சகல சௌபாக்கியத்தை அருளும் விநாயகர் மந்திரம்

சகல சௌபாக்கியத்தை அருளும் விநாயகர் மந்திரம்



விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு அனைத்து கிழமைகளுமே திகழ்கிறது. ஒவ்வொரு கிழமையும் நாம் விநாயகரை வழிபாடு செய்யும்பொழுது ஒவ்வொரு விதமான பலன்களை நம்மால் பெற முடியும். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக சதுர்த்தி திதி திகழ்கிறது. பொதுவாகவே புதன்கிழமை அன்று விநாயகரை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு புத்திசாலித்தனம் என்பது அதிகரிக்கும். அதனால்தான் புதன்கிழமை பிள்ளைகள் விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட புதன்கிழமையோடு சங்கடஹர சதுர்த்தியும் சேர்ந்து வருகிறது. இந்த அற்புதமான நாளில் நாம் மறவாமல் விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்குவதோடு நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான சௌபாக்கியங்களையும் பெற முடியும். அப்படி விநாயகரை வழிபாடு செய்யும்பொழுது அப்படிப்பட்ட சௌபாக்கியங்களை அருளக்கூடிய விநாயகரின் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.விநாயகப் பெருமானுக்கு பலவிதமான உருவங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு வகையான விநாயகரை நாம் வழிபாடு செய்யும்பொழுதும் ஒவ்வொரு விதமான பலன்களை நம்மால் பெற முடியும். வீரகணபதி, பாலகணபதி, சக்தி கணபதி, லக்ஷ்மி கணபதி, மஹா கணபதி, நித்திய கணபதி என்று பலவிதமான கணபதிகள் இருக்கிறார்கள். அதிலும் ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு விதமான கணபதி இருப்பதாகவும் அந்த திதிக்குரிய கணபதியை நாம் வழிபாடு செய்யும்பொழுது அன்றைய நாள் முழுவதும் நமக்கு சிறப்பான நாளாக அமையும் என்றும் கூட கூறுவது உண்டு. இவ்வளவு சிறப்பு வாய்ந்த விநாயகப் பெருமானிடம் அனைத்து விதமான சௌபாக்கியங்களும் கிடைப்பதற்கு ஒரு மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரத்தை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம். – Advertisement -நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ்வதற்கு தேவையான அனைத்து விஷயங்களும் கிடைத்துவிட்டால் நாம் சிறப்பு மிகுந்தவராக திகழ்வோம். அப்படிப்பட்ட அனைத்து விஷயங்களையும் தான் சௌபாக்கியங்கள் என்று கூறுகிறோம். இந்த சௌபாக்கியத்தை பெறுவதற்கு சங்கடஹர சதுர்த்தி நாள் அதிலும் புதன்கிழமையோடு வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த புதன்கிழமையோடு வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளில் இரவு 12 மணிக்குள் நாம் விநாயகர் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.சங்கடஹர சதுர்த்தி வழிபாடு இரவு நேரத்தில் அதாவது நிலவு வானில் தோன்றும் நேரத்தில் செய்வது தான் சிறப்பு. ஏனென்றால் அந்த நேரத்தில் தான் சந்திர பகவான் விநாயகரை வழிபாட்டு அவருடைய சாபத்தை போக்கிக் கொண்டார் என்பதால் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் இரவு நேரத்தில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்துவிட்டு சந்திர தரிசனத்தை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று இரவு 12 மணிக்குள் நாம் விநாயகர் பெருமானின் இந்த ஒரு மந்திரத்தை முழுமனதோடு கூறுவதன் மூலம் நமக்கு அனைத்து விதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும். இந்த மந்திரத்தை கூறுவதற்கு எந்தவித தடைகளும் கிடையாது. அசைவம் சாப்பிட்டிருந்தால் கூட இந்த மந்திரத்தை கூறலாம். இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக முகம் கை கால்களை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும். எந்த திசையை பார்த்து வேண்டுமானாலும் அமர்ந்து கொள்ளலாம். – Advertisement – முதலில் விநாயகப் பெருமானை முழுமனதோடு வழிபாடு செய்து விட்டு பிறகு இந்த மந்திரத்தை 15 நிமிடம் நிறுத்தி நிதானத்துடன் பொறுமையாக கூற வேண்டும். மந்திரத்தை கூறி முடித்த பிறகு விநாயகரை திரும்பவும் வழிபாடு செய்து விட்டு நம்முடைய அன்றாட வேலைகளை செய்யலாம்.மந்திரம்” சௌபாக்ய வல்லபாய ஸ்ரீம் கம் கணபதயே நமஹ “இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை நீக்கும் சரபேஸ்வரர் மந்திரம்நாம் நினைத்த மாத்திரத்தில் நினைத்த நேரத்தில் நினைத்த ரூபத்தில் விநாயகரை வழிபாடு செய்யலாம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த விநாயகரை சங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top