சகல தெய்வங்களையும் வசியம் செய்ய | sagala dheivangalaiyum vasiyam seiya vallipadu in tamil

சகல தெய்வங்களையும் வசியம் செய்ய | sagala dheivangalaiyum vasiyam seiya vallipadu in tamil

Qries

– Advertisement –

நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். கஷ்டமும் துன்பமும் இல்லாத நபர்களே இருக்க மாட்டார்கள். கோடீஸ்வரனாக இருந்தாலும் அவருக்கு ஏதாவது ஒரு கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். அதனால் மன வேதனை என்பது வரத்தான் செய்யும். இந்த கஷ்டங்களையும் துன்பங்களையும் விலக்குவதற்கு தெய்வத்தின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். அதிலும் முக்கியமாக குலதெய்வ அருள் வேண்டும். அதுவே போல் இஷ்ட தெய்வ அருளும் வேண்டும். இவர்களின் அருளோடு சேர்த்து மற்ற தெய்வங்களில் அருளையும் பெறுவதற்காக தான் நாம் ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபாடு செய்வோம். இப்படி நாம் செய்யக்கூடிய பல தெய்வ வழிபாட்டிற்கு ஒரு படி மேலே சென்று அனைத்து தெய்வங்களையும் வசியம் செய்து விட்டோம் என்றால் நம் வாழ்வில் எந்தவித கஷ்டங்களும் நமக்கு வராது என்று கூறலாம்.
இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்தி இருக்கும். அந்த சக்தியின் அடிப்படையில் நமக்கு பலன்களை தருவார்கள். உதாரணமாக அம்மனை வழிபட்டோம் என்றால் நமக்கு தைரியமும் வீரமும் கிடைக்கும். மகாலட்சுமியை வழிபட்டால் செல்வ வளம் பெருகும். சரஸ்வதியை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். இப்படி ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. இவை அனைத்துமே ஒரு சேர பெறுபவருக்கு தான் வாழ்க்கையில் நல்ல நிலை ஏற்படும். அதனால் தான் அனைத்து தெய்வங்களையும் வசியம் செய்யக்கூடிய ஒரு மந்திரத்தைப் பற்றி இந்த மந்திரம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
– Advertisement –

சகல தெய்வங்களையும் வசியம் செய்ய
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான மந்திரங்கள் இருக்கின்றன. அந்த மந்திரங்களை நாம் உச்சாடனம் செய்து அந்த தெய்வத்தை வழிபட்டோம் என்றால் அந்த தெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இப்படி ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனியாக மந்திரத்தை கூறாமல் ஒரே மந்திரத்தை கூறி அனைத்து தெய்வங்களையும் வழிபடுவது என்பது சிறப்பான ஒன்று அல்லவா? அந்த மந்திரத்தின் பலனால் அனைத்து தெய்வங்களும் நமக்கு வசியமாகும். இந்த மந்திரத்தை நாம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கூறுவது என்பது மிகவும் சிறப்பு. அப்படி இல்லாத பட்சத்தில் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் கூறி விட வேண்டும்.
வீட்டில் அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த மந்திரத்தை 12 முறை முழு மனதோடு அனைத்து தெய்வங்களையும் நினைத்து கூற வேண்டும். இப்படி கூறுவதன் மூலம் அனைத்து தெய்வங்களும் நமக்கு வசியமாவார்கள். இவர்கள் நமக்கு வசியமான பிறகு என்ன ஆகும் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்துமே நீங்கும் அல்லவா? ஆம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதோடு எதிரிகள் செய்யக்கூடிய தீய மந்திரங்களின் விளைவுகளும் நம்மை விட்டு ஓடிவிடும்.
– Advertisement –

மந்திரம்
ஓம் ஓங்காராய நமசிவாயஓம் நகாராய நமசிவாயஓம் மகாராய நமசிவாயஓம் சிகாராய நமசிவாயஓம் வகாராய நமசிவாயஓம் யகாராய நமசிவாயஓம் நம ஸ்ரீ குரு தேவாய பரம புருசாயசர்வ தேவதா வசீகனாய சர்வாரிஷ்ட விநாசாயசர்வ துர் மந்திர சேதனாயதிரிலோக்ய வசமானய ஸ்வாஹா!
இதையும் படிக்கலாமே:துரோகிகளையும் எதிரிகளையும் விரட்டி அடிக்க மந்திரம்நிறுத்தி நிதானத்துடன் முழு மனதுடன் எந்தவித மன சஞ்சலமும் இல்லாமல் முழு நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை தினமும் 12 முறை கூறுபவர்களுக்கு, அவர்கள் வாழ்க்கையில் ஏறுமுகம் மட்டுமே இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top