
முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான். காரிய தடைகளை நீக்கி காரிய சித்தியை உண்டாக்குபவர்களாக திகழ்கிறார். அவரை முழுமனதோடு நினைத்து எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அந்த காரியத்தில் தோல்வி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று கூட கூறலாம். மேலும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது இவ்வளவு சிறப்பு வாய்ந்த விநாயகப் பெருமானுக்குரிய மகா சங்கடஹர சதுர்த்தி நாளன்று கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.சக்தி வாய்ந்த மகா மந்திரம்சாதாரணமாக வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தாலேயே விநாயகப் பெருமான் நம்முடைய சங்கடங்களை தீர்ப்பார் என்றால் மகா சங்கடஹர சதுர்த்தி நாளன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் அவர் என்னென்ன பலன்களை நமக்குத் தருவார்? அளவில்லா பலன்களை தருவார் அல்லவா? அதனால் மகா சங்கடஹர சதுர்த்தி நாளை அனைவரும் தவறவிடாமல் தங்களால் இயன்ற அளவு விநாயகப் பெருமானை சிறப்பாக வழிபாடு செய்ய வேண்டும். அப்படி சிறப்பாக வழிபாடு செய்யும்பொழுது கூறவேண்டிய ஒரு மகாமந்திரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம். – Advertisement -விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் பொழுது பலவிதமான மந்திர உச்சாடலை செய்யும் வழக்கத்தை நாம் வைத்திருப்போம். மிகவும் எளிமையான மந்திரமாகவும் இருக்கும் அதே சமயம் சூட்சுமமான மந்திரமாகவும் இருக்கும். எந்த மந்திரத்தை கூறி விநாயகப் பெருமானை வழிபாடு செய்கிறோமோ அந்த மந்திரத்திற்கு உரிய பலனால் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சாதாரணமாக விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கும் என்னும் பட்சத்தில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு மிகுந்த உரித்தான நாளாக கருதப்படக் கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி நாளன்று இந்த ஒரு மந்திரத்தை கூறுபவர்களுக்கு நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நீங்கி அவர்களுடைய தலையெழுத்தை மாறி நல்ல விதமாக மாறும் என்று கூறப்படுகிறது.இந்த மந்திரத்தை ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாம் கூறலாம். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு என்று ஒரு நேரத்தை நாம் வைத்திருப்போம். அந்த நேரத்தில் வழிபாடுகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு இந்த மந்திர வழிபாட்டையும் சேர்த்து செய்யலாம், அல்லது ஏதாவது ஒரு விநாயகர் பெருமாளின் ஆலயத்திற்கு சென்று அங்கும் அமர்ந்து விநாயகப் பெருமானை நினைத்து இந்த மந்திரத்தை கூறலாம் அல்லது வீட்டிலோ அல்லது எந்த இடத்தில் அமைதியாக எந்தவித தொந்தரவும் இல்லாமல் இருப்போம் என்று தோன்றுகிறதோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை கூறலாம். – Advertisement – இந்த மந்திரத்தை நிறுத்தி நிதானத்துடன் 108 முறை கூறவேண்டும். ஆலயத்தில் அமர்ந்து கூறுபவர்கள் தரையில் விரிப்பு விரிக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ அமர்ந்து கூறபவர்கள் கண்டிப்பான முறையில் தரையில் ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் அமர்ந்து கூறுவது என்பது சிறப்பு. முடிந்த அளவிற்கு கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும்.மந்திரம்” ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்கணபதயே வரவரத சர்வ ஜனமேவசமானய ஸ்வாஹா “இதையும் படிக்கலாமே: 0.மிகவும் அற்புதமான அதிசக்தி வாய்ந்த மகா மந்திரமான இந்த மந்திரத்தை முழுமனதோடு விநாயகப் பெருமானை நினைத்து விநாயகப் பெருமானுக்குரிய மகா சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று கூறுபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்காத நல்ல வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam