருளை பரிபூரணமாக பெற முடியும். அப்படி பெருமாளின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு உதவக்கூடிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம். – Advertisement -பெருமாளின் 1008 நாமங்களாக விஷ்ணு சகஸ்ரநாமம் திகழ்கிறது. இந்த நாமங்களில் ஏதாவது ஒரு நாமத்தை மட்டும் நாம் தினமும் கூறினாலேயே பெருமாளின் அருளால் வைகுண்ட பதவியை அடைய முடியும் என்று கூறப்படுகிறது. முழு மனதோடு பெருமாளை நினைத்து கூறவேண்டும் என்பது மட்டுமே பெருமாள் விரும்புவது. இருப்பினும் ஒரு சில மந்திரங்கள் பெருமாளை வழிபாடு செய்வதற்கு உகந்த மந்திரமாக கருதப்படுகிறது. இந்த மந்திரங்களை பெருமாளுக்குரிய நாட்களில் ஆரம்பிப்பது என்பது மிகவும் சிறப்பு. குறிப்பாக வளர்பிறை ஏகாதேசி, வளர்பிறை சனிக்கிழமை, வளர்பிறை புதன்கிழமை அல்லது பெருமாளுக்கு உரிய புரட்டாசி மாதம் இப்படிப்பட்ட நாட்களில் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்து இந்த மந்திரத்தை கூற ஆரம்பிக்க வேண்டும்.இந்த மந்திரத்தை தினமும் தொடர்ச்சியாக 108 முறை கூறும் பொழுது விரைவிலேயே பலன்கள் கிடைக்கும். இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கூறுவது என்பது மிகவும் சிறப்பு. ஒரு வேளை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கூற இயலவில்லை என்பவர்கள் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்கு கூறலாம் அல்லது மாலை 6 மணிக்கு மேல் கூறலாம். இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக வீட்டு பூஜை அறையில் பெருமாளுக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு கூறுவது என்பது சிறப்பு. அதே போல் பெருமாளுக்கு நெய்வேத்தியமாக உலர் திராட்சை, கற்கண்டு, பேரிச்சம்பழம் அல்லது ஒரு டம்ளர் தண்ணீர் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்தாவது இந்த மந்திரத்தை கூற வேண்டும். மந்திரத்தை கூறி முடித்த பிறகு நெய்வேத்தியமாக வைத்த பிரசாதத்தை எடுத்து வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் உண்ண வேண்டும். – Advertisement – ஸ்ரீநிவாசர் காயத்ரி மந்திரம்…” ஓம் நிரஞ்சனாய வித்மஹேநிராபாஸாய தீமஹிதந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத் “பொருள்:ஸ்ரீனிவாச பெருமாளே, எனக்கு சிறப்பான அறிவை தந்து, என் உள்ளத்தில் உள்ள இருளை நீக்கி, என் மனதை தெளிவு படுத்த உங்களை நான் மனதார வேண்டுகிறேன். இதையும் படிக்கலாமே:நவராத்திரி நாட்களில் கூற வேண்டிய புவனேஸ்வரி மந்திரம்பெருமாளை நினைத்து இந்த மந்திரத்தை முழு மனதோடு கூறுபவர்களுக்கு பெருமாளின் அருளால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top